Thursday, January 19, 2012

காண்பதே இன்றைய மனிதநிலை!



போதுமென்ற மனம் கொண்டே
     புகலுமிங்கே யார் உண்டே?
யாதும் ஊரே என்றிங்கே
    எண்ணும் மனிதர் யாரிங்கே
தீதே செய்யார் இவரென்றே
     தேடிப் பார்பினும் எவரின்றே
சூதும் வாதுமே வாழ்வாகும்
    சொல்லில் இன்றைய மனிதநிலை!

மாறிப் போனது மனிதமனம்
     மாறும் மேலும் மனிதகுணம்
ஊரும் மாறிப் போயிற்றே
    உணர்வில் மாற்றம் ஆயிற்றே
பேருக்கே இன்றே உறவெல்லாம்
    பேச்சில் இருப்பதோ கரவெல்லாம்
யாருக்கும் இதிலே பேதமிலை
    இதுதான் இன்றைய மனிதநிலை!

மேடையில் ஏறினால் ஒருபேச்சே
    மேடையை விட்டால் அதுபோச்சே
ஆடைக்கும் மதிப்புத் தருவாரே!
    ஆளை மதித்து வருவாரோ?
வாடையில் வாட்டும் குளிர்போல
    வார்த்தையில் கொட்டும் தேள்போல
கோடையின் வெயில் கொடுமையென
     குணமே இன்றைய மனிதநிலை!

பற்று பாசம் எல்லாமே
     பறந்தது அந்தோ! இல்லாமே
சுற்றம் தாழல் சொல்லாமே
     சொன்னது போனதே நில்லாமே
முற்றும் துறந்தது கபடமென
     முழுதும் கலைந்தது வேடமென
கற்றும் அறியா மூடநிலை
   காண்பதே இன்றைய மனிதநிலை!

                        புலவர் சா இராமாநுசம்



    

30 comments:

  1. மனிதனைதேடும் கவிதை!!

    அருமை வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. இன்றைய மனிதனின் மனநிலை இதுவென்றே அழகாய் கவி வடித்துவிட்டீர்கள். அருமை.

    ReplyDelete
  3. யாதார்த மான மனித மனநிலை பற்றிய கவிதை அருமை ஜயா

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா.மிகவும் அருமையான சிந்தனை .இந்த மன நிலைகள் மாறினால் துன்பமில்லை .நன்றி!

    ReplyDelete
  5. மாறிப் போனது மனிதமனம்
    மாறும் மேலும் மனிதகுணம்///

    குரங்கு மனம் என சொல்வாங்க ஐயா.....

    ReplyDelete
  6. சுயநலம் மிகுந்ததாகிப் போயிற்றே மனித மனங்கள்! அன்பும் கருணையும் கொண்டவையாக என்றுதான் இது மாறும்? ஆதங்கத்தில் வடித்த கவிதை மிக நன்று!

    ReplyDelete
  7. கற்றும் அறியா மூடநிலை
    ஆதங்க மான வரிகள் மிகவும் அருமை நன்றி

    ReplyDelete
  8. இன்றைய மனப்போக்கு பற்றிய நல்ல கவிதை ஐயா.

    ReplyDelete
  9. அருமையான கவிவரிகள் ஐயா/

    போதுமென்ற மனம் கொண்டே
    புகலுமிங்கே யார் உண்டே?////
    \
    புகலுதல் என்றால் சொல்லுதல் தானே?

    ReplyDelete
  10. Asaththal Kavi Ayya. Kandippaga maatram vara vendum.

    T M 10.

    ReplyDelete
  11. dhanasekaran .S said...


    நெஞ்சம் மகிழ வாழ்த்தினீர்
    நன்றி! நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  12. Kousalya said...

    நெஞ்சம் மகிழ வாழ்த்தினீர்
    நன்றி! நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  13. K.s.s.Rajh said...

    நெஞ்சம் மகிழ வாழ்த்தினீர்
    நன்றி! நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  14. koodal bala said...

    நெஞ்சம் மகிழ வாழ்த்தினீர்
    நன்றி! நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  15. தமிழ்வாசி பிரகாஷ் said


    நெஞ்சம் மகிழ வாழ்த்தினீர்
    நன்றி! நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  16. கணேஷ் said...

    நெஞ்சம் மகிழ வாழ்த்தினீர்
    நன்றி! நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  17. sasikala said...


    நெஞ்சம் மகிழ வாழ்த்தினீர்
    நன்றி! நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  18. சென்னை பித்தன் said...

    ReplyDelete
  19. சென்னை பித்தன் said

    நெஞ்சம் மகிழ வாழ்த்தினீர்
    நன்றி! நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  20. ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி said

    புகலுதல் என்றால் சொல்லுதல் தானே
    ஆம்! சகோ!
    நெஞ்சம் மகிழ வாழ்த்தினீர்
    நன்றி! நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  21. துரைடேனியல் said...

    நெஞ்சம் மகிழ வாழ்த்தினீர்
    நன்றி! நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  22. மனமும் மனிதமும் மரத்துப்போனதையும் இன்னும் மரணித்துப் போவாததையும் கவித்துவமாக சொன்ன கவிதை அசத்தல் அய்யா

    ReplyDelete
  23. இன்றைய அவலத்தை மனதில் பதியும்படி சொல்லியிருக்கிறீர்கள் அய்யா!

    ReplyDelete
  24. உங்கள் அனுபவத்தில் எத்தனை மனிதர்களைக் கண்ட சலிப்பு இது.எங்கு தேடினாலும் கிடைக்கமாட்டார்கள் நீங்கள் தேடும் மனிதர்கள் !

    ReplyDelete
  25. இன்றைய மனிதனின் மனநிலை பற்றிய கவிதை ...அருமை...வாழ்த்துக்கள்

    ReplyDelete
  26. A.R.ராஜகோபாலன் said...


    நெஞ்சம் மகிழ வாழ்த்தினீர்
    நன்றி! நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  27. shanmugavel said...


    நெஞ்சம் மகிழ வாழ்த்தினீர்
    நன்றி! நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  28. ஹேமா said...

    நெஞ்சம் மகிழ வாழ்த்தினீர்
    நன்றி! நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  29. ரெவெரி said...

    நெஞ்சம் மகிழ வாழ்த்தினீர்
    நன்றி! நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  30. மனிதம் தொலைத்திட்டேனோ மனிதனாய் இருந்தும்...கவிதை அருமை அண்ணே!

    ReplyDelete