Thursday, January 12, 2012

என்றும் இளமை குன்றா மொழியே !


எம்மொழி உமது தாய்மொழி யென்றே
என்னிடம் கேட்டால் சொல்வது ஒன்றே
செம்மொழி அம்மொழி செப்பிட இன்றே
செந்தமிழ் ஆகுமே செகமதி லின்றே

என்றும் இளமை குன்றா மொழியே
ஈடே இல்லா தமிழரின் விழியே
நன்றே இலக்கியம் இலக்கணம் கண்டே
நானிலம் போற்றும் வளமையும் உண்டே

கன்னித் தமிழாம் கனியின் சுவையாம்
காலத்தால் என்றும் அழியா மொழியாம்
என்னுள் வாழ்ந்தே கவிதை வழியாம்
எழுத்தென வந்திடும் இயலிசை மொழியாம்

இன்னல் பலபல எய்திய போதும்
எதிரிகள் செய்திட கலப்பட தீதும்
கன்னல் தமிழே கலங்கிய தில்லை
காத்தாய் நீயே தனித்தமிழ் எல்லை

புலவர் சா இராமாநுசம்

34 comments :

  1. //கன்னித் தமிழாம் கனியின் சுவையாம்
    காலத்தால் என்றும் அழியா மொழியாம் //

    நாம் பெருமை கொள்ளக்கூடியது அய்யா! கவிதை நன்று

    ReplyDelete
  2. வண்ணத்தமிழ் உங்கள் கைபட்டு இன்னும் அழகாகிறது ஐயா.தமிழ் வாழும்.பயமில்லை !

    ReplyDelete
  3. அழகான ஆழமான வரிகள்... நன்றி பகிர்விற்கு...

    ReplyDelete
  4. //கன்னித் தமிழாம் கனியின் சுவையாம்
    காலத்தால் என்றும் அழியா மொழியாம் ///

    எண்ணி எண்ணி ஏகாந்தம் கொள்ளச் செய்யும்
    வரிகள் ஐயா.
    இளமையும் வளமையும் குன்றாது
    எத்திக்கும் புகழ் மணக்கும்
    எம் இனிய தமிழ்
    தங்களின் விரல்களில் விளையாடுகிறது ஐயா...

    ReplyDelete
  5. மிகவும் ரசித்த எளிமையான கவிதை.

    //கன்னல் தமிழே கலங்கிய தில்லை// தமிழன் என்பதில் கொஞ்சம் பெருமையாகத் தான் இருக்கிறது :) நன்றி ஐயா.

    ReplyDelete
  6. \என்னுள் வாழ்ந்தே கவிதை வழியாம்
    எழுத்தென வந்திடும் இயலிசை மொழியாம் \\

    மிகச் சத்தியமான வார்த்தைகள். தங்கள் கவிதை வழி வந்து எங்கள் மனம் குளிர்விக்கும் தங்கத்தமிழ் வாழிய வாழியவே.

    ReplyDelete
  7. தமழின் சீரீளமைக் திறம் குறித்த தங்கள்
    கவிதை அருமையிலும் அருமை.தொடர வாழ்த்துக்கள்
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய தமிழர் திரு நாள் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. //இன்னல் பலபல எய்திய போதும்
    எதிரிகள் செய்திட கலப்பட தீதும்
    கன்னல் தமிழே கலங்கிய தில்லை //

    உண்மையின் தரிசனம் ஐயா. சிறந்த கவிதை.

    ReplyDelete
  9. கன்னல் தமிழ் என்றும் கலங்கியதில்லை. பல அறிவிப்பாளர்கள் கடித்துக் குதறிப் பேசியபோதும் அது அழிவதில்லை. தமிழ் உணர்வு பேசிய அருமையான கவிதை!

    ReplyDelete
  10. மிகவும் அருமையான கவிதை என் மொழி பற்றிய இந்த கவிதைக்கு த.ம.7 வது ஓட்டு போடுவதை இட்டு மகிழ்ச்சி அடைகின்றேன்

    ReplyDelete
  11. Azhagu Tamil. Arputha Kavithai. Thamizharay piranthathu perumaithan Ayya.

    ReplyDelete
  12. அருமை ஐயா..
    வாசித்தேன்..வாக்கிட்டேன்
    வாழ்க்கைத் துணை நலம்

    ReplyDelete
  13. வணக்கம்!

    //நான் வளரச் செய்தது தமிழ்நீயே கரமே குவித்து தொழுகின்றேன்-பெரும் களிப்பில் மூழ்கி எழுகின்றேன்// --- என்று எழுதத் தொடங்கி,

    //இன்னல் பலபல எய்திய போதும்
    எதிரிகள் செய்திட கலப்பட தீதும்
    கன்னல் தமிழே கலங்கிய தில்லை
    காத்தாய் நீயே தனித்தமிழ் எல்லை//

    என்று முழக்கமிடும் தங்கள் தூய தமிழ்த் தொண்டு வாழ்க!

    ReplyDelete
  14. ஹேமா said...

    அன்பின் இனியீர்!
    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    என்றும் நன்றி! நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  15. Rishvan said...

    அன்பின் இனியீர்!
    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    என்றும் நன்றி! நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  16. மகேந்திரன் said

    அன்பின் இனியீர்!
    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    என்றும் நன்றி! நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  17. அப்பாதுரை said


    அன்பின் இனியீர்!
    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    என்றும் நன்றி! நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  18. கீதா said...


    அன்பின் இனியீர்!
    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    என்றும் நன்றி! நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  19. Ramani said...


    அன்பின் இனியீர்!
    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    என்றும் நன்றி! நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  20. சத்ரியன் said...

    அன்பின் இனியீர்!
    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    என்றும் நன்றி! நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  21. கணேஷ் said...


    அன்பின் இனியீர்!
    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    என்றும் நன்றி! நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  22. K.s.s.Rajh said...

    அன்பின் இனியீர்!
    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    என்றும் நன்றி! நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  23. துரைடேனியல் said...


    அன்பின் இனியீர்!
    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    என்றும் நன்றி! நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  24. நண்டு @நொரண்டு -ஈரோடு said...



    அன்பின் இனியீர்!
    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    என்றும் நன்றி! நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  25. மதுமதி said...


    அன்பின் இனியீர்!
    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    என்றும் நன்றி! நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  26. அன்பின் இனியீர்!
    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    என்றும் நன்றி! நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  27. அருமையான கட்டுரை.வாழ்த்துகள்.

    ReplyDelete
  28. கவிதையும் தமிழும் தங்களிடம் கட்டுண்டு கிடக்கிறது. வாழ்த்துகள் அய்யா!

    ReplyDelete
  29. கவிதை அருமை. காரணம் கனித்தமிழ் எனபது உங்களுக்கும் தெரியும்! உங்களுக்கும் பொங்கலுக்கும் என் உள்ளம் பொங்கும் அன்பு வாழ்த்துக்கள், அய்யா!

    ReplyDelete
  30. கவிதை மிகவும் அருமை + அழகு... பாராட்டுக்கள் ஐயா! நன்றி! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  31. இன்று வலைச்சரத்தில் இந்த பதிவு அறிமுகம். நேரம் கிடைத்தால் சென்று பாருங்கள்.தமிழ்மணத்தில் வாக்கும் கருத்துகளும் பகிர அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
    http://blogintamil.blogspot.in/2012/02/blog-post_18.html

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...