Saturday, January 7, 2012

மனித நேயம் இல்லையா ?


      
மனித  நேயம்   இல்லையா?
      மத்திய  அரசே  சொல்லையா?

தினமேத்  தொல்லைப்  படுகின்றான்
      தேம்பியே  மீனவன்  கெடுகின்றன்
மனமே  இரங்க  வில்லையா
       மனதில்  அரக்கனா சொல்லையா

சுண்டைக்  காய்போல்  அந்நாடே
    சொன்னால் வெட்கம்  பெருங்கேடே
அண்டையில்  இருந்தே  தரும்தொல்லை
    அளவா?  அந்தோ  துயரெல்லை

கச்சத்  தீவைக்  கொடுத்தீரே
      காரணம்  எதுவோ  ?கெடுத்தீரே
அச்சப்  பட்டே மீனவனும்ப
       அல்லல்  படுவதைக்  காண்பீரே

படகொடுப்  பிடித்தே  மீனவரைப்
      பாழும்  சிறையில்  தள்ளுகின்றான்
இடமிலை  மீனவர்  உயிர்வாழ
     எண்ணமும்  உமக்கிலை  அவர்வாழ

மாநில  அரசையும்  மதிப்பதில்லை
    மத்திய  அரசுக்கோ  செவியில்லை
நாமினி  செய்வதை  ஆய்வோமா?
      நல்லது  நடப்பின்  உய்வோமா?

 
                            புலவர்  சா  இராமாநுசம்


15 comments:

  1. உணர்வு பூர்வமான கவிதை. சம்பந்தப்பட்டவங்களுக்கு உரைக்குமா?

    ReplyDelete
  2. மாநில அரசையும் மதிப்பதில்லை
    மத்திய அரசுக்கோ செவியில்லை


    வருந்தத்தக்க உண்மை புலவரே..

    ReplyDelete
  3. முரசறைந்து நீங்கள் கூவினாலும்
    கேட்டிட அதிகார வர்க்கமாம்
    அரசுக்கு காதுகளில்லை நாதியற்று
    வாடிடும் மீனவர் தமக்காய்
    சத்தம் எழுப்பிய உங்களுக்கு...
    கவியெழுதும் அன்பு மனத்துக்கு
    முத்தங்கள்நூறு ஈந்தேன் உவப்புடனே!

    ReplyDelete
  4. மனிதநேயம் பேச்சளவில் கூட இல்லாமல் போய்விட்டது..என்ன செய்வது..

    த.ம.3

    ReplyDelete
  5. திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்.

    அருமையான வரிகள்.

    ReplyDelete
  6. //நாமினி செய்வதை ஆய்வோமா?//

    ஆய்ந்து, எதிரியைக் கொய்வது தான் வழி.

    ReplyDelete
  7. வாய்க்கா வரப்பு சண்டை இருந்தும் பாகிஸ்தான் நாட்டுக்காரன் நம் மீனவர்களை சீண்டுவதில்லை ஆனால் இலங்கை செய்யும் அநியாயத்தை கண்டும் நடுவன் அரசு கண் காத்து மூடி மௌனமாக இருப்பது கேவலம், மிகவும் கண்டிக்கத்தக்கது...!!!

    ReplyDelete
  8. தினப்படி வாழ்க்கையே போராட்டமென வாழ்பவர்களின் வேதனை தீரும் நாள் எந்நாளோ? தங்கள் ஆதங்க வரிகள் அத்தனையும் செவிடர்கள் செவியில் ஊதப்படும் சங்கொலிதான் ஐயா. என்றேனும் செவிப்பறை கிழித்து சேருமிடம் சேருமென்று நம்புவோம்.

    ReplyDelete
  9. படகொடுப் பிடித்தே மீனவரைப்
    பாழும் சிறையில் தள்ளுகின்றான்
    இடமிலை மீனவர் உயிர்வாழ
    எண்ணமும் உமக்கிலை அவர்வாழ
    படிக்கும் நமக்கு மனது வலிக்கிறது பார்க்கும் அவர்களுக்கு இறக்கம் வராதது ஏன்

    ReplyDelete
  10. மனிதநேயம் என்றால் என்ன என்று கேட்பார்கள்!
    அருமையான கவிதை ஐயா.

    ReplyDelete
  11. நாமினி செய்வதை ஆய்வோமா?
    நல்லது நடப்பின் உய்வோமா?


    நல்ல பகிர்வுக்கு பாராட்டுக்கள்..

    ReplyDelete
  12. கவனப்பிரியன்

    வருகைக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  13. தன் நிலையை தக்கவைத்துக் கொள்வதற்கே
    நம்மை ஆள்பவர்களுக்கு நேரம் போதவில்லை.
    இதில் நாட்டு நடப்புகளை கவனிப்பதற்கு எங்கே ஐயா
    அவர்களுக்கு நேரம்.....
    அருமையான இடித்துரைக் கவிதை புலவர் பெருந்தகையே.

    ReplyDelete
  14. தமிழன் என்றாலே ஒரு கேவலமாய் இருக்கிறது எங்குமே எல்லாருக்குமே !

    ReplyDelete