Friday, January 20, 2012

யானைப் பசிக்கு எதுவேண்டும் !?


பொங்கல் வந்தும் போயிற்றே-கண்ணீர்
         பொங்கும் நிலைதான் ஆயிற்றே!
 திங்கள் ஒன்றும் ஆகிறதே-இங்கே
           தினமும் நெஞ்சம் வேகிறதே!
எங்கள் வாழ்வும் நலமுறுமா-புயல்
       இழைத்த அழிவும் வளமுறுமா?
தங்கும் குடிசையும் தரைமட்டம்-பனி,
       தையின் குளிரோ எமைவாட்டும்!

புள்ளி விபரம் போடுகின்றார்-வந்து
      போவதும் வருவதாய் ஒடுகின்றார்!
அள்ளிப் போடவும் இடமில்லை-மரத்தை
       அறுத்து எடுக்கவும் திடமில்லை!
கொள்ளி வைக்கவே பயன்படுமே-எம்
       குடும்பமே அதிலே எரிபடுமே!
வெள்ளம் வந்தால் வடிந்துவிடும்-துயர
        வெள்ளத்தில் ஊரே மடிந்துவிடும்!

யானைப் பசிக்கு எதுவேண்டும்-அரசே
       எமக்கு உதவ நி(ம)திவேண்டும்!
தானே புயலால் இழந்திட்டோம்-வாழ
        தடமே யின்றி  அழிந்திட்டோம்!
விணே எம்மை வாட்டாதீர்-வெறும்
       வார்த்தையால் திட்டம் தீட்டாதீர்!
தேனாய் இனித்திட வாழ்ந்தோமே-எட்டு
        திசையும் இருண்டிட வீழ்ந்தோமே!

                          புலவர் சா இராமாநுசம்

29 comments:

  1. வணக்கம் ஐயா..தானே புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை நினைத்தால் மிகவும் வருத்தமாகத்தான் இருக்கிறது..அரசு நிதி ஒதுக்கியுள்ளது..அது எல்லோரையும் சென்றடையுமா எனத் தெரியவில்லை ஐயா..கவிதை வாயிலாக உங்கள் வருத்தத்தை சொல்லிவிட்டீர்கள்..வாசித்தேன் வாக்களித்தேன்.நன்றி..

    நீ யாரெனத் தெரியவில்லை

    ReplyDelete
  2. கொடுமை....

    காலம் நாளை துளிர்விடும்

    ReplyDelete
  3. தானே புயல் பாதித்தவர்கள் பற்றிய ஆதங்க கவிதை நன்று புலவரே...

    ReplyDelete
  4. கண்ணீர் மட்டுமே நம் கதை சொல்லும்.

    அழகான கவிதை ஐயா!!

    ReplyDelete
  5. ஒன்றுமே செய்ய முடியாத மக்கள்
    ஒன்றுமே செய்யாத அரசு
    இது தமிழர்களின் சாபம்.

    ReplyDelete
  6. ம்...எங்கும் மக்கள்தான் பாவம் !

    ReplyDelete
  7. வேதனையான கவிதை.
    நல்ல வழி கிடைக்கட்டும்.

    ReplyDelete
  8. இந்த ஆங்கிலப் புத்தாண்டு தொடங்கும் முன்னர் ஒரு
    பெரிய அடி அடித்துச் சென்றுவிட்டது தானே புயல்...
    எதை எதையோ எதிர்பார்த்திருந்த பல தோழமைகளின் கனவுகள் தவிடு பொடியாகின...

    இழப்பீடுகள் சரியான முறையில் சென்று சேர வேண்டும்.

    அருமையான கவிதை ஐயா..

    ReplyDelete
  9. கவலை தோய்ந்த-
    வரிகள்!

    !

    ReplyDelete
  10. மதுமதி said...

    நன்றி சகோ!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  11. கவிதை வீதி... // சௌந்தர் // said

    நன்றி சகோ!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  12. ரெவெரி said...



    நன்றி சகோ!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  13. dhanasekaran .S said

    நன்றி சகோ!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  14. A.R.ராஜகோபாலன் said

    நன்றி சகோ!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  15. ஹேமா said

    நன்றி சகோதரி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  16. Rathnavel said...

    புலவர் சா இராமாநுசம்


    நன்றி ஐயா!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  17. மகேந்திரன் said...

    நன்றி சகோ!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  18. Seeni said...


    நன்றி சகோ!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  19. எங்கள் வேதனை உங்கள் வரிகளில் தெரிகிறது.

    ReplyDelete
  20. ஆதங்கத்தில் எழுந்த கவிதை. மனதை கனக்கச் செய்தது. பொதுமக்கள் நிலை என்றுமே பரிதாபமானதுதானே...

    ReplyDelete
  21. ////யானைப் பசிக்கு எதுவேண்டும்-அரசே
    எமக்கு உதவ நி(ம)திவேண்டும்!
    தானே புயலால் இழந்திட்டோம்-வாழ
    தடமே யின்றி அழிந்திட்டோம்!
    விணே எம்மை வாட்டாதீர்-வெறும்
    வார்த்தையால் திட்டம் தீட்டாதீர்!////

    பாதிக்க பட்ட மக்களின் வார்த்தைகளாக ஒலிக்கும் கவிதை அருமையாக இருக்கு ஜயா

    ReplyDelete
  22. கோகுல் said...


    நன்றி சகோ!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  23. கணேஷ் said

    நன்றி சகோ!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  24. K.s.s.Rajh said


    நன்றி சகோ!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  25. மதுமதி!
    நண்பரே! தங்கள் வலைக்கு நான் பல
    முறை முயன்றேன்!வருகிறது வாக்கிட்டேன்
    மறுமொழி எழுத இயலவில்லை
    மேலோ கீழோ நகரவில்லை
    கவினிக்கவும்

    ReplyDelete
  26. வெறும்
    வார்த்தையால் திட்டம் தீட்டாதீர்!
    சாட்டை அடி போலும் வரிகள் அருமை ஐயா

    ReplyDelete
  27. அன்பரே உங்கள் தளத்தை எனது தளத்தில் பரிந்துரைத்துள்ளேன் பார்க்கவும்
    சிறந்த கவிதை தளங்கள்

    ReplyDelete
  28. வேதனை நிறைந்த வார்த்தைகள்.

    ReplyDelete
  29. -வெறும்
    வார்த்தையால் திட்டம் தீட்டாதீர்!

    நல்லாக் கேட்டீங்க புலவரே..

    அருமை..

    ReplyDelete