Friday, February 24, 2012

நூலில் வந்துள்ள என்னுடைய முன்னுரை!



             என்னுரை
           ---------------------------------

அன்புடையீர்! வணக்கம்
       இங்கு என்னுரை என்ற தலைப்பின் கீழ் நான் எழுதுவதற்கு அதிகம் ஏதும் இல்லை என்பதே என்னுடைய கருத்தாகும். காரணம் இக் கவிதை நூலே என்னுரையாக, என் உணர்வின் வெளிப்பாடாக அமைந்துள்ளது.
       எனவே, நான் வேண்டுவது, விரும்புவது நீங்கள் இதை
முழுவதும் படிக்க வேண்டும் என்பதுதான்.
      வலையில் வந்தே அலையில் மிதக்கும் கவிதைகள்
என்ற நூலின் தலைப்பே சற்று வித்தியாசமாகத் தோன்றலாம்.
அது பற்றிச் சிறு விளக்கம்.
        இக்கவிதைகள் அனைத்தும், கடந்த ஓராண்டு காலமாக,
கணிணீயில் புலவர் குரல் என்ற வலைப்பூ(blogs) மூலமாக
வந்து, உலகெங்கும் ஏறத்தாழ ஐம்பத்துக்கும் மேற்பட்ட நாடுகளில்
உள்ள தமிழ் அன்பர்கள் படித்தும் பாராட்டியும் உள்ளனர்.
        அவர்களின் எண்ணிக்கை(உள்நாட்டிலும் வெளி நாட்டிலும்) இதுவரை இருபதாயிரத்தை எட்டியுள்ளது.
எப்பொழுது வேண்டுமானாலும் கணிணீ மூலம் இதனைக்
காண முடியும்.
        இனி, என் வணக்கத்திற்கும் நன்றிக்கும் உரியவர்களை
நான் இங்கே குறிப்பிடக் கடமைப் பட்டுள்ளேன்
       நூலுக்கு, அணிந்துரை வழங்கியுள்ள என் அன்புக்குரிய
முனைவர் இரா சனார்தனம் அவர்கட்கும், மேனாள் தஞ்சை. தமிழ்ப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் முனைவர் அவ்வை
நடராசன் அவர்கட்கும்,தமிழகத் தமிழாசிரியர் கழகச் சிறப்புத்
தலைவர் நாவுக்கரசர் புலவர் சு நஞ்சப்பன் அவர்கட்கும் மேலும்
அணிந்துரை வழங்கி நூல் வெளிவர பல வகையிலும் உதவிய,
உடன் பிறவாச் சகோதரர் புலவர் கோ வேள்நம்பி அவர்கட்கும்
அதுபோன்றே அணிந்துரை வழங்கி பிழைத் திருத்தமும் செய்து
உதவிய அன்புத் தம்பி புலவர் ந கருணாநிதி அவர்கட்கும்
என் உளங்கனிந்த நன்றி! என்றும் உரியது
          மேலும் எவ்வித எதிர்பார்ப்புமின்றி முன்வந்து       இந் நூலை அச்சிட்டு  தந்த சீதை பதிப்பக
 உரிமை யாளர் அருமை நண்பர் இராஜசேகர்  அவர்கட்கு
என் உளங்கனிந்த நன்றி! என்றும் உரியது
          எரியும் விளக்கிற்கு தூண்டுகோல் போல
கேள்விக் கணைத் தொடுத்து என் உணர்வைத் தூண்டிய
மருத்துவர் கோபால் அவர்கட்கு என் உளங்கனிந்த நன்றி!
          இக்கவிதை நூல் வெளிவருவதை அறிந்து, எனக்கு,
வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ள, வலையுலக அன்பர்கள்
அனைவருக்கும் என் உளங்கனிந்த நன்றி! என்றும் உரியது.
                    மேலும் புலவர் குரல் என்ற இவ் வலைப்பூவை
உருவாக்கித் தந்ததோடு அது வாழவும் வளரவும் தம்முடைய
உழைப்பை நாள்தோறும் நல்கி வரும் நான் பெற்ற பெண்மக்கள்
இருவருக்கும், அவர்தம் துணைவர்களுக்கும் அவர் பெற்ற பேத்தி
பேரர்களுக்கும் நான் நன்றி தெரிவிக்கக் கடமைப் பட்டுள்ளேன்!

        முடிவாக எனக்குத் துணைவியாக  வந்தவள், தாயாகவும்,
தக்க வழிகாட்டி யாகவும், என் வாழ்வே தன்வாழ்வாகவும், நான்
முன்னேற ஏணியாகவும்,  வாழ்க்கைக் கடலில் கரையேற உற்ற,
தோணியாகவும் இருந்து மறைந்த, என் அன்புத் துணைவியின்
பிறந்த நாள் (பிப்ரவரி-21)நினைவாக, இக்கவிதை நூல் வெளி
வருகிறது எனவும் தெரிவிக்க கடமைப் பட்டுள்ளேன்!

                        வணக்கம்

                  புலவர் சா இராமாநுசம்


         
.
                   

11 comments:

  1. என் அன்புத் துணைவியின்
    பிறந்த நாள் (பிப்ரவரி-21)நினைவாக, இக்கவிதை நூல் வெளி
    வருகிறது எனவும் தெரிவிக்க கடமைப் பட்டுள்ளேன்!//

    சிறப்பான ஆக்கம்...

    ReplyDelete
  2. தங்கள் துணைவியாரின் நினைவு தினத்தில்
    நூல் வெளியாகியது
    சாலச் சிறந்தது ஐயா..

    ReplyDelete
  3. முன்னுரை வாசித்தேன்.விரைவில் நூலை வாங்கிவிடுகிறேன் ஐயா..

    ReplyDelete
  4. வாழ்த்துகள் ஐயா.

    ReplyDelete
  5. மனமார்ந்த வாழ்த்துகள் ஐயா

    ReplyDelete
  6. சிறப்பான முன்னுரை ஐயா.... வாழ்த்துகள்....

    ReplyDelete
  7. மனமார்ந்த வாழ்த்துகள்...

    ReplyDelete
  8. வாழ்த்துகள் ஐயா

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் ஐயா/ இந்த நூலை நாம் எப்படிப் பெறுவது?

    ReplyDelete
  10. ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி said...

    Address:
    கௌரா ஏஜென்ஸீஸ்
    10/14 தோப்பு வெங்கடாசலம் தெரு
    திருவல்லிக்கேணி, சென்னை-5


    Mob: 97907 06548 / 97907 06549
    email: gowra_09@yahoo.in / gowra09@gmail.com


    இம்முகவரியில் தொடர்பு கொண்டால்
    நூல் கிடைக்கும்
    சா இராமாநுசம்

    ReplyDelete