தேவி குளமும் பீர்மேடும்-இன்றே
தேவைக் கச்சத் தீவுமே
பாவிகள் செய்வது பாதகமே-மேலும்
பார்ப்பதா மத்தியில் சாதகமா
ஆவித் துடித்திட விவசாயம்-என்ன
ஆகுமோ? அங்கே போராட
கேவி அழுகிறான் மீனவனோ-தினம்
கேட்பார் எங்கே அவன்வாட
கொடுத்தோம் இரண்டும் தவறாமே-உடன்
கொடுத்ததை மீண்டும் பெறுவோமே
அடுத்தாய் எண்ணிச் செயல்டுவோம்-எனில்
அல்லல் பட்டே துயர்படுவோம்
எடுத்திட வேண்டும் ஒருமுடிவே-காலம்
எடுத்தால் என்றும் இலைவிடிவே
படுத்துவர் மேலும் துயர்படவே-அப்
பாவியாய் நாமும் உயிர்விடவே
மத்திய மாநில அரசுகளே-மேலும்
மௌனம் வேண்டாம் அரசுகளே
மெத்தனம் இதிலும் காட்டாதீர்-வீணாய்
மேலும் காலத்தை நீட்டாதீர்
சித்தமே இரங்கிச் செயல்படுவீர்!-உடன்
சிந்தனை இன்றேல் துயர்படுவோர்
எத்தனைக் நாட்கள் பொறுத்திடுவர்-பொங்கிச்
செயல்படின் யாரதைத் தடுத்திடுவர்!?
என்றும் தாழ்ந்தது தமிழ்நாடா-என்ற
எண்ணத்தில் செய்வதே! இக்கேடா?
நன்றே அல்லவாம் ஆள்வோரே-இப்படி
நடந்தால் கோபம் மூள்வாரே!
குன்றே உடையும் சிற்றுளியில்-இக்
கொடுமையைத் தடுக்க அறவழியில்
இன்றே எழுவோம் அறிவீரே!-தமிழ்
இனமே திரளும் புரிவீரே!
புலவர் சா இராமாநுசம்
இன்றைய தேவை சொல்லும் கவிதை.
ReplyDeleteமத்திய அரசு மந்தமாக இருக்கும்போது மாநில அரசும் அதையே பின்பற்றுகிறது..நீங்கள் சொன்னதுபோல தமிழினம் திரள வேண்டும்..கவிதை நன்று.வாசித்தேன் வாக்கிட்டேன்..நன்றி ஐயா.
ReplyDeleteகவிதை அருமை.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவரிகளில்
ReplyDeleteஒரு கவிதைப் புரட்சி
சமூத்து மீதான ஐயவின் நேசத்தை காட்டும்
அற்புத கவிதை
இன்றே எழட்டும்
நன்றி ஐயா
கவிதை அருமை ஜயா
ReplyDeleteதமிழன் வாழ்வு ஓங்குக !அருமை ஐயா !
ReplyDelete////மெத்தனம் இதிலும் காட்டாதீர்-வீணாய்
ReplyDeleteமேலும் காலத்தை நீட்டாதீர்////
ஐயா அரசியல்வதிகளின் ஆட்டத்தில் எங்காவது பொது நலம் இருக்கிறதா?
கவிதை அருமை ஜயா...தொடருங்கள்...
ReplyDeletedhanasekaran .S said
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
மதுமதி said...
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
சென்னை பித்தன் said
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
செய்தாலி said...
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
K.s.s.Rajh said...
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
koodal bala said...
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
♔ம.தி.சுதா♔ said
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
ரெவெரி said...
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
இறையாண்மையையும், தேசியமும் பேசி பேசியே தமிழன் தன் உரிமை அனைத்தையும் இழந்துவிட்டான் அய்யா, இனி இதை மீட்டெடுக்கும் நாள் எந்நாளோ
ReplyDeleteஒன்றுபட்டு குன்றில் நின்றால்
ReplyDeleteஎதிர்நிற்கும்
மாமலையும் ஒரு சிறு கல்லே....
அருமையான கவிதை ஐயா...
குன்றே உடையும் சிற்றுளியில்-இக்
ReplyDeleteகொடுமையைத் தடுக்க அறவழியில்
இன்றே எழுவோம் அறிவீரே!-தமிழ்
இனமே திரளும் புரிவீர
அறவழியில் போராட
கவிவழியில் அழைத்த விதம
மிக் மிக அருமை
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
Tha.am 9
ReplyDeleteA.R.ராஜகோபாலன் said...
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
மகேந்திரன் said
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
Ramani said...
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
Innoru Satyagrkagam vendum ayya. Arumai.
ReplyDeleteTM 10.