Sunday, January 8, 2012

மலரினமே மலரினமே


 மலரினமே  மலரினமே
         மாசற்ற    மலரினமே
 நிலமடந்தை   நீள்வயிற்றில்
        நீபிறந்தாய்   ஆனாலும்
 பலரகத்தில்   பாரினிலே
       பலவகையில்    மலர்ந்தாலும
 சிலரகத்தில்  மட்டுமந்த
        சிரிக்கின்ற   மணமேனோ

 வண்ணத்தில்  பலவகை
          வடிவத்தில்   பலவகை
  எண்ணத்தில்     பலவகை
         எழுகின்ற  கவிவகை
  கண்ணைத்தான்   பறிக்கின்றீர்
        கற்பனையில்   பிறக்கின்றீர்
  பெண்ணைத்தான்   பாராட்ட
         பெருமையுடன்   சீராட்ட!

  கோடிக்   கணக்கினிலே
       குவிந்தாலும்   ஒருநாளில்
 வாடிப்    போவதனால்
      வருந்திடிதே   எமதுள்ளம்
  தேடிவந்தும்மை   தெரிவையரும்
     தேவையெனப்   விலைகொடுத்தே
  சூடிமகிழ்வாரே   மணத்தைச்
     சொல்லிப்  புகழ்வாரே

      புலவர்  சா  இராமாநுசம்
 



     

10 comments:

  1. வணக்கம்..மலரினத்தை விளக்கிச் சொல்லும் கவிப்பா அருமை அய்யா..

    த.ம-1

    அன்போடு அழைக்கிறேன்..

    உயிரைத்தின்று பசியாறு(அத்தியாயம்-2)

    ReplyDelete
  2. மலருக்கும் பெருமை சேர்த்த கவிதை....

    நன்றாக இருக்கிறது புலவரே.....

    ReplyDelete
  3. அய்யா உங்களின் ஒவ்வொரு எழுத்தும் உங்களின் கவி ஞானத்தால் மலராக மலர்ந்து மணக்கிறது.

    அருமையான கவிதை.

    ReplyDelete
  4. அருமையான கவிதை.
    நன்றி ஐயா.

    ReplyDelete
  5. மலரின் வேதனை உங்கள் மலர்மனதில்.வாழ்வு இதுதான் என்பதை யாரால் மாற்றமுடியும் !

    ReplyDelete
  6. \\கோடிக் கணக்கினிலே
    குவிந்தாலும் ஒருநாளில்
    வாடிப் போவதனால்
    வருந்திடிதே எமதுள்ளம்\\

    மலரினும் மெல்லிய மனம் ஐயா உங்களுக்கு. அழகிய மலர்களின் இயல்புகளை அழகாய்ப் பாவாக்கிய தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்..

    ReplyDelete
  7. வால் கிளாக்ல தவறான டைம் காட்டுது , கவனிங்க அய்யா

    ReplyDelete
  8. மலருக்கு மலராலே அர்ச்சனை செய்வதுபோல
    மலர்போன்ற தங்களின் கவிதை சரத்தால்
    அர்ச்சனை..
    அழகு..

    ReplyDelete
  9. அனைவருக்கும் நன்றி! நன்றி!!

    இன்னும் என் கணிணீ பழுது சரியாகவில்லை!
    மடிக் கணிணீ! தட்ட தடுமாற்றம்!
    பொறுத்தருள்க!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  10. கவியரசரே குரு நாதரே
    தாங்கள் இன்று வலைச்சரத்தில் சென்னைப்பித்தன்
    அவர்களால் மிகச் சிறப்பாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளீர்கள்
    தங்கள் கவிதைப் பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்
    Tha.ma 9

    ReplyDelete