தானேப் புயலும் வந்தாயே-ஊரின்
தடமே மாறிடச் செய்தாயே
ஏனோ இத்தனைக் கோபம்தான்-அந்த
ஏழைகள் வாழ்வே பாபம்தான்
காணாக் கொடுமை இதுவரையே-நீ
காட்டிய வேகம் இலைவரையே
வீணாய் போனதே ஊரெல்லாம் -பெற்ற
வேதனை உன்கோப் பழிசொல்லாம்
முந்திரிக் காடுகள் அழிந்தனவே-நன்கு
முற்றிய கரும்புகள் அழிந்தனவே
சிந்தினர் கண்ணீர் மழைபோல-இனி
செழிப்பது எப்போ முன்போல
வந்தது சிலமணி நேரம்தான்-ஆனால்
வாழ்வையே அழித்தது கோரம்தான்
நிந்தனைப் பெற்றாய் தானேநீ-என்றும்
தீங்கா நிலையில் ஏனோநீ
குடிநீர்க் கூட கிடைக்கவில்லை-எனக்
குமுறும் மக்கள் படும்தொல்லை
இடிபோல் நெஞ்சில் விழுகிறதே-மக்கள்
இனமே முற்றும் அழுகிறதே
கொடிய அரக்கன் செயல்போல-பெரும்
கொடுமையே தந்தாய்! புயல்சால
விடியா இரவுகள் ஆனதுவே-மின்
விளக்கு முற்றும் போனதுவே!
எத்தனைக் கோடிகள் போயிற்றே-உயிர்
இழப்புகள் பலவும் ஆயிற்றே
சித்தமே கலங்கிக் கிடக்கின்றார்-ஏதும்
செய்வது அறியா ? நடக்கின்றார்
இத்தனைக் காலம் உழைத்தோமே-இனி
எப்படி நாமும் பிழைப்போமே
பித்தனாய்ப் புலம்பிட ஆனாரே-துயரப்
பேயிக்கு ஆளாய் போனாரே!
புலவர் சா இராமாநுசம்
தடமே மாறிடச் செய்தாயே
ஏனோ இத்தனைக் கோபம்தான்-அந்த
ஏழைகள் வாழ்வே பாபம்தான்
காணாக் கொடுமை இதுவரையே-நீ
காட்டிய வேகம் இலைவரையே
வீணாய் போனதே ஊரெல்லாம் -பெற்ற
வேதனை உன்கோப் பழிசொல்லாம்
முந்திரிக் காடுகள் அழிந்தனவே-நன்கு
முற்றிய கரும்புகள் அழிந்தனவே
சிந்தினர் கண்ணீர் மழைபோல-இனி
செழிப்பது எப்போ முன்போல
வந்தது சிலமணி நேரம்தான்-ஆனால்
வாழ்வையே அழித்தது கோரம்தான்
நிந்தனைப் பெற்றாய் தானேநீ-என்றும்
தீங்கா நிலையில் ஏனோநீ
குடிநீர்க் கூட கிடைக்கவில்லை-எனக்
குமுறும் மக்கள் படும்தொல்லை
இடிபோல் நெஞ்சில் விழுகிறதே-மக்கள்
இனமே முற்றும் அழுகிறதே
கொடிய அரக்கன் செயல்போல-பெரும்
கொடுமையே தந்தாய்! புயல்சால
விடியா இரவுகள் ஆனதுவே-மின்
விளக்கு முற்றும் போனதுவே!
எத்தனைக் கோடிகள் போயிற்றே-உயிர்
இழப்புகள் பலவும் ஆயிற்றே
சித்தமே கலங்கிக் கிடக்கின்றார்-ஏதும்
செய்வது அறியா ? நடக்கின்றார்
இத்தனைக் காலம் உழைத்தோமே-இனி
எப்படி நாமும் பிழைப்போமே
பித்தனாய்ப் புலம்பிட ஆனாரே-துயரப்
பேயிக்கு ஆளாய் போனாரே!
புலவர் சா இராமாநுசம்
தங்கள் குரல் இந்த அரசுக்கு கேட்குமா?
ReplyDeleteபாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த நிவாரணம் கிடைக்குமா?
ஆண்டாண்டு காலமாக வாழ்ந்த மக்களின் வாழ்வாதாரங்கள் திரும்ப கிடைக்குமா?
கேள்விகள் நிறைய உள்ளன..... பதில்கள்???
தமிழ் வாசி
ReplyDeleteநன்றி நண்பரே!
புலவர் சா இராமாநுசம்
ஆமாம் ஐயா புயலால் தனது வாழ்வாதாரமான விவசாய நிலத்தை இழந்து அதை மீட்டெடுக்க இன்னும் பத்து பதினஞ்சு வருடங்கள் உழைக்கப் போகும் விவசாயிகளை நினைக்கும்போது கண்ணில் நீர் வருகிறது..
ReplyDeleteநிவாரணம் முழுமையாக கிடைக்க வேண்டும்..
கவிதை வருத்தத்தை சுமந்து வந்திருக்கிறது..
த.ம-1
சந்தேகம்
"தானே" வந்து ஒரு ஆட்டு ஆட்டிட்டு போயிடுச்சு
ReplyDeleteபுத்தாண்டுக்கு முன்னால வந்து நிறைய விளைநிலங்களை
அழித்து விட்டது. விளைந்து நின்ற பயிர்களை இழந்து வாடும்
உழவர்களுக்கு அரசு நல்லது செய்ய வேண்டும்.
தங்களின் கவிதை காலத்தால் பயிர் செய்யப்பட்டது ஐயா..
தாளா வேதனையைத் தமிழால் பகிர்ந்துள்ளீர்கள். தானே புயலின் கோரதாண்டவத்தில் பலியான உயிர்களும், மரங்களும், வயல்களும், பலரின் வாழ்வாதாரங்களும் நினைக்கையில் மனம் கனத்துப் போகிறது. எத்தனை வருட உழைப்பு! யாவும் கணநேரத்தில் அழிந்ததோடு இன்னும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப இயலாமல் மக்கள் படும் அவதியை என்னவென்பது?
ReplyDeleteமறக்க முடியாத சோகம்...
ReplyDeleteகடலூரில் இயல்பு நிலை திரும்ப மாதக் கணக்காகும் என்கிறார்கள். மறக்க இயலா வடுவாகிவிட்ட சோகத்தைச் சொன்ன கவிதை மனதை நெகிழச் செய்தது ஐயா...
ReplyDeleteநெஞ்சக்குமுரல்களை உங்கள் வரிகள் சொல்கின்றன அருமை
ReplyDeleteமதுமதி said
ReplyDeleteநன்றி நண்பரே!
புலவர் சா இராமாநுசம்
மகேந்திரன் said...
ReplyDeleteநன்றி நண்பரே!
புலவர் சா இராமாநுசம்
கீதா said...
ReplyDeleteநன்றி சகோதரி!
புலவர் சா இராமாநுசம்
கவிதை வீதி... // சௌந்தர் // said...
ReplyDeleteநன்றி நண்பரே!
புலவர் சா இராமாநுசம்
கணேஷ் sa
ReplyDeleteநன்றி நண்பரே!
புலவர் சா இராமாநுசம்
நண்டு @நொரண்டு -ஈரோடு said
ReplyDeleteநன்றி நண்பரே!
புலவர் சா இராமாநுசம்
sasikala
ReplyDeleteநன்றி சகோதரி!
புலவர் சா இராமாநுசம்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...மறுபடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் சந்தோசம்..
ReplyDeleteசோகத்தைச் சொன்ன கவிதை மனதை நெகிழச் செய்தது...
இயற்கையும் அடிக்கடி தமிழரோடு மட்டுமே போட்டி போட்டுக்கொள்(ல்)கிறது !
ReplyDeleteஇத்தனைக் காலம் உழைத்தோமே-இனி
ReplyDeleteஎப்படி நாமும் பிழைப்போமே
நல்ல கவிதை. வேதனையாக இருக்கிறது.
ரெவெரி said
ReplyDeleteநன்றி நண்பரே!
புலவர் சா இராமாநுசம
ரெவெரி said
ReplyDeleteநன்றி நண்பரே!
புலவர் சா இராமாநுசம
ஹேமா said
ReplyDeleteநன்றி சகோதரி!
புலவர் சா இராமாநுசம்
Rathnavel said
ReplyDeleteநன்றி நண்பரே!
புலவர் சா இராமாநுசம
நல்ல கவிதை.
ReplyDeleteசோகம் சுமந்து வந்த கவிதை வரிகள் மேலும் கனமாக்கியது மனதை, அருமை கவி அய்யா
ReplyDeleteதானே வந்து தானே அள்ளிக்கொண்டு போயிற்று இந்த தானே... இருந்ததே கொஞ்சம் அதையுமா எடுத்துக்கொள்ள வேண்டும்.... :(
ReplyDeleteநல்ல கவிதை ஐயா....
Advocate P.R.Jayarajan said
ReplyDeleteநன்றி நண்பரே!
புலவர் சா இராமாநுசம
A.R.ராஜகோபாலன்
ReplyDeleteநன்றி நண்பரே!
புலவர் சா இராமாநுசம
வெங்கட் நாகராஜ் said
ReplyDeleteநன்றி நண்பரே!
புலவர் சா இராமாநுசம
உள்ளகுமறல்களை , சோகங்களை உருக்கத்துடன்
ReplyDeleteவெளிப்படுத்தி இருக்கிறது தங்கள் கவிதை.
எல்லாக் கஷ்டங்களையும் நாம் வான் நோக்கி
அங்குள்ள இறைவனைத் தான் பிரார்த்திப்போம்.
ஆனால் இங்கு வானே அரக்கனாய் ஆட்டி படைத்தது விட்டது.
யாரிடத்தில் முறையிட ?
இயற்கையின் சீற்றத்தினால் ஏற்பட்ட இழப்புகள் பற்றிய சொகாக் கவிதை.தகுந்த நிவாரணம் கிடைக்க வேண்டும்.
ReplyDeleteவணக்கம் ஐயா,
ReplyDeleteநல்லா இருக்கிறீங்களா?
தானேப் புயலின் கொடூரத்தினையு, அதனால் ஏற்பட்ட அவலங்களையும் கவி விருத்தத்தில் தந்திருக்கிறீங்க. இயற்கை எம்மையும் சோதிக்கிறதே. என்ன செய்வோம்?