மலரினமே மலரினமே
மாசற்ற மலரினமே
நிலமடந்தை நீள்வயிற்றில்
நீபிறந்தாய் ஆனாலும்
பலரகத்தில் பாரினிலே
பலவகையில் மலர்ந்தாலும
சிலரகத்தில் மட்டுமந்த
சிரிக்கின்ற மணமேனோ
வண்ணத்தில் பலவகை
வடிவத்தில் பலவகை
எண்ணத்தில் பலவகை
எழுகின்ற கவிவகை
கண்ணைத்தான் பறிக்கின்றீர்
கற்பனையில் பிறக்கின்றீர்
பெண்ணைத்தான் பாராட்ட
பெருமையுடன் சீராட்ட!
கோடிக் கணக்கினிலே
குவிந்தாலும் ஒருநாளில்
வாடிப் போவதனால்
வருந்திடிதே எமதுள்ளம்
தேடிவந்தும்மை தெரிவையரும்
தேவையெனப் விலைகொடுத்தே
சூடிமகிழ்வாரே மணத்தைச்
சொல்லிப் புகழ்வாரே
புலவர் சா இராமாநுசம்
வணக்கம்..மலரினத்தை விளக்கிச் சொல்லும் கவிப்பா அருமை அய்யா..
ReplyDeleteத.ம-1
அன்போடு அழைக்கிறேன்..
உயிரைத்தின்று பசியாறு(அத்தியாயம்-2)
மலருக்கும் பெருமை சேர்த்த கவிதை....
ReplyDeleteநன்றாக இருக்கிறது புலவரே.....
அய்யா உங்களின் ஒவ்வொரு எழுத்தும் உங்களின் கவி ஞானத்தால் மலராக மலர்ந்து மணக்கிறது.
ReplyDeleteஅருமையான கவிதை.
அருமையான கவிதை.
ReplyDeleteநன்றி ஐயா.
மலரின் வேதனை உங்கள் மலர்மனதில்.வாழ்வு இதுதான் என்பதை யாரால் மாற்றமுடியும் !
ReplyDelete\\கோடிக் கணக்கினிலே
ReplyDeleteகுவிந்தாலும் ஒருநாளில்
வாடிப் போவதனால்
வருந்திடிதே எமதுள்ளம்\\
மலரினும் மெல்லிய மனம் ஐயா உங்களுக்கு. அழகிய மலர்களின் இயல்புகளை அழகாய்ப் பாவாக்கிய தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்..
வால் கிளாக்ல தவறான டைம் காட்டுது , கவனிங்க அய்யா
ReplyDeleteமலருக்கு மலராலே அர்ச்சனை செய்வதுபோல
ReplyDeleteமலர்போன்ற தங்களின் கவிதை சரத்தால்
அர்ச்சனை..
அழகு..
அனைவருக்கும் நன்றி! நன்றி!!
ReplyDeleteஇன்னும் என் கணிணீ பழுது சரியாகவில்லை!
மடிக் கணிணீ! தட்ட தடுமாற்றம்!
பொறுத்தருள்க!
புலவர் சா இராமாநுசம்
கவியரசரே குரு நாதரே
ReplyDeleteதாங்கள் இன்று வலைச்சரத்தில் சென்னைப்பித்தன்
அவர்களால் மிகச் சிறப்பாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளீர்கள்
தங்கள் கவிதைப் பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்
Tha.ma 9