புலவர் கல்லுரி விடுதியில் தங்கிய
போது, இரவில் ஏற்பட்ட அனுபவம்.....!
பாயெடுத்து போட்டவுடன் துயின்ற நிலைதான்-நான்
பலநாட்கள் ஆனதய்யா பரிவே யிலைதான்
நோயெடுத்து போனதய்யா தூங்கா உடலும்-உடன்
நோக்குகின்ற நேரத்தில் மறைந்தே விடலும்
வாயெடுத்து சொல்லுகின்ற கொடுமை யன்று-தினம்
வாட்டுகின்றீ்ர் வருந்துகிறோம் தீரல் என்று
தாயெடுத்து அணைக்காத குழந்தை போல-ஐயா
தவிக்கின்றோம் மூடுமய்யா வாயை சால
நித்தம்தான் வருகின்றீர் கண்டால் உடனே-ஏனோ
நீங்கு கீன்றீர் விரைவாக உமது இடமே
சித்தம்தான் யாமறியோம் செய்யும் தொண்டே-முடிவாக
செப்பினால் நாங்களும் அதனைக் கண்டே
தத்தம்தான் செய்திடுவோம் உயிரைக் கூட-வீண்
தகராறு வேண்டாமே வயிறும் மூட
இரத்தம்தான் தேவையெனில் எடுத்துக் சொல்லும்-வந்து
இரவெல்லாம் வருவதை நிறுத்திக் கொள்ளும்
மடித்தயிடம் மேலுறையின் சந்தும் பொந்தும்-நீங்கள்
மறைந்துறையப் புகலிடமே உமக்குத் தந்தும்
கடித்தயிடம் தெரியாமல் துளியும் இரத்தம்-அட்டா
கசியாமல் கடிப்பதுதான் விந்தை நித்தம்
அடிக்கடியே வருகின்றீர் அந்தோ தொல்லை-மேலும்
அடுக்கடுக்காய் வருகின்றீர் உண்டா எல்லை!
படித்தியது போதுமினி க் காலி செய்வீர்-இன்றேல்
பழிவந்து சேருமய்ய மூட்டை யாரே!
புலவர் சா இராமாநுசம்
மூட்டையார் ரொம்ப படுத்திட்டாரா ஐயா?
ReplyDeleteஇரத்தம்தான் தேவையெனில் எடுத்துக் செல்லும்-வந்து
ReplyDeleteஇரவெல்லாம் வருவதை நிறுத்திக் கொள்ளும்
இந்த அளவுக்கு பொறுமை இழந்துவிட்டீர்களா?
த.ம-2
ஈரோட்டு சூரியன்
மூட்டையார் பேரில் பழி வந்துச்சேருமென்ற பரிவுதனை என்ன சொல்ல!
ReplyDeleteவணக்கம் ஐயா,
ReplyDeleteநல்லா இருக்கிறீங்களா?
மூட்டைப் பூச்சியின் கொடுமையினால் உறக்கம் தொலைத்திருக்கிறீங்க.
நான் நினைக்கிறேன் அடுத்த பாகத்தில் உறக்கம் தொலைத்த ஓய்வு நேரத்தில் சிந்திக்கும் போது, இயற்கையினை ரசிக்கும் போது தங்களுக்கு கவிதை பிறந்தது பற்றிச் சொல்லுவீங்க என்று!
ஹா ஹா ஹா ஹா மூட்டைகிட்டே கடி வாங்கிட்டே எழுதிய கவிதை ரசித்தேன் ரசித்தேன்...!!!
ReplyDeleteபடித்தியது போதுமினி க் காலி செய்வீர்
ReplyDeleteமிகவும் அருமை ஐயா
மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்துவதா என்பார்கள்.. இங்கே மூட்டைப்பூச்சியை நயந்து அழகிய கவிதை புனைந்த பாங்கைப் பாராட்டியே ஆகவேண்டும். கவிதை வெகுநன்று ஐயா.
ReplyDeleteஅன்புடையீர் வணம்கம் !
ReplyDeleteஎன் கணிணீ பழுது பட்டுள்ளது சரியாக நான்கு நாட்கள்
ஆகும்
நன்றயோ, மறுமொழியோ எழத இயலவில்லை
பொறுத்தருள்க!
கடிச்ச மூட்டையாரை பாட்டுப்பாடியே சொக்க வைக்கிறீங்களே !
ReplyDeleteமூட்டைபூச்சியால் வந்த கவிதை அருமை ஜயா
ReplyDeleteத.ம.7 மூட்டை கிளப்பி விட்ட கவிதை அருமை.
ReplyDeleteha...ha...ha...
ReplyDeleteNagaichuvai Then paayuthu en Kaathile. Arumai. Arumai.
TM 8.
மூட்டையும் விடுதியும் பிரிக்க முடியாதவை அய்யா! கவிதை நன்று
ReplyDeleteஅடடா மூட்டைபூச்சியாருக்கு இப்படி ஒரு கவிதை யோகம் கிடைத்திருக்கின்றது . பாடாய்ப் படுத்தினாலும் எமக்கு ஒரு நற்கவிதை காண ஒரு வழி தந்துள்ளாரே. கடித்தயிடம் தெரியாமல் துளியும் இரத்தம்-அட்டா கசியாமல் கடிப்பதுதான் விந்தை நித்தம் அற்புதம்
ReplyDeleteNanan etho pei pisasai patti kavithai endu ninachan athu muddai puuchiya patti
ReplyDeleteஅந்த மூட்டைப் பூச்சியாருக்கு
ReplyDeleteகோடானுகோடி நன்றிகள்..
அழகான கவிதை பிறக்க
காரணமாயிற்றே...
மூட்டை கடியின் அவஸ்தையின் போதும் எப்படி இப்படி அழகாக
ReplyDeleteயோசிக்க முடிகிறது மனம் கவர்ந்த பதிவு
த.ம 11
இப்படிக் கவிதை எழுதினா , சந்தோசமா , மீண்டும் வந்து கடிக்குமே அய்யா ..
ReplyDeletewww.arutkavi.blogspot.com
www.sivakumarankavithaikal.blogspot.com
அனைவருக்கும் ஒருசேர நன்றி தெரிவித்துக் கொள்கிறன்.
ReplyDeleteமடிக் கணிணீ வைத்துக் கொண்டு நேற்றுமுதல் மல்லா
டுவதால்(சரியான பழக்கமின்றி) தனித்தனி நன்றி தெரிவிக்கவே உங்கள் வலைகளைப் படித்தும் கருத்தைப் பதிவு செய்யவோ இயலவில்லை
கட்டுரைகள் அனைத்தும் எழுத்துக்கள் உரு மாறி
வருவதால் படிக்க முடியவில்லை