Wednesday, March 7, 2012

வரும் வரலாற்றில் பெரியப் புகழ்த்தருமே!


செய்தீர் இதுவரை பாபம்தான்!-இனியும்
   செய்தால் தமிழர் கோபம்தான்!
எய்யும் அம்பென எழுந்திடுமே-நம்
   ஏக இந்தியா விழுந்திடுமே!
பொய்யில்! உண்மை அறிவீரே-ஓட்டு
  போடுவீர் இலங்கைக்கு எதிராக
ஐயா! மத்தியில் ஆள்வோரே-ஈழம்
   அமைந்திட தமிழர் வாழ்வாரே!

ஜெனிவா நாட்டில் கண்டணமே-நாடுகள்
    சேர்ந்து செப்பிட அக்கணமே
துணிவாய் அதனை ஆதரித்து-மேலும்
    துணையாய் இருக்க வேண்டுமென
கனிவாய் தொழுது சொல்லுகின்றோம்-பாபக்
    கழுவாய் இதுவென கொள்கின்றோம்
இனியார் எதுவும் சொன்னாலும்-நீர்
    இதனைச் செய்யின் பழிமாளும்


மூன்றாம் ஆண்டும் ஓடியதே-அங்கே
   முள்ளால் வேலி தோன்றியபின்
சான்றாம் கொடுமைக்கு அளவுண்டா-தினம்
   சாகவும் வாழவும் வழியின்றி
ஈன்றாள் ஈண்டான் இல்லாது-அந்தோ
   எத்தனை குழைந்தைகள்! விழியின்றி
ஒன்றா இரண்டா சொல்வதற்கு-இந்த
   உலகம் உணர்ந்து கொள்வதற்கு



இந்தியக் குடியினர் தமிழினமே-என்ற
    எண்ணம் வைத்தால் உம்மனமே
சிந்திய உதிரம் காய்ந்திடுமே-வெறி
    சிங்களர் கொட்டம் ஓய்திடுமே
நிந்தனை பெற்றது மறைந்துவிடும்-ஏற்ற
   நேரம் இதுவென உணர்ந்துவிடும்
வந்தனை செய்வர் அனைவருமே-வரும்
   வரலாற்றில் பெரியப் புகழ்த்தருமே!

                     புலவர் சா இராமாநுசம்




  

18 comments :

  1. வந்தனை செய்வர் அனைவரும்; வரும் வரலாற்றில் பெரும் புகழ் தரும்! உண்மைதான் ஐயா... நீங்கள் சொல்வது உறைக்க வேண்டியவர்களுக்கு உறைத்தால் நன்மை நிகழும். அந்த எதிர்பார்ப்புடன் காத்திருப்போம்!

    ReplyDelete
  2. மூன்றாம் ஆண்டும் ஓடியதே-அங்கே
    முள்ளால் வேலி தோன்றியபின்
    சான்றாம் கொடுமைக்கு அளவுண்டா-தினம்
    சாகவும் வாழவும் வழியின்றி
    ஈன்றாள் ஈண்டான் இல்லாது-அந்தோ
    எத்தனை குழைந்தைகள்!

    மனம் பதைக்கச் செய்த வலி மிக்க வரிகள்.

    ReplyDelete
  3. கண்டிப்பாக இலங்கைக்கு எதிராக இந்தியா ஓட்டளிக்காது. நாம் சாவதை பற்றி அவர்களுக்கு துளியும் கவலையில்லை.

    அருமைக் கவிதை.

    ReplyDelete
  4. வட மாநில (நேற்றைய) தேர்தல் முடிவுகள் மத்தியில் ஆள்வோருக்கு மக்களின் மனநிலையை ஓரளவிற்கேனும் உணர்த்தியிருக்கும் என எண்ணுகிறேன். ஆட்சியை அல்ல கட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக வேணும் , இலங்கைக்கு எதிராக வாக்களைப்பர் என நம்புவோம்.

    கெஞ்சும் இழிநிலைக்கு ஆளாகிவிட்டது தமிழினம். இந்த நிலையும் மாறும்!

    ReplyDelete
  5. நல்ல கவிதை புலவரே... பார்க்கலாம் என்ன செய்கிறார்கள் என...

    ReplyDelete
  6. எண்ணம் வைத்தால் உம்மனமே
    சிந்திய உதிரம் காய்ந்திடுமே-வெறி
    சிங்களர் கொட்டம் ஓய்திடுமே
    நிந்தனை பெற்றது மறைந்துவிடும்-ஏற்ற
    நேரம் இதுவென உணர்ந்துவிடும்//
    உணர்வார்களா ஐயா .

    ReplyDelete
  7. '''இந்தியக் குடியினர் தமிழினமே-என்ற
    எண்ணம் வைத்தால் உம்மனமே
    சிந்திய உதிரம் காய்ந்திடுமே-வெறி
    சிங்களர் கொட்டம் ஓய்திடுமே''''

    உறைக்கட்டும் உற்றவர்களுக்கு...
    தெளிந்து எழுந்து வரட்டும்....

    ReplyDelete
  8. ரசித்தேன்..நல்ல கவிதை புலவரே...

    ReplyDelete
  9. மறக்கவும் முடியுமா.மறந்தால் நாம் தமிழரா !

    ReplyDelete
  10. கணேஷ் said...

    வருகை தந்தீர்! வாழ்த்தும் தந்தீர்!
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  11. கீதமஞ்சரி said...

    வருகை தந்தீர்! வாழ்த்தும் தந்தீர்!
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  12. DhanaSekaran .S said...


    வருகை தந்தீர்! வாழ்த்தும் தந்தீர்!
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  13. சத்ரியன் said...

    வருகை தந்தீர்! வாழ்த்தும் தந்தீர்!
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  14. வெங்கட் நாகராஜ் said...

    வருகை தந்தீர்! வாழ்த்தும் தந்தீர்!
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  15. சசிகலா said...

    வருகை தந்தீர்! வாழ்த்தும் தந்தீர்!
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  16. மகேந்திரன் said...


    வருகை தந்தீர்! வாழ்த்தும் தந்தீர்!
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  17. ரெவெரி said...

    வருகை தந்தீர்! வாழ்த்தும் தந்தீர்!
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  18. ஹேமா said...


    வருகை தந்தீர்! வாழ்த்தும் தந்தீர்!
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...