அன்பர்களே!
முந்தைய பதிவில் முதற்கட்டப் பணிகளைப் பற்றிய
விபரங்களைக் குறிப்பிட்டிருந்தேன்
இன்று இரண்டாவதுக் கட்டப்பணிகள் பற்றி எழுது
வதாக இருந்தேன்.அதைப் பற்றி சற்று விரிவாக எழுதவேண்டி
இருப்பதால் திங்களன்று எழுதுகிறேன்
அதற்கு முன்னதாக சிறு விளக்கம் தர விரும்புகிறேன்
முந்தைய பதிவில் மூன்று மாவட்டங்கள் என்று நான்
குறிப்பிட்டதை மற்ற மாவட்டங்கள் ஏதோ தங்களை ஒதுக்கி விட்ட
தாகக் கருதுவதுபோல் ஐயப்படுகிறேன்! எந்த மாவட்டமானாலும்
யார் விரும்பினாலும் தாராளமாக வரலாம்
மேலும் தற்போது ஏற்படுத்தும் பொறுப்பாளர்கள் தற்
காலிகமே! அவர்கள் பதவிக்காலம் இரண்டொரு மாதங்களே
ஆகும் பொங்கல் திருநாள் சென்றபின் சனவரி கடைசி வாரத்தில்
அல்லது பிப்ரவரி முதல் வரத்தில் எல்லா மாவட்டங்களைச்
சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர்களைக் கூட்டி முறையாக
பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள் அவர்களே
அதிகாரப் பூர்வமாகச் செயல் படுவபராவார்
உடனடி பதிவு செய்வதற்கும் இந்த இடைக்
காலத்தில் செய்ய வேண்டிய பணிகளைச் செய்வதற்கும்
இந்த தற்காலிக அமைப்புத் தேவையாகும்!
எந்த மாவட்டங்களில் எத்தனைப் பேர் உள்ளனர்
என்ற கணக்கு எனக்குத் தெரியாது. எனவேதான் தற்போது
பதிவு செய்ய நமக்குத் தேவை குறைந்த எண்ணிக்கை
தானே,பக்கத்துப்பக்க மாவட்டங்களே போதுமே சற்று
தூரமிருந்து வருவது வீண் சிரமம்தானே என்று கருதினேன்
ஆர்வத்தோடு யார் வருவதானாலும் நன்மையே!
மனங்கலந்து பேசுவதற்கும் வாய்ப்பாக இருக்கும்!
எத்தனை பேர் வருவார்கள் என்ற கணக்கு முன்னதாக
எனக்குத் தெரிந்தால் தான் கூட்டம் நடத்த ஏற்ற இடம்
ஏற்பாடு செய்ய இயலும்
ஆகவே யார் யார் வருகிறீர்கள் என்பதை இப்
பதிவின் கீழ், பெயர் ஊர் ஆகியவற்றைக் குறிப்பிட்டு
உறுதிப்படுத்தி மறுமொழி தருமாறு வேண்டுகிறேன்
நான்கு நாட்களுக்குள் அதாவது திங்கள்வரை
எதிர் பார்க்கிறேன்!
நன்றி! அன்பன்
புலவர் சா இராமாநுசம்
வணக்கம்
தொலைபேசி -24801690 செல் -9094766822