அன்பு சகோதரி மஞ்சுபாஷிணி அவர்களின் அன்பு ஆணை’யை ஏற்று இப் பதிவினை இங்கே பதிவு செய்துள்ளேன். நன்றி
இறை வணக்கம்-
தாய்
தந்தை
வேங்கடவன்
மிகவும் பிடித்தவை-
எல்லா வற்றுக்கும் ஆதாரமாக
வந்த தாரம்
விழாது தாங்க விழுதென தாங்கும்
நான் பெற்ற இருபெண்கள்
என்னிலும் அறிவுடமை பெற்ற
பேரர்கள் பேத்தி
பிடித்தவை-
முத்தமிழ்- இயல், இசை நாடகம்
முக்கனி-மா, பலா, வாழை
முந்நூல்-குறள், சிலம்பு, கம்பன் காவியம்
இலக்கியம்-
சங்க கால இலக்கியம்
இடைக்கால இலக்கியம்
தற்கால இலக்கியம்
வாழவியல் நெறி-
உண்மை, நேர்மை, நீதி
கடை பிடித்தன-
அ-வில் மூன்று-அன்பு,அறிவு, அடக்கம்
இ-வில் மூன்று-இரக்கம், இன்சொல், ஈகை
ப-வில் மூன்று-பண்பு, பக்தி, பணிவு
ந-வில் மூன்று-நட்பு, நன்றி, நம்பிக்கை
க-வில் மூன்று-கடமை, கண்ணியம், கட்டுப்பாடு
பொன்னுரை-
நடந்ததை மறப்போம்
நடப்பன நினைப்போம்
வருவன வரட்டும்
படித்த பிடித்த வரிகள்-
யாதும் ஊரே யாவரும் கேளீர்
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல்
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்
பாடல்-
தேவாரம், திருவாசகம், சித்தர் பாடல்
பழமொழிகள்-
குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை
கிட்டாதாயின் பட்டென மற
போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து
குணநலன்-
கோபம்(கொஞ்சம்)
பணிவும்
துணிவும்(வேண்டியளவு)
பிடிக்காதன-
அதிகாரம் பிடிக்காது
அதிகாரம் பண்ணவும் பிடிக்காது
சண்டை பிடிக்காது
சரணா கதியும் பிடிக்காது
ஆணவம் பிடிக்காது
மிகவும் பிடிக்காதன-
1 போகவிட்டு புறம் பேசுதல்
தூண்டி விட்டு வேடிக்கை பார்த்தல்
நம்ப வைத்து கழுத் தறுத்தல்
2 வஞ்சக மாகப் பழகுதல்
வன்சொல் பேசுதல்
வீண் அரட்டை அடித்தல்
3 இரக்க மின்றி நடத்தல்
ஈகையை தடுத்தல்
ஏழ்மையை இகழ்தல்
இன்னும் பல, எண்ணே இல, சொன்னது சில
விருப்பு – கணினி ,கவிதை, கருத்துரை
வெறுப்பு - பச்சேந்தி குணம்,பணத்திமிர், பகல்வேஷம்
வேண்டாத இயல்புகள்- பேராசை, பிடிவாதம், அழுக்காறு
அறியாமல் பிறர் முகம் வாட பேசிவிடுவது
அல்லல்படும் யாருக்கும் உதவமுடியாத நிலையில்
உவப்பக் கூடிய நண்பர்கள் உள்ளப் பிரியும் போது
மறக்க முடியாதது-
தமிழகத் தமிழாசிரியர் கழகதின் மாநிலத் தலைவராக பதினைந்து ஆண்டுகள்
பணியாற்றியது
அதுபோது அமைச்சர்கள், அதிகாரிகள் இடத்தில் அன்போடும், பண்போடும்,
பணிவோடும் துணிவோடும் நடந்ததை அவர்கள் பாராட்டியது
தற்போது நீங்கள் அனைவரும் என்னிடம் காட்டுகின்ற அன்பும் ஆதரவும்
மறக்க நினைப்பவை-
நண்பரகள் சிலரின் துரோகம்
சுற்றத்தார் சிலர் செய்த வஞ்சகம்
இன்னும் இன்னும்.....போதும்
நெஞ்சம் எதிர் நோக்கும் ஆசை-
1. தனி ஈழம் மலரவேண்டும்
2. நான் அதை வாழ்த்திப் பாட வேண்டும்
3. அதுவரை நான் வாழ வேண்டும்...?
முடிவு-
அன்பு நெஞ்சங்களே முத்தான மூன்று முடிச்சுகளை எழுதி விண்ணில் தவழ
விட்டு விட்டேன். தட்டினால் உங்களை நாடி வரும். ஆனால், நான் போட்ட மூன்று
முடிச்சுக்கு உரியவள், ஆம் என்னவள் மூன்று முடிச்சுகளோடு போய்விட்டவள்
வருவாளா...?