Tuesday, January 17, 2012

எத்தனை காலம் ஆனாலும் !


தொலைந்தது மீண்டும் வந்ததுவே-கனவில்
தொல்லையா இன்பம் தந்ததுவே
கலைந்தது அந்தோ தூக்கம்தான்-அவளை
கண்முன காணா ஏக்கந்தான்
விளைந்தது மீண்டும் கனவுவர-அவள்
விட்டுச் சென்றதை நினவுதர
அலைந்தது அந்தோ மனம்வீணே-முக
அழகில் காண்பது மிகநாணே

என்னுள் அவளே இருந்தாலும்-நல்
இருவிழி தந்திடும் மருந்தாலும்
பொன்னுள் பதித்த மணிபோல-தினம்
புலம்பும் நெஞ்சின் பிணிமாள
மன்னும் உயிரும் உடலோடு-அவள
மறுத்தால வாழ்வே சுடுகாடே
இன்னும எதறகோ நடிக்கின்றாள்-தன்
இதயம் திறக்க மறுக்கின்றாள்

எத்தனை காலம் ஆனாலும்-என்
இளமை அழிந்து போனாலும்
சித்தமே சற்றும கலங்காது-விருப்பம்
செப்பிடும் வரையில் தூங்காது
இத்தரை தன்னில் வாழ்ந்திடுவேன்-நான்
இறுதியில் ஒருநாள் விழ்ந்திடுவேன்
பத்தரைப் பொன்னே நீவருவாய்-தீரா
பழியும் வருமே வாய்திறவாய்

புலவர் சா இராமாநுசம்

31 comments :

  1. ////எத்தனை காலம் ஆனாலும்-என்
    இளமை அழிந்து போனாலும்
    சித்தமே சற்றும கலங்காது-விருப்பம்
    செப்பிடும் வரையில் தூங்காது
    இத்தரை தன்னில் வாழ்ந்திடுவேன்-நான்
    இறுதியில் ஒருநாள் விழ்ந்திடுவேன்
    பத்தரைப் பொன்னே நீவருவாய்-தீரா
    பழியும் வருமே வாய்திறவாய் ////

    அருமையான வரிகள் சிறப்பான கவிதை

    த.ம.1

    ReplyDelete
  2. அழகான காதல் ததும்பும் கவிதை. மிக ரசித்தேன்.

    ReplyDelete
  3. அதுதானே காதல்!அருமை ஐயா!

    ReplyDelete
  4. பத்திரமான காதல்.தொலையாது ஐயா உயிர் உள்ளவரை !

    ReplyDelete
  5. எத்தனை
    அழகான வரிகள்
    அதனுள் ஓர் மேண்மைக் காதல்

    கவிதை மிகவும் அருமை ஐயா

    ReplyDelete
  6. உங்கள் வண்டி தடம் மாறுகிறது...
    காதல் எக்ஸ்பிரஸ் போல...
    இதுவும் ரசித்தேன்...

    ReplyDelete
  7. K.s.s.Rajh said

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  8. கணேஷ் said...


    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  9. சென்னை பித்தன் said...


    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  10. ஹேமா said...

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  11. நண்டு @நொரண்டு -ஈரோடு said

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  12. ரெவெரி said...


    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  13. செய்தாலி said...


    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  14. பழனி.கந்தசாமி said


    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  15. லவ் லவ்வோ லவ்வு - கவிதை பிடிச்சிருக்கு

    ReplyDelete
  16. வேல்விழியால் பேசும் காதல் மொழியின்
    விசித்திரம் கண்டேன் இங்கே...
    விசித்திரம் சித்திரமாகட்டும். ...

    அருமையான கவிதை ஐயா...

    ReplyDelete
  17. காதல் ததிம்பிய
    வரிகள்!
    அருமை அய்யா!

    ReplyDelete
  18. நலமா ஐயா ? அருமையான கவிதை !

    ReplyDelete
  19. எத்தனைக்காலம் ஆனாலும் அன்பின் ஆளுமையை மறந்திடப்போமோ? ஆழ்மனம் கொண்ட அன்பினை அழகாய் வெளிப்படுத்தும் வரிகள் அற்புதம். பாராட்டுகள் ஐயா.

    ReplyDelete
  20. கவிதை அருமை! கால ஆற்றின் கரையில் உள்ள ஆலமரம் நீங்கள்!

    ReplyDelete
  21. ”””எத்தனை காலம் ஆனாலும்-என்
    இளமை அழிந்து போனாலும்
    சித்தமே சற்றும கலங்காது-விருப்பம்
    செப்பிடும் வரையில் தூங்காது
    இத்தரை தன்னில் வாழ்ந்திடுவேன்-நான்
    இறுதியில் ஒருநாள் விழ்ந்திடுவேன்
    பத்தரைப் பொன்னே நீவருவாய்-தீரா
    பழியும் வருமே வாய்திறவாய் ”””

    எத்தனை காலம் ஆனாலும் மறக்க முடியாத வைர வரிகளை வழங்கிய விதம் வியாபம் அய்யா

    ReplyDelete
  22. மனசாட்சி said...


    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  23. மகேந்திரன் said...

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  24. Seeni said...


    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  25. koodal bala said...


    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  26. கீதா said...


    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  27. ஓசூர் ராஜன் said...

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  28. A.R.ராஜகோபாலன் said


    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  29. ''....எத்தனை காலம் ஆனாலும்-என்
    இளமை அழிந்து போனாலும்
    சித்தமே சற்றும கலங்காது-விருப்பம்
    செப்பிடும் வரையில் தூங்காது...''
    மிக உறுதியான காதல்.
    நிலைத்திடும் காதல்.
    சிறப்பு வரிகள் ஐயா.
    மகிழவு பாராட்டுகள்.
    பணி தொடரட்டும்.
    என் வலைக்கு வருகையும்,
    வாழ்த்திற்கும் மிக நன்றி ஐயா.
    தொடருவேன்..அன்புடன்..
    வேதா. இலங்காதிலகம்.
    http://kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  30. kovaikkavi said...

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...