எதையும் தாங்குவோம் எத்தனை நாளே
எண்ணிப் பாரீர் தாங்குமா தோளே
உதையும படுவார் மீனவர் நாளும்
உயிர்பலி ஆவார் பட்டியல் நீளும்
சதையும் கிழிந்திட சிந்துவார் இரத்தம்
சகிப்பதா நம்மவர் நடந்திட நித்தம்
வதையும் அன்னவர் வாழ்ந்திட மீண்டும்
வழங்கிய தீவை மீட்டிட வேண்டும்
கச்சத் தீவை கயவர்கள் கையில்
காரண மின்றி கொடுத்த வகையில்
அச்ச மற்றவர் ஆணவச் செயலில்
ஆடும் ஆட்டம் சொல்லிப் பயனில்
துச்சம் அவரென துரத்துவோம் இன்றே
துடிப்புடன் அனைவரும் சேர்ந்திடின் ஒன்றே
மிச்சம் இன்ற அனைவரும ஓட
மீனவர் வாழ்வில் மேன்மையும் நாட
புலவர் சாஇராமாநுசம்
எதையும் தாங்கும் இதயமென
ReplyDeleteபதமாய் சொல்லிவிட்டு
நீ மட்டும் தாங்கு என
சொல்வது எங்கனம் ....
மீனவர் வாழ்வில் நல்லதொரு
விடியல் வந்து சேரட்டும்...
அருமையான கவிதை ஐயா..
மீனவர் துன்பம் சொல்லி மாளாது. கச்சத்தீவினைக் கைக்கொண்டால் மட்டுமே அவர் இன்னல் தீரும். மன வேதனை பிரதிபலித்தக் கவிதை அருமை ஐயா.
ReplyDelete-மகேந்திரன் said
ReplyDeleteநன்றி மகி!
புலவர் சா இராமாநுசம்
கீதமஞ்சரி said...
ReplyDeleteநன்றி சகோதரி!
புலவர் சா இராமாநுசம்
கச்சத் தீவை கயவர்கள் கையில்
ReplyDeleteகாரண மின்றி கொடுத்த வகையில்
அச்ச மற்றவர் ஆணவச் செயலில்
ஆடும் ஆட்டம் சொல்லிப் பயனில்
unmai aiya..
arumai ..:)
நல்ல கவிதை ஐயா!
ReplyDeletejayaram thinagarapandian said
ReplyDeleteநன்றி நண்பரே!
புலவர் சா இராமாநுசம்
koodal bala said...
ReplyDeleteநன்றி நண்பரே!
புலவர் சா இராமாநுசம்
இனிய இரவு வணக்கம் ஐயா
ReplyDeleteமுதலில் தாங்கள் புதிய முகவரியில் வலை எழுத ஆரம்பித்திருப்பதற்கு சிறியேனின் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
கயவர்கள் கையில் கச்சதீவினைக் கொடுத்ததனால் கண்ணீரோடு தம் வாழ்வைக் கழிக்கும் மீனவர்களின் பரிதாப நிலையினை இக் கவி சொல்லி நிற்கிறது.
ReplyDeleteகாலம் ஓர் நாள் மாறும் என நம்பியிருப்போம்.
தங்களுடைய கவிதைகள் எழுச்சிக் கவிதைகளாக அமைந்திருப்பது பாராட்டத் தக்கது. உங்கள் மரபுக் கவிதைகளால் எங்களை வசப்படுத்திவிட்டீர்கள்
ReplyDeleteநிச்சயம் இதற்கு ஓர் தீர்வு கண்டே ஆகவேண்டும் புலவர் ஐயா!. நல்ல கவிதை. அருமை.
ReplyDeleteதமஓ 5.
ReplyDeleteபுது டொமைன் பெற்று எழுதுவதற்கு முதலில் என் வாழ்த்துக்கள் அய்யா.
ReplyDelete