அள்ளவரும் நீரலவே காதல்!-அதை
அறியாது, இருவருமே சாதல்!
எள்ளுகின்ற நிலைதானே தருமே-மேலும்
என்றென்றும் பழிதானே வருமே
உள்ளமதில் உறுதியுடன் நின்றே-காதல்
உண்மையாக எதிர்தாலும் வென்றே
வெள்ளமதில் எதிர்நீச்சல் போன்றே-நீர்
வீறுகெளல் வெற்றிக்குச் சான்றே!
உண்மைக்கு அழிவென்றும் வாரா-காதல்
உள்ளங்கள் பேதங்கள் பாரா!
பெண்மைக்கு சிலசில குணமே-அவள்
பெருமைக்கு வேண்டுவ மணமே!
ஆண்மைக்கு ஆசையே தூண்டும்-அதை
அடக்கியே நடந்திட வேண்டும்!
மேன்மையும் வந்திடும் அதனால்-காதல்
மேலும் பொலிவுறும் இதனால்
ஒருவரை ஒருவரும் உணர்வீர்- பின்
உள்ளத்தில் காதலும் கொள்வீர்!
இருவரின் மனமது ஒன்றுபட-எவர்
எதிர்ப்புமே முற்றிலும் தவிடுபட
உருவத்தின் அழகொன்றே போதா-ஒத்த
உணர்வு இன்றெனில் ஆகா
பருவத்தில் தெளிவாக சிந்திப்பீர்!-பின்
பட்டாலே துன்பத்தில் நிந்திப்பீர்!
புலவர் சா இராமாநுசம்
வணக்கம் ஐயா,
ReplyDeleteநல்லா இருக்கீங்களா?
இதில ஒரு "ல்” எழுத்தை தவற விட்டிட்டீங்க.
அள்ளவரும் நீரலவே காதல்!-அதை
காதலர் இருவர் கருத்தொருமித்து செய்யும் காதலைப் பற்றிப் பேசி நிற்பதோடு, கொஞ்சம் வழி தவறின் துன்பம் எனவும் சொல்லி நிற்கிறது இக் கவிதை.
ReplyDeleteசிறுசுகளுக்கு நல்ல அட்வைஸ் ஐயா !
ReplyDeleteநல்ல கவிதை ஐய்யா
ReplyDeleteசிறந்த அறிவுரைகள்
நன்றி ஐயா
தெளிவான சிந்தித்தால் வாழ்க்கை ஆனந்தம்தான்...
ReplyDeleteமனமது ஒன்றுபட்டால்
ReplyDeleteமந்திரங்கள் தேவையில்லை..
காதல் என்ற உணர்வை
காம உணர்ச்சி இல்லாது நெஞ்சில்
வஞ்சமில்லாது ஏற்றிவிட்டால்
காதல் இனிக்கும்...
அருமையான காதலர் தின கவிதை ஐயா.
அருமையான கவிதை
ReplyDeleteஉங்களுக்கு எனது இடுகையில் விருது இருக்கிறது .
பருவத்தில் தெளிவாக சிந்திப்பீர்!-பின்
ReplyDeleteபட்டாலே துன்பத்தில் நிந்திப்பீர்!
அழகாகச் சொன்னீர்கள் புலவரே
/ஒருவரை ஒருவரும் உணர்வீர்- பின்
ReplyDeleteஉள்ளத்தில் காதலும் கொள்வீர்!
இருவரின் மனமது ஒன்றுபட-எவர்
எதிர்ப்புமே முற்றிலும் தவிடுபட//
அருமையான வரிகள்
//உருவத்தின் அழகொன்றே போதா-ஒத்த
ReplyDeleteஉணர்வு இன்றெனில் ஆகா
பருவத்தில் தெளிவாக சிந்திப்பீர்!-பின்
பட்டாலே துன்பத்தில் நிந்திப்பீர்!//
அருமை ஐயா!
உருவத்தின் அழகொன்றே போதா-ஒத்த
ReplyDeleteஉணர்வு இன்றெனில்
இன்றைய காதலர்கள் அறியவேண்டிய
மந்திரச் சொல் இது
பகிர்வுக்கு நன்றி
Tha.ma 8
ReplyDeleteநல்லதொரு காதலர் தின கவிதை.
ReplyDeleteவாழ்த்துகள் ஐயா!.
காதலர் தினத்தில் கலக்கல் கவிதை
ReplyDelete//ஒருவரை ஒருவரும் உணர்வீர்- பின்
ReplyDeleteஉள்ளத்தில் காதலும் கொள்வீர்!//சிறப்பான வரிகள் அன்பரே
காதலர் தினத்திற்கான சிறப்பு கவிதை சிறப்பாகவே இருக்கிறது புலவரே.....
ReplyDeleteவாழ்த்துகள்....
நிரூபன் said...
ReplyDeleteநிரூ!
அங்கே, ல் போட்டால் ஓசை தட்டும்.
நீர்+அலவே=நீரலவே. அல்லவே என்பது அலவே
என்பது, சொல் வழக்கு!
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
நிரூபன் said...
ReplyDeleteவரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
koodal bala said...
ReplyDeleteவரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
அ .செய்யது அலி said...
ReplyDeleteவரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
கவிதை வீதி... // சௌந்தர் // said
ReplyDeleteவரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
மகேந்திரன் said...
ReplyDeleteவரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
மாலதி said...
ReplyDeleteவரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
guna thamizh said...
ReplyDeleteவரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
என் ராஜபாட்டை"- ராஜா said
ReplyDeleteவரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
Ramani said...
ReplyDeleteவரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
Ramani said...
ReplyDeleteவாக்கிட்டீர்!நன்றி!
புலவர் சா இராமாநுசம்
தோழன் மபா, தமிழன் வீதி said...
ReplyDeleteவரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
KANA VARO said...
ReplyDeleteவரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
பிரேம்.சி said...
ReplyDeleteவரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
வெங்கட் நாகராஜ் said...
ReplyDeleteவரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
சென்னை பித்தன் said
ReplyDeleteசென்னை பித்தன் said
சென்னை பித்தன் said
ReplyDeleteவரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
காதல் வாழ்த்துகள் ஐயா.எங்கும் எதிலும் காதல் கொள்வோம் !
ReplyDelete