Thursday, March 8, 2012

பெண்களே ஒன்று கூடுங்கள்! பேசியே முடிவைத் தேடுங்கள்!ம


மகளிர் தினமும் இன்றாமே
மகிழும் நிலையா? அன்றாமே!
புகலும் இன்றும் என்னநிலை
பொய்யர்கள் பேசும் மாயவலை

இடமே தனியே ஒதுக்கீடு
ஏனோ பலப்பல குறுக்கீடு
திடமே இல்லை யாருக்கும்
தினமே சொல்வது பேருக்காம்

எத்தனை ஆண்டுகள் போயிற்று
என்ன நடைமுறை ஆயிற்று
ஒத்த கருத்தும் இல்லையே
உதடு உதிர்ப்பது சொல்லையே

மக்கள் அவையே கூடுவதும்
(ஏ)மாற்றக்  கருத்தைத் தேடுவதும்
வெக்கக் கேடாம் சொன்னாலே
வேதனை வேதனை இந்நாளே

அந்தோ பாபம் இந்நாளை
அறியா மகளிர் தம்நாளை
வெந்தே தானேக் கழிக்கின்றார்
வீணே இறைவனைப் பழிக்கின்றார்

பெண்களே ஒன்று கூடுங்கள்
பேசியே முடிவைத் தேடுங்கள்
ஆண்களை நம்பின் மோசமே
அடைவீர் மேலும் நாசமே

விரைவில் உமக்கெனத் தனிக்கட்சி
விளைந்தால் மாறும் இக்காட்சி
குறையில் அதனைச் செய்வீரே
கொடுமை நீங்கும் உய்வீரே

சாதி வேண்டாம் உம்மிடையே
சமயம் வேண்டாம் உம்மிடையே
பீதி வேண்டாம் உம்மிடையே
பிரிவினை வேண்டாம் உம்மிடையே

நீதி கேட்டே வருகின்றீர்
நியாயம் கேட்டே வருகின்றீர்
வீதியில் இறங்கி நில்லுங்கள்
வெற்றியே முடிவாய்க் கொள்ளுங்கள்

            புலவர் சா இராமாநுசம்




  

39 comments:

  1. நல்ல பாசிடிவ் சிந்தனையான கவிதை நன்றி புலவர் ஐயா!

    ReplyDelete
  2. நல்ல சிந்தனை ஐயா...

    //இடமே தனியே ஒதுக்கீடு
    ஏனோ பலப்பல குறுக்கீடு
    திடமே இல்லை யாருக்கும்
    தினமே சொல்வது பேருக்காம்// எத்தனை எத்தனை இடர்பாடுகள் இதில்.... என்று தான் இவர்கள் மனம் மாறுமோ..

    ReplyDelete
  3. ஆண்களை நம்பின் மோசமே... அடைவீர் மேலும் நாசமே... நம் இனத்தை நீங்களே விட்டுத் தந்துவிட்டீர்களே ஐயா.... மகளிர் திரண்டெழுந்து சங்கம் அமைக்க வேண்டுமென்ற உங்களின் கருத்துக்கு தலைவணங்கி மகளிரை வாழ்த்துகின்றேன். நன்று.

    ReplyDelete
  4. நல்ல ஆலோசனைகள் + சிறப்பான கவிதை! எல்லாம் நிறைவேறும் ஒரு நாளில்.....!!!

    ReplyDelete
  5. எல்லாம் தெளிவா சொல்லிடீங்க..நான் வேற என்ன சொல்ல...?! :)

    உங்களின் ஆதங்கம் வார்த்தைகளில் வெளிப்பட்டுவிட்டது. இனி நாங்கள் தான் புரிந்து(!) நடந்து கொள்ளவேண்டும்.

    அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. ஷைலஜா said...

    வருகை தந்தீர்! வாழ்த்தும் தந்தீர்!நன்றி!புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  7. வெங்கட் நாகராஜ் said...

    வருகை தந்தீர்! வாழ்த்தும் தந்தீர்! நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  8. கணேஷ் said...

    வருகை தந்தீர்! வாழ்த்தும் தந்தீர்! நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  9. ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said...

    வருகை தந்தீர்! வாழ்த்தும் தந்தீர்! நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  10. Kousalya said...

    வருகை தந்தீர்! வாழ்த்தும் தந்தீர்! நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  11. விரைவில் உமக்கெனத் தனிக்கட்சி
    விளைந்தால் மாறும் இக்காட்சி
    குறையில் அதனைச் செய்வீரே
    கொடுமை நீங்கும் உய்வீரே..

    நன்றாக சொன்னீர்கள்.

    ReplyDelete
  12. பெண்களுக்கான நல்ல அறிவுரை.அருமை வாழ்த்துகள்

    ReplyDelete
  13. நல்ல அழகான கவிதை ஜயா

    ReplyDelete
  14. மதுமதி said...

    வருகை தந்தீர்! வாழ்த்தும் தந்தீர்! நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  15. DhanaSekaran .S said...

    வருகை தந்தீர்! வாழ்த்தும் தந்தீர்! நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  16. K.s.s.Rajh said.


    வருகை தந்தீர்! வாழ்த்தும் தந்தீர்! நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  17. ஆஹா..
    ஐயா..
    சரியான யோசனை..
    தனிக்கட்சி தொடங்குதல்...

    எம்குல மாதர் எல்லாம்
    ஒன்றாய் கூடி
    ஓர் தலைமையின் கீழ்
    தனிப் பிரவாகமாய் பாயட்டும் ...

    அருமையான கவிதைக்கு
    சிரம் தாழ்ந்த வணக்கங்கள் ஐயா...

    ReplyDelete
  18. மகேந்திரன் said...

    வருகை தந்தீர்! வாழ்த்தும் தந்தீர்! நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  19. சிறப்பான கவிதை ஐயா...

    ReplyDelete
  20. நாட்டின் கண்களான பெண்களைப் போற்றுவோம்..

    ReplyDelete
  21. கவிதை நன்றாக உள்ளது.

    ReplyDelete
  22. சிறப்பான சிந்தனையைத்தாங்கி வரும் கவிதைi

    ReplyDelete
  23. ரெவெரி said...

    வருகை தந்தீர்! வாழ்த்தும் தந்தீர்! நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  24. guna thamizh said...

    வருகை தந்தீர்! வாழ்த்தும் தந்தீர்! நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  25. AROUNA SELVAME said...

    வருகை தந்தீர்! வாழ்த்தும் தந்தீர்! நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  26. சென்னை பித்தன் said...

    வருகை தந்தீர்! வாழ்த்தும் தந்தீர்! நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  27. ம்ம்ம்....ஆண்களின் குற்றத்தையும் ஏற்றுக்கொண்டு புத்திமதி சொல்லியிருக்கிறீர்கள் !

    ReplyDelete
  28. நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்... வழக்கம் போல் கலக்கல்.. கலக்குங்கள்

    ReplyDelete
  29. வணக்கம் ஐயா!
    சிறப்பான கவிதைக்கு வழ்த்துக்கள் ஐயா..

    ReplyDelete
  30. துரைடேனியல் said

    வருகை தந்தீர்! வாழ்த்தும் தந்தீர்! நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  31. ஹேமா said...

    வருகை தந்தீர்! வாழ்த்தும் தந்தீர்! நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  32. suryajeeva said...

    வருகை தந்தீர்! வாழ்த்தும் தந்தீர்! நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  33. காட்டான் said...

    வருகை தந்தீர்! வாழ்த்தும் தந்தீர்! நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  34. திண்டுக்கல் தனபாலன் said...

    வருகை தந்தீர்! வாழ்த்தும் தந்தீர்! நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  35. ஆண்களை நம்பினால் மோசம் என்று நீங்களே
    சொன்ன பிறகு அதில் வேறு கருத்து இருக்க முடியுமா ?
    ஆனால் நம்பாமலும் இருக்க முடியாது .
    வரையறை வகுப்பதில் தானே பிரச்சனையே ?
    நல்லதொரு பகிர்வு !

    ReplyDelete
  36. ஸாதிகா said...

    வருகை தந்தீர்! அறிவிப்பும் தந்தீர்! நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  37. ஸ்ரவாணி said...

    வருகை தந்தீர்! வாழ்த்தும் தந்தீர்! நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete