குருடாகிப் போகவில்லை சர்வதேசம்-அதை
குருடாக செய்ததுவே நமதுதேசம் !
திருநாடாய் தனிஈழம் மலரும்நேரம்-சிங்கள
திருடருக்கே துணையாக நெஞ்சில்ஈரம்
ஒருநாளும் அணுவளவும் இன்றிநாமே-வலிய
ஓடிப்போய் உதவிகளை செய்ததாமே!
வருநாளில் வரலாறும் காணுமிதனை-கண்ணில்
வரநீரும் காரணமே கையாமதன்னை!
எண்ணுங்கள் எவராலே ஈழநாசம்-அங்கே
ஏற்படவும் காரணமா சர்வதேசம்!
மண்ணுள்ளே குவியலென மனிதவுடலை-மூடி
மறைக்கின்ற படம்வந்தும் துயரப்படலே
கண்ணுள்ளே பட்டாலும கைகள்மூட-தமிழன்
கல்நெஞ்சம் கொண்டானே இதயம்மூட
இங்கே
எண்ணுங்கள் என்செய்யும் சர்வதேசம்-இந்த
இழிநிலைக்குக் காரணமே நமதுதேசம்
புலவர் சா இராமாநுசம்
எண்ணுங்கள் என்செய்யும் சர்வதேசம்-இந்த
ReplyDeleteஇழிநிலைக்குக் காரணமே நமதுதேசம் //mikavum sirappu
சிந்திக்கும் விதமாகச் சொன்னீர்கள் புலவரே
ReplyDeleteகவிதைக்கான தலைப்பும், கவிதையும் மிகச்சிறப்பு ஐயா! உணர்வுகள் பெருகச் செய்யும் அழகிய சந்தங்கள்!
ReplyDeleteவேதனையான கவிதை.
ReplyDeleteகல்நெஞ்சம் கொண்டானே இதயம்மூட
ReplyDeleteஇங்கே ...
உண்மைதான் ஐயா.
ஈழத்து வேதனைகள் உங்கள் கவிதை மூலம் கொணர்வதற்கு நன்றி ஐயா. உங்கள் பணிதொடரட்டும். குருடாய் போன சர்வதேசத்தின் கண்கள.... கல்லாகிப் பொன உங்கள் நாட்டு இதயம். இன்றும் அழுது கொண்டே வாழ்கின்றோம் எம் இன் உயிர் தமிழீழத்தில் அகதியாய் அநாதையாய் அடிமையாய்.
ReplyDeleteமன வேதனையை அப்படியே
ReplyDeleteஉருக்கமாக கவியாக்கி இருக்கிறீர்கள்
புலவரே.
எண்ணுங்கள் என்செய்யும் சர்வதேசம்-இந்த
ReplyDeleteஇழிநிலைக்குக் காரணமே நமதுதேசம்
ஒரு வாசகம் என்றாலும் திருவாசகம்
மனம் கொண்ட ஆற்றாமை இங்கே அதிரும் கவி வடிவாய். மிகவும் வேதனையாக உள்ளது ஐயா.
ReplyDeleteகவிதை அழுகிறது கேட்க ஆளில்லை அதான் சர்வதேசம் மனித நேசம்
ReplyDeleteநன்றி ஐயா!
ReplyDeleteமாலதி said...
ReplyDeleteஇன்றும் என்றும் நன்றி! நன்றி!
புலவர் சா இராமாநுசம்
guna thamizh said...
ReplyDeleteஇன்றும் என்றும் நன்றி! நன்றி!
புலவர் சா இராமாநுசம்
ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி
ReplyDeleteஇன்றும் என்றும் நன்றி! நன்றி!
புலவர் சா இராமாநுசம்
Rathnavel Natarajan said...
ReplyDeleteஇன்றும் என்றும் நன்றி! நன்றி!
புலவர் சா இராமாநுசம்
sasikala said...
ReplyDeleteஇன்றும் என்றும் நன்றி! நன்றி!
புலவர் சா இராமாநுசம்
சத்தியா said...
ReplyDeleteஇன்றும் என்றும் நன்றி! நன்றி!
புலவர் சா இராமாநுசம்
மகேந்திரன் said...
ReplyDeleteஇன்றும் என்றும் நன்றி! நன்றி!
புலவர் சா இராமாநுசம்
Ramani said...
ReplyDeleteஇன்றும் என்றும் நன்றி! நன்றி!
புலவர் சா இராமாநுசம்
Ramani said...
ReplyDeleteஓட்டுக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
கீதமஞ்சரி said...
ReplyDeleteஇன்றும் என்றும் நன்றி! நன்றி!
புலவர் சா இராமாநுசம்
dhanasekaran .S said...
ReplyDeleteஇன்றும் என்றும் நன்றி! நன்றி!
புலவர் சா இராமாநுசம்
காட்டான் said
ReplyDeleteஇன்றும் என்றும் நன்றி! நன்றி!
புலவர் சா இராமாநுசம்
தங்கள் கவிதையைப் படித்ததும் ஏனோ வலிக்கிறது. இதில் நாமும் மறைமுக குற்றவாளிகளாகிவிட்டோமே என்று..
ReplyDeleteபகிர்வுக்கு மிக்க நன்றி..
http://anubhudhi.blogspot.in/