Monday, January 23, 2012

இன்றே எழுவோம் அறிவீரே!


தேவி குளமும் பீர்மேடும்-இன்றே
         தேவைக் கச்சத் தீவுமே
பாவிகள் செய்வது பாதகமே-மேலும்
           பார்ப்பதா மத்தியில் சாதகமா
ஆவித் துடித்திட விவசாயம்-என்ன
           ஆகுமோ? அங்கே போராட
கேவி அழுகிறான் மீனவனோ-தினம்
        கேட்பார் எங்கே அவன்வாட

கொடுத்தோம் இரண்டும் தவறாமே-உடன்
          கொடுத்ததை மீண்டும் பெறுவோமே
அடுத்தாய் எண்ணிச் செயல்டுவோம்-எனில்
          அல்லல் பட்டே துயர்படுவோம்
எடுத்திட வேண்டும் ஒருமுடிவே-காலம்
           எடுத்தால் என்றும் இலைவிடிவே
படுத்துவர் மேலும் துயர்படவே-அப்
          பாவியாய் நாமும் உயிர்விடவே

மத்திய மாநில அரசுகளே-மேலும்
       மௌனம் வேண்டாம் அரசுகளே
மெத்தனம் இதிலும் காட்டாதீர்-வீணாய்
        மேலும் காலத்தை நீட்டாதீர்
சித்தமே இரங்கிச் செயல்படுவீர்!-உடன்
         சிந்தனை இன்றேல் துயர்படுவோர்
எத்தனைக் நாட்கள் பொறுத்திடுவர்-பொங்கிச்
         செயல்படின் யாரதைத் தடுத்திடுவர்!?

என்றும் தாழ்ந்தது தமிழ்நாடா-என்ற
        எண்ணத்தில் செய்வதே! இக்கேடா?
நன்றே அல்லவாம் ஆள்வோரே-இப்படி
         நடந்தால் கோபம் மூள்வாரே!
குன்றே உடையும் சிற்றுளியில்-இக்
        கொடுமையைத் தடுக்க அறவழியில்
இன்றே எழுவோம் அறிவீரே!-தமிழ்
         இனமே திரளும் புரிவீரே!

               புலவர் சா இராமாநுசம்
            
         

25 comments:

  1. இன்றைய தேவை சொல்லும் கவிதை.

    ReplyDelete
  2. மத்திய அரசு மந்தமாக இருக்கும்போது மாநில அரசும் அதையே பின்பற்றுகிறது..நீங்கள் சொன்னதுபோல தமிழினம் திரள வேண்டும்..கவிதை நன்று.வாசித்தேன் வாக்கிட்டேன்..நன்றி ஐயா.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. வரிகளில்
    ஒரு கவிதைப் புரட்சி
    சமூத்து மீதான ஐயவின் நேசத்தை காட்டும்
    அற்புத கவிதை

    இன்றே எழட்டும்
    நன்றி ஐயா

    ReplyDelete
  5. கவிதை அருமை ஜயா

    ReplyDelete
  6. தமிழன் வாழ்வு ஓங்குக !அருமை ஐயா !

    ReplyDelete
  7. ////மெத்தனம் இதிலும் காட்டாதீர்-வீணாய்
    மேலும் காலத்தை நீட்டாதீர்////

    ஐயா அரசியல்வதிகளின் ஆட்டத்தில் எங்காவது பொது நலம் இருக்கிறதா?

    ReplyDelete
  8. கவிதை அருமை ஜயா...தொடருங்கள்...

    ReplyDelete
  9. dhanasekaran .S said

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  10. மதுமதி said...

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  11. சென்னை பித்தன் said


    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  12. செய்தாலி said...


    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  13. K.s.s.Rajh said...


    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  14. koodal bala said...



    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  15. ♔ம.தி.சுதா♔ said

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  16. ரெவெரி said...



    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  17. இறையாண்மையையும், தேசியமும் பேசி பேசியே தமிழன் தன் உரிமை அனைத்தையும் இழந்துவிட்டான் அய்யா, இனி இதை மீட்டெடுக்கும் நாள் எந்நாளோ

    ReplyDelete
  18. ஒன்றுபட்டு குன்றில் நின்றால்
    எதிர்நிற்கும்
    மாமலையும் ஒரு சிறு கல்லே....

    அருமையான கவிதை ஐயா...

    ReplyDelete
  19. குன்றே உடையும் சிற்றுளியில்-இக்
    கொடுமையைத் தடுக்க அறவழியில்
    இன்றே எழுவோம் அறிவீரே!-தமிழ்
    இனமே திரளும் புரிவீர

    அறவழியில் போராட
    கவிவழியில் அழைத்த விதம
    மிக் மிக அருமை
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  20. A.R.ராஜகோபாலன் said...

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  21. மகேந்திரன் said

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  22. Ramani said...


    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete