வெந்தப் புண்ணில் வேல்குத்த-படும்
வேதனை நெருப்போ எனைச்சுத்த
வந்தச் சேனல் நான்கதனை-பார்த்து
வருந்தி எழுதினேன் நானிதனை
எந்த இனமும் இன்றுவரை-உலகில்
ஏற்றதா அழிவே ஒன்றுஉரை
இந்தத் தமிழினம் மட்டுந்தான்-எனில்
எதற்கு இறைவா அழித்துவிடு
படமதைப் பார்த்து அழுதேனே-இனி
பரமனைப் போற்றி எழுதேனே
வடமலை வாழும் கோவிந்தா-நான்
வடித்த கண்ணீர் பாவிந்தா
இடமிலை எமக்கும் உம்நெஞ்சில்-நீயும்
இரக்க மின்றியா கண்துஞ்சல்!
விடமது இருந்தால் கொடுத்துவிடு-உடன்
வேரொடு தமிழரை அழித்துவிடு
மனித நேயம் போயிற்றே-ஈழம்
மண்ணொடு மண்ணாய் ஆயிற்றே
புனித புத்தர் மதமங்கே-விடுதலை
புலிகளை அழித்த முறையெங்கே
இனியொரு நாடும் உதவாது-நம்
இந்திய நாடோ பெருஞ்சூது
கனியொடு காயும் பிஞ்சிமென-மக்கள்
கதர உதிர நாளுமென
இத்தனைக் கண்டும் நன்றாக-உலகம்
ஏனோ தானோ என்றாக
மெத்தன மாக இருக்கிறதே-தமிழ்
இனத்தை அந்தோ ஒழிக்கிறதே
பித்தனாய் இறைவா பழித்தேனே-என்
பிழைக்கு வருந்தி விழித்தேனே
சித்தமும் இரங்கி வருவாயா-ஈழம்
செழிக்க வாங்கித் தருவாயா
அற்புதமான வரி(லி)கள்,
ReplyDeleteபுனித புத்தர் மதமங்கே-விடுதலை
புலிகளை அழித்த முறையெங்கே
அருமையான கவிதை வாழ்த்துகள்
ReplyDeleteபடமதைப் பார்த்து அழுதேனே-இனி
ReplyDeleteபரமனைப் போற்றி எழுதேனே!
அருமையான கவிதை வரிகள் வாழ்த்துக்கள் அய்யா!வாழ்க நலமுடன்
உண்மைவிரும்பி.
மும்பை.
கண்ணீர்க்கவிதை.அருமை ஐயா.
ReplyDeleteபடித்து விட்டு மனம் நெகிழ்ந்தது ! கவிதை அருமை, அருமை ஐயா!
ReplyDeleteசித்தமும் இரங்கி வருவாயா-ஈழம்
ReplyDeleteசெழிக்க வாங்கித் தருவாயா///
நோக்கம் நிறைவேறும் ஐயா... கவிதை பகிர்வுக்கு நன்றி.
துயரத்தில் தோய்ந்த கவிதை மனதை நெகிழச் செய்தது.
ReplyDeleteவணக்கம் ஐயா,
ReplyDeleteஈழத்து கொடுமைகளை சனல் நான்கினூடாகப் பார்த்து மனிதாபிமானம் உள்ளவர்கள் மாத்திரம் வருந்துகிறார்கள். ஆனால் ஈனர்கள், கல் மனம் கொண்ட உலகத்து அரசுகள் கண்டுக்காது இருப்பது வேதனையே எனும் உண்மையினை கவிதையில் சொல்லியிருக்கிறீங்க.
இறைவன் காப்பாற்றுவாராக ....
ReplyDeleteநெஞ்சம் கனத்து போனது அருமை ஐயா
ReplyDeleteமனதை நெகிழச் செய்யும் கவிதை வரிகள்
ReplyDeleteMOHAMED YASIR ARAFATH said...
ReplyDeleteவாழ்த்துக்கும் வருகைக்கும்
மிக்க நன்றி!
புலவர் சா இராமாநுசம்
dhanasekaran .S said...
ReplyDeleteவாழ்த்துக்கும் வருகைக்கும்
மிக்க நன்றி!
புலவர் சா இராமாநுசம்
எனது கவிதைகள்... said...
ReplyDeleteவாழ்த்துக்கும் வருகைக்கும்
மிக்க நன்றி!
புலவர் சா இராமாநுசம்
சென்னை பித்தன் said...
ReplyDeleteவாழ்த்துக்கும் வருகைக்கும்
மிக்க நன்றி!
புலவர் சா இராமாநுசம்
திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDeleteவாழ்த்துக்கும் வருகைக்கும்
மிக்க நன்றி!
புலவர் சா இராமாநுசம்
தமிழ்வாசி பிரகாஷ் said...
ReplyDeleteவாழ்த்துக்கும் வருகைக்கும்
மிக்க நன்றி!
புலவர் சா இராமாநுசம்
கணேஷ் said...
ReplyDeleteவாழ்த்துக்கும் வருகைக்கும்
மிக்க நன்றி!
புலவர் சா இராமாநுசம்
நிரூபன் said...
ReplyDeleteவாழ்த்துக்கும் வருகைக்கும்
மிக்க நன்றி!
புலவர் சா இராமாநுசம்
koodal bala said...
ReplyDeleteவாழ்த்துக்கும் வருகைக்கும்
மிக்க நன்றி!
புலவர் சா இராமாநுசம்
sasikala said...
ReplyDeleteவாழ்த்துக்கும் வருகைக்கும்
மிக்க நன்றி!
புலவர் சா இராமாநுசம்
K.s.s.Rajh said
ReplyDeleteவாழ்த்துக்கும் வருகைக்கும்
மிக்க நன்றி!
புலவர் சா இராமாநுசம்
ஐயா
ReplyDeleteஇதைப்பற்றி என்சொல்ல.
வலிகளின் வேதனை உணர்ந்தவர்க்குதான் புரியும்.
பதவியின் வாலிலே தொங்குவோர்க்குப் புரியாது.
துயரத்தில் தோய்ந்த கவிதை மனதை நெகிழச் செய்தது ஐயா...
ReplyDeleteஅழுகைக்கு முடிவே இல்லை ஐயா.நன்றாகச் சொன்னீர்கள்.வேரோடு அழித்துவிடு என்று.உண்மையில் நன்று !
ReplyDeleteவெந்த மனத்தின் வேதனையை வெளிப்படுத்தும் மனத்தின் ஓலம் கேட்குமா அந்தப் பழிகாரர்களுக்கு?
ReplyDeleteபாவினுள் உறைந்திருக்கும் பரிதவிப்பு கண்டு நெகிழ்கிறேன் ஐயா.
அழுகைக்கு முடிவே இல்லை ஐயா.நன்றாகச் சொன்னீர்கள்.வேரோடு அழித்துவிடு என்று.உண்மையில் நன்று !
ReplyDeletesorry hema for copy paste because i have no tamil typing thankyou