Monday, March 5, 2012

மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்...!


மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
தன்னால் இயன்ற உதவிகள் செய்வீர்!
ஏழைகள் என்றும் இன்புடன் வாழவும்
பேழையுள் வைக்கும் பணமது கொண்டும்
அற்றார் அழிபசி தீர்தல் இன்றே
பெற்றான் பொருளை வைப்புழி என்றே
ஐயன் வள்ளுவர் அறைந்தார் அன்றே
பொய்யில்!உண்மை! உணர்வோம் நன்றே!

முன்னோர் உரைத்த முதுமொழி தன்னை
பொன்னே போல போற்றுவோம்! அன்னை
தன்நிகர் இல்லாத் தமிழ்மொழி போற்றி
இன்முகம் காட்டி இன்சொல் சாற்றி
மாற்றார் ஆயினும் மதித்து நடக்கும்
ஆற்றல் கொள்வீர்அன்பால் வெல்வீர்
இயற்கை தன்னின் இயல்பைக் காப்போம்
செயற்கை செய்யும் சிதைவை தடுப்போம்!

நல்லன கண்டு நாளும் செய்வோம்!
அல்லன செய்ய அஞ்சின்! உய்வோம்!
உடுக்கை இழந்தவன் கைபோல் சென்றே
இடுக்கண் களைவது நட்பாம் என்றே
வாழின் வையம் வாழ்த்திடும்! ஆமே!
சூழும் பெருமையும் வந்திடும்! தாமே!
கண்ணியம் கடமை கட்டுப் பாடனென
அண்ணா வழியில் அனைவரும் வாழ்வோம்



இப்படி வாழின் என்றுமே பெருமை
ஒப்பிட இயலா! உரைப்பதோ அருமை!
எப்படி யேனும் வாழ்ந்தால் சரியென
தப்படி வைத்தால் தண்டணை உரியன
அறிவீர்! தெளிவீர்! ஆவன உணர்வீர்!
பெறுவீர் வெற்றி!பேதமை அகற்றி
ஒன்றே செய்யினும் நன்றே செய்க
நன்றே செய்யினும் இன்றே செய்க!

                  புலவர் சா இராமாநுசம்

16 comments :

  1. ஏழைகளின் வறுமை தீர்க்க சொல்லும் மிக அருமையான கவிதை

    ReplyDelete
  2. //ஒன்றே செய்யினும் நன்றே செய்க
    நன்றே செய்யினும் இன்றே செய்க!
    //

    அருமையான கவிதை. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. >>ஒன்றே செய்யினும் நன்றே செய்க
    நன்றே செய்யினும் இன்றே செய்க!

    meththa sari

    ReplyDelete
  4. மனதில் பதித்துக்கொண்டு செயற்படவேண்டிய வரிகள்.நல்லதே செய்வோம் ஐயா !

    ReplyDelete
  5. DhanaSekaran .S said...

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  6. வை.கோபாலகிருஷ்ணன் said...

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  7. சி.பி.செந்தில்குமார் said...

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  8. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  9. ஹேமா said...


    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  10. நல்ல கருத்தினைச் சொல்லும் நற்பா...

    வாழ்த்துகள் புலவரே...

    ReplyDelete
  11. வணக்கம்! “ மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
    தம்புகழ் நிறீஇத் தாமாய்ந் தனரே “ என்ற புறநானூற்றின் விளக்கம் உமது கவிதை.

    ReplyDelete
  12. koodal bala said
    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  13. வெங்கட் நாகராஜ் said...

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  14. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  15. அழகாகச் சொன்னீ்ர்கள் புலவரே

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...