கூகுல் செய்வது பெரும்சேவை-ஏனோ
கொடுத்தார் நமக்கே மனநோவை
போகும் டாட்காம் என்றேனும்-இன்
புகுந்திடும் பதிலாய் என்றேனும்
ஆகும் என்றே ஒருசெய்(தீ)தி-முன்பே
அறிந்தால் வருமா இப்பீதி
வேகும் நெஞ்சும் இதனாலே-நம்
வேதனை நீங்குதல் எதனாலே
காலையில் எழுந்ததும் இம்மாற்றம்-கண்
கண்டது! கொண்டது! ஏமாற்றம்!
மாலை வரையிலும் புரியவில்லை-இதை
மாற்றிய காரணம் தெரியவில்லை
சாலையின் குறுக்கே மாமரமே-புயல்
சாய்த்தது போல துயர்தருமே
ஆலையில் பட்ட கரும்பானோம்-கடல்
அலையில் வீழ்ந்த துரும்பானோம்
ஐயா கூகுல் ஐயாவே-துன்பம்
அடைந்தார் பலரும் ஐயாவே
பொய்யா ! இல்லை வலையுலகே-இப்
புலம்பல் ஒலிக்கும் நிலையுளதே
செய்யா தவறுக்கு தண்டணையா-என
சிந்தையில் வருத்தம் கொண்டய்யா
மெய்யா இன்றுள நிலைதானே-இதனை
மேலும் விளக்கிட இலைதானே!
புலவர் சா இராமாநுசம்
கூகுளின் அதிரடி மாற்றம் பற்றி நல்ல கவிதை அருமையாக இருக்கு
ReplyDeleteகூகுளை கில்லிய விதம் மிக மிக அருமை ஐயா !!
ReplyDeleteவாழ்த்துகள்
K.s.s.Rajh said...
ReplyDeleteநன்றி நண்பரே!
என் வலையின் புதிய முகவரி;-
http://www.pulavarkural.info/2012/02/blog-post.html#comment-form
புலவர் சா இராமாநுசம்
ஐயா... கூகுளுக்கு இந்த கவிதை புரியுமா?
ReplyDeleteகூகுள் மாற்றம் நமக்கு ஏமாற்றம் தான் ஐயா.
கூகிளின் மாற்றங்கள் அடிக்கடி
ReplyDeleteஏற்படும் ஒன்று. ஆனால் நம்மை
இப்போது ஏற்படும் மாற்றங்கள் மிகுந்த
இன்னல்களுக்கு உண்டாக்கி உள்ளது.
அழகான அறிவுரைக் கவிதைக்கு
நன்றிகள் புலவர் பெருந்தகையே...
நல்ல கவிதை...சில அரசின் கட்டுப்பாடுகள் காரணமாக இந்த மாற்றம் செய்யப்பட்டு உள்ளது....
ReplyDelete.blogspot.com என்பது .blogspot.in என்று மாறிவிட்டது....
ம்...நிச்சயம் அவர்களும் அறிந்திருப்பார்கள்.ஆவன செய்வார்களா !
ReplyDeleteநல்ல கவிதை ஐயா ! மாற்றம் எத்தனை வந்தாலும் அனைவரும் பயன் அடையுமாறு இருந்தால் நன்றாக இருக்கும் !
ReplyDeleteகூகுள் குழப்பத்துக்கும் கவி வடித்தத் திறன் கண்டு வியக்கிறேன். பாராட்டுகள் ஐயா. விரைவில் குழப்பம் தீருமென்று நம்புவோம்.
ReplyDeleteநல்ல கவிதை ஐயா.. என்ன செய்ய ககுலை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது நம்மலாள்
ReplyDeleteஎல்லாம் நன்மைக்கே. குழப்பத்திலும் ஓர் நன்மை. தங்களிடமிருந்து ஓர் அருமையான அனுபவக்கவிதை பிறக்கக் காரணமாகி விட்டது. ;)
ReplyDeleteவணக்கம்!
ReplyDelete//கூகுல் செய்வது பெரும்சேவை-ஏனோ
கொடுத்தார் நமக்கே மனநோவை//
எல்லோருக்கும் உண்டான திடீர் குழப்பத்தை கவிதையாக வடித்து விட்டீர்கள். இருந்தாலும் கூகிளுக்கு நன்றி சொல்வோம்!
கூகுளில் ஒரு தமிழ்ப் புலவர்!
ReplyDeleteநல்ல கவிதைகள் தருகிறார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது!
தொடரட்டும் தங்கள் தமிழ்ப்பணி.
K.s.s.Rajh said...
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
dhanasekaran .S said...
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
தமிழ்வாசி பிரகாஷ் said...
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
மகேந்திரன் said...
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
வெங்கட் நாகராஜ் said
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
ஹேமா said...
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
கீதா said...
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
Riyas said...
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
தி.தமிழ் இளங்கோ said
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
பரமசிவம் said...
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
தி.தமிழ் இளங்கோ said
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
ஒவ்வொரு வலைப்பதிவர்களின் மனப் பாங்கை அருமையாக இந்த கவிதை பதிவு செய்துள்ளது. அருமை புலவரே
ReplyDeleteநண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.
ReplyDeleteநன்றி
யாழ் மஞ்சு