தொலைந்தது மீண்டும் வந்ததுவே-கனவில்
தொல்லையா இன்பம் தந்ததுவே
கலைந்தது அந்தோ தூக்கம்தான்-அவளை
கண்முன காணா ஏக்கந்தான்
விளைந்தது மீண்டும் கனவுவர-அவள்
விட்டுச் சென்றதை நினவுதர
அலைந்தது அந்தோ மனம்வீணே-முக
அழகில் காண்பது மிகநாணே
என்னுள் அவளே இருந்தாலும்-நல்
இருவிழி தந்திடும் மருந்தாலும்
பொன்னுள் பதித்த மணிபோல-தினம்
புலம்பும் நெஞ்சின் பிணிமாள
மன்னும் உயிரும் உடலோடு-அவள
மறுத்தால வாழ்வே சுடுகாடே
இன்னும எதறகோ நடிக்கின்றாள்-தன்
இதயம் திறக்க மறுக்கின்றாள்
எத்தனை காலம் ஆனாலும்-என்
இளமை அழிந்து போனாலும்
சித்தமே சற்றும கலங்காது-விருப்பம்
செப்பிடும் வரையில் தூங்காது
இத்தரை தன்னில் வாழ்ந்திடுவேன்-நான்
இறுதியில் ஒருநாள் விழ்ந்திடுவேன்
பத்தரைப் பொன்னே நீவருவாய்-தீரா
பழியும் வருமே வாய்திறவாய்
புலவர் சா இராமாநுசம்
தொல்லையா இன்பம் தந்ததுவே
கலைந்தது அந்தோ தூக்கம்தான்-அவளை
கண்முன காணா ஏக்கந்தான்
விளைந்தது மீண்டும் கனவுவர-அவள்
விட்டுச் சென்றதை நினவுதர
அலைந்தது அந்தோ மனம்வீணே-முக
அழகில் காண்பது மிகநாணே
என்னுள் அவளே இருந்தாலும்-நல்
இருவிழி தந்திடும் மருந்தாலும்
பொன்னுள் பதித்த மணிபோல-தினம்
புலம்பும் நெஞ்சின் பிணிமாள
மன்னும் உயிரும் உடலோடு-அவள
மறுத்தால வாழ்வே சுடுகாடே
இன்னும எதறகோ நடிக்கின்றாள்-தன்
இதயம் திறக்க மறுக்கின்றாள்
எத்தனை காலம் ஆனாலும்-என்
இளமை அழிந்து போனாலும்
சித்தமே சற்றும கலங்காது-விருப்பம்
செப்பிடும் வரையில் தூங்காது
இத்தரை தன்னில் வாழ்ந்திடுவேன்-நான்
இறுதியில் ஒருநாள் விழ்ந்திடுவேன்
பத்தரைப் பொன்னே நீவருவாய்-தீரா
பழியும் வருமே வாய்திறவாய்
புலவர் சா இராமாநுசம்
''..சித்தமே சற்றும கலங்காது-விருப்பம்
ReplyDeleteசெப்பிடும் வரையில் தூங்காது
இத்தரை தன்னில் வாழ்ந்திடுவேன்-நான்...''
மிகவும் அழுத்தமான நேசமே!
மரபுச் சுரப்பு தாங்களிதில்
பிரபு தான் என்றும்!
வாழ்க!..வாழ்கவே!..
இறையருள் கிட்டட்டும்!
வேதா. இலங்காதிலகம்.
////எத்தனை காலம் ஆனாலும்-என்
ReplyDeleteஇளமை அழிந்து போனாலும்
சித்தமே சற்றும கலங்காது-விருப்பம்
செப்பிடும் வரையில் தூங்காது
இத்தரை தன்னில் வாழ்ந்திடுவேன்-நான்
இறுதியில் ஒருநாள் விழ்ந்திடுவேன் ////
மனதை வருடிய வரிகள் ஜயா
பிரிவின் வலியை சொல்லும் கவிதை
அழகு.. அழகு....
ReplyDeleteவருடலுடன்...
மனம் நெகிழச்செய்யும் சீர்மிகுக் கவிதைக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் ஐயா. வாசிக்க வாசிக்க உள்ளம் உருகுவது உண்மை.
ReplyDeleteஇள மனது !
ReplyDeleteதென்றல் தீண்டிப் போனது போல இதமாய் மனதை வருடிச் சென்றது கவிதை. அருமை.
ReplyDeleteஎத்தனை காலம் ஆனாலும்-என்
ReplyDeleteஇளமை அழிந்து போனாலும்
சித்தமே சற்றும கலங்காது-விருப்பம்
செப்பிடும் வரையில் தூங்காது
அருமைக் கவிதை வாழ்த்துகள்
kovaikkavi said
ReplyDeleteதங்கள் வருகைக்கு நன்றி!
புலவர் சா இராமாநுசம்
K.s.s.Rajh said...
ReplyDeleteதங்கள் வருகைக்கு நன்றி!
புலவர் சா இராமாநுசம்
கவிதை வீதி... // சௌந்தர் // said...
ReplyDeleteதங்கள் வருகைக்கு நன்றி!
புலவர் சா இராமாநுசம்
கீதமஞ்சரி said...
ReplyDeleteதங்கள் வருகைக்கு நன்றி!
புலவர் சா இராமாநுசம்
koodal bala said...
ReplyDeleteதங்கள் வருகைக்கு நன்றி!
புலவர் சா இராமாநுசம்
கணேஷ் said...
ReplyDeleteதங்கள் வருகைக்கு நன்றி!
புலவர் சா இராமாநுசம்
dhanasekaran .S said...
ReplyDeleteதங்கள் வருகைக்கு நன்றி!
புலவர் சா இராமாநுசம்
உடல் தொட்டுப் போகும் இனிய தென்றல் போல்
ReplyDeleteமனம் தொட்டுப் போகும் அழகிய கவிதை
பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
சுகமான ஒரு கவிதை...உங்களுக்கு வயது இறங்கிக் கொண்டே போகிறது...
ReplyDeleteஅழகான கவிதை வரிகள்
ReplyDeleteகவிதை நன்றாகவுள்ளது புலவரே..
ReplyDeleteஉங்கள் மனம் இன்னும் இளமையாகத்தான் ஐயா.இல்லாவிட்டால் இப்படிக் காதலால் உருகமுடியுமா !
ReplyDeleteகொஞ்ச நாள் கழித்துவந்தேன். அற்புதமான கவிதைகளைக் கண்டேன். மிக அருமை. நலம்தானே ஐயா! தங்கள் பணி வாழ்க!
ReplyDeleteகவிஞன் கற்பனையில் கவி படைக்கிறான். கவிதைக்குப் பொய்யழகு என்பர். கவிஞன் கவி எழுதும்போது குழந்தையாகிறான். தாயாகிறான். ஆசானாகிறான். காதலனாகிறான். காதலியாகிறான். அரசனாகிறான். ஏன் ஆண்டவன்போலவும் தன்னைக் கற்பனை செய்கிறான்.
ReplyDeleteஅதனால் இளமை ததும்பும் கவிதைகளும் அவனால் படைக்க முடிகிறது என்பதற்கு தாங்கள் கவிதை உதாரணம்!