போதுமென்ற மனம் கொண்டே
புகலுமிங்கே யார் உண்டே?
யாதும் ஊரே என்றிங்கே
எண்ணும் மனிதர் யாரிங்கே
தீதே செய்யார் இவரென்றே
தேடிப் பார்பினும் எவரின்றே
சூதும் வாதுமே வாழ்வாகும்
சொல்லில் இன்றைய மனிதநிலை!
மாறிப் போனது மனிதமனம்
மாறும் மேலும் மனிதகுணம்
ஊரும் மாறிப் போயிற்றே
உணர்வில் மாற்றம் ஆயிற்றே
பேருக்கே இன்றே உறவெல்லாம்
பேச்சில் இருப்பதோ கரவெல்லாம்
யாருக்கும் இதிலே பேதமிலை
இதுதான் இன்றைய மனிதநிலை!
மேடையில் ஏறினால் ஒருபேச்சே
மேடையை விட்டால் அதுபோச்சே
ஆடைக்கும் மதிப்புத் தருவாரே!
ஆளை மதித்து வருவாரோ?
வாடையில் வாட்டும் குளிர்போல
வார்த்தையில் கொட்டும் தேள்போல
கோடையின் வெயில் கொடுமையென
குணமே இன்றைய மனிதநிலை!
பற்று பாசம் எல்லாமே
பறந்தது அந்தோ! இல்லாமே
சுற்றம் தாழல் சொல்லாமே
சொன்னது போனதே நில்லாமே
முற்றும் துறந்தது கபடமென
முழுதும் கலைந்தது வேடமென
கற்றும் அறியா மூடநிலை
காண்பதே இன்றைய மனிதநிலை!
புலவர் சா இராமாநுசம்
மனிதனைதேடும் கவிதை!!
ReplyDeleteஅருமை வாழ்த்துகள்.
இன்றைய மனிதனின் மனநிலை இதுவென்றே அழகாய் கவி வடித்துவிட்டீர்கள். அருமை.
ReplyDeleteயாதார்த மான மனித மனநிலை பற்றிய கவிதை அருமை ஜயா
ReplyDeleteவணக்கம் ஐயா.மிகவும் அருமையான சிந்தனை .இந்த மன நிலைகள் மாறினால் துன்பமில்லை .நன்றி!
ReplyDeleteமாறிப் போனது மனிதமனம்
ReplyDeleteமாறும் மேலும் மனிதகுணம்///
குரங்கு மனம் என சொல்வாங்க ஐயா.....
சுயநலம் மிகுந்ததாகிப் போயிற்றே மனித மனங்கள்! அன்பும் கருணையும் கொண்டவையாக என்றுதான் இது மாறும்? ஆதங்கத்தில் வடித்த கவிதை மிக நன்று!
ReplyDeleteகற்றும் அறியா மூடநிலை
ReplyDeleteஆதங்க மான வரிகள் மிகவும் அருமை நன்றி
இன்றைய மனப்போக்கு பற்றிய நல்ல கவிதை ஐயா.
ReplyDeleteஅருமையான கவிவரிகள் ஐயா/
ReplyDeleteபோதுமென்ற மனம் கொண்டே
புகலுமிங்கே யார் உண்டே?////
\
புகலுதல் என்றால் சொல்லுதல் தானே?
Asaththal Kavi Ayya. Kandippaga maatram vara vendum.
ReplyDeleteT M 10.
dhanasekaran .S said...
ReplyDeleteநெஞ்சம் மகிழ வாழ்த்தினீர்
நன்றி! நன்றி!
புலவர் சா இராமாநுசம்
Kousalya said...
ReplyDeleteநெஞ்சம் மகிழ வாழ்த்தினீர்
நன்றி! நன்றி!
புலவர் சா இராமாநுசம்
K.s.s.Rajh said...
ReplyDeleteநெஞ்சம் மகிழ வாழ்த்தினீர்
நன்றி! நன்றி!
புலவர் சா இராமாநுசம்
koodal bala said...
ReplyDeleteநெஞ்சம் மகிழ வாழ்த்தினீர்
நன்றி! நன்றி!
புலவர் சா இராமாநுசம்
தமிழ்வாசி பிரகாஷ் said
ReplyDeleteநெஞ்சம் மகிழ வாழ்த்தினீர்
நன்றி! நன்றி!
புலவர் சா இராமாநுசம்
கணேஷ் said...
ReplyDeleteநெஞ்சம் மகிழ வாழ்த்தினீர்
நன்றி! நன்றி!
புலவர் சா இராமாநுசம்
sasikala said...
ReplyDeleteநெஞ்சம் மகிழ வாழ்த்தினீர்
நன்றி! நன்றி!
புலவர் சா இராமாநுசம்
சென்னை பித்தன் said...
ReplyDeleteசென்னை பித்தன் said
ReplyDeleteநெஞ்சம் மகிழ வாழ்த்தினீர்
நன்றி! நன்றி!
புலவர் சா இராமாநுசம்
ஒண்ணுமே தெரியாத ஐடியாமணி said
ReplyDeleteபுகலுதல் என்றால் சொல்லுதல் தானே
ஆம்! சகோ!
நெஞ்சம் மகிழ வாழ்த்தினீர்
நன்றி! நன்றி!
புலவர் சா இராமாநுசம்
துரைடேனியல் said...
ReplyDeleteநெஞ்சம் மகிழ வாழ்த்தினீர்
நன்றி! நன்றி!
புலவர் சா இராமாநுசம்
மனமும் மனிதமும் மரத்துப்போனதையும் இன்னும் மரணித்துப் போவாததையும் கவித்துவமாக சொன்ன கவிதை அசத்தல் அய்யா
ReplyDeleteஇன்றைய அவலத்தை மனதில் பதியும்படி சொல்லியிருக்கிறீர்கள் அய்யா!
ReplyDeleteஉங்கள் அனுபவத்தில் எத்தனை மனிதர்களைக் கண்ட சலிப்பு இது.எங்கு தேடினாலும் கிடைக்கமாட்டார்கள் நீங்கள் தேடும் மனிதர்கள் !
ReplyDeleteஇன்றைய மனிதனின் மனநிலை பற்றிய கவிதை ...அருமை...வாழ்த்துக்கள்
ReplyDeleteA.R.ராஜகோபாலன் said...
ReplyDeleteநெஞ்சம் மகிழ வாழ்த்தினீர்
நன்றி! நன்றி!
புலவர் சா இராமாநுசம்
shanmugavel said...
ReplyDeleteநெஞ்சம் மகிழ வாழ்த்தினீர்
நன்றி! நன்றி!
புலவர் சா இராமாநுசம்
ஹேமா said...
ReplyDeleteநெஞ்சம் மகிழ வாழ்த்தினீர்
நன்றி! நன்றி!
புலவர் சா இராமாநுசம்
ரெவெரி said...
ReplyDeleteநெஞ்சம் மகிழ வாழ்த்தினீர்
நன்றி! நன்றி!
புலவர் சா இராமாநுசம்
மனிதம் தொலைத்திட்டேனோ மனிதனாய் இருந்தும்...கவிதை அருமை அண்ணே!
ReplyDelete