Thursday, February 16, 2012

மீண்டும் அழைக்கிறேன்

மீண்டும் அழைக்கிறேன் வருவீரே-எனக்கு
    மேன்மைப் பெற்றுத் தருவீரே
வேண்டும் உங்கள் வரவுகளே—என்
    வேண்டுதல் உமக்கே உறவுகளே
யாண்டும் பெருமை எமக்காமே-நன்றி
   என்றும் உரியது உமக்காமே
தூண்டும் உளத்தில் எனைமேலும்-நல்
   தூணாய் தாங்கும் எந்நாளும்

இரண்டு மூன்று நாட்கள்தான்-விழா
   இடையில் உள்ள நாட்கள்தான்
திரண்டு வந்தே வாழ்த்துங்கள்-இன்பத்
   தேனாய் மகிழ்வில் ஆழ்த்துங்கள்
மருண்டு கிடக்குது என்மனமே-உற்ற
   மருந்தென வருவீர் அத்தினமே
வரண்ட நிலமெனும் எனமனமே-உம்
   வரவால் என்னுளம் நலம்பெறுமே

                   புலவர் சா இராமாநுசம 




20 comments:

  1. வாழ்த்துகள் புலவரே....

    சென்னையில் இருந்தால் வந்திருப்பேன்...

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் அண்ணே

    ReplyDelete
  3. ஐயா,

    நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் ஐயா .விழா சிறப்பாக நடைபெறட்டும்.

    ReplyDelete
  5. நேரில் வாழ்த்த முடியும் என நம்புகிறேன் ஐயா.

    ReplyDelete
  6. Ayya vanakkam Nool veliyeedu sirappura nadaipera
    enadhu pirarththanaikalum vaazhththukkalum

    Endrum ungalin thamizhthambi,singapore

    ReplyDelete
  7. விழா சிறக்க நல்வாழ்த்துக்கள். நான் அவசியம் கலந்து கொள்கிறேன் புலவரையா...

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் sir

    ReplyDelete
  9. \\மருண்டு கிடக்குது என்மனமே-உற்ற
    மருந்தென வருவீர் அத்தினமே\\

    மருளவேண்டாம் ஐயா. யாவும் நலமாய் நடக்கும். என் மனம் நிறைந்த வாழ்த்தும் பாராட்டும் தங்களுக்கு.

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  11. விழா சிறக்க வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  12. மேலும் மேலும் இது போல் பல விழாக்கள் காண வாழ்த்துக்கள் ஐயா!!

    ReplyDelete
  13. இது போல் பல விழாக்கள் காண வாழ்த்துக்கள் ஐயா!!

    ReplyDelete
  14. என்னை வாசிகள் கொடுத்துவைத்தவர்கள்
    அங்கு இல்லையே என ஏக்கமாக உள்ளது
    விழா சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. வணக்கம் ஐயா,

    நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. வாழ்த்துக்கள்..

    http://anubhudhi.blogspot.in/

    ReplyDelete
  17. உங்களின் நூல் வெளியீட்டு விழ சிறப்படைய எனது பணிவான வாழ்த்துகளும் வணக்கங்களும் தழினம் விழிக்கட்டும் ...

    ReplyDelete