Sunday, January 1, 2012

வேண்டினேன் மன்னிக்க எனைநீரே!



இதயம் கனிந்த நல்லோரே—என்
   இதயத்தில் வாழும் பல்லோரே!
உதயம் ஆங்கிலப் புத்தாண்டே!-இன்று
   உளங்கனி வாழ்த்துகள் உங்களுக்கே!

இன்பம் எங்கும் பொங்கட்டும்!-உங்கள்
   இல்லம் செழுமையில் ஓங்கட்டும்!
துன்பம் முழுமையும் போகட்டும்!-நல்
   தூயவர் ஆட்சியே நிலைக்கட்டும்!

சாதி பேதம் நீங்கட்டும்!-எங்கும்
   சமத்துவம் எதிலும் நிலவட்டும்!
நீதி நேர்மை  தவழட்டும்!-மக்கள்
   நிம்மதி யாக வாழட்டும்!

பாடே படுபவன் ஆளட்டும்!-இந்த
   பரம்பரை ஆட்சி மாளட்டும்
கேடே பெற்றோம் எதனாலே-மிக
   கேவல மான இதனாலே!

உழைப்பவன் வாழ வழியில்லை!-நன்கு
   ஊரை ஏய்ப்பவன் தரும்தொல்லை
பிழைப்பைத் தேடும் ஏழைகளே-பாபம்
   ஏதும் அறியாக் கோழைகளே!

ஊரில் இல்லை ஒருவாரம்-எனவே
   உம்வலை காண யிலைநேரம்!
வேரில் பழுத்த பழம்நீரே-உமை
   வேண்டினேன் மன்னிக்க எனைநீரே!

                         புலவர் சா இராமாநுசம்

41 comments:

  1. தங்கள் எழில்கொஞ்சும் கவிதைக்கு ஒரு சபாஷ்...

    ReplyDelete
  2. மற்றும் தங்களுக்கு என் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. ஊரில் இல்லை ஒருவாரம்-எனவே
    உம்வலை காண யிலைநேரம்!

    அதைக்கூட அழகாகச் சொன்னீர்கள்..புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா..

    த.ம-2

    அன்போடு அழைக்கிறேன்..

    உயிரைத் தின்று பசியாறு(அத்தியாயம்-1)

    ReplyDelete
  4. தாங்கள் இவ்வாண்டு நல்ல உடல் நலம் பெறவும்
    அதிகப் பதிவுகள் தரவும் வேணுமாய்
    எல்லாம் வல்லவனை பதிவர்கள் சார்பாக வேண்டிக் கொள்கிறேன்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. தமிழன்னை பெற்றெடுத்த
    தவப் புதல்வரே
    தங்கள் தமிழின் பால்
    எனை ஈர்த்தீர் அழகாக
    எம் நெஞ்சில் நிறைந்த நீரோ
    எம் தளத்தின் பெரியீரே
    தாமதமாயினும் சங்கடமில்லை
    தங்களுக்காய் எம் தளம்
    எப்போதும் காத்திருக்கும்.


    பூத்துவரும் பொன்னெழிலாய்
    பூக்கட்டும் புத்தாண்டு!
    ஏழுவண்ண வானவில்லாய்
    வண்ண வண்ண இன்பங்கள்
    நிலைத்திருக்கட்டும் இவ்வாழ்வில்!

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் அன்பிற்கினிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. ஊரில் இல்லை ஒருவாரம்-எனவே
    உம்வலை காண யிலைநேரம்!
    வேரில் பழுத்த பழம்நீரே-உமை
    வேண்டினேன் மன்னிக்க எனைநீரே!
    ///\

    வணக்கம் ஐயா.
    புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. நல்லஆரோக்கியமான புத்தாண்டுச்செய்தி.

    ReplyDelete
  8. இதில் மன்னிக்க என்ன இருக்கிறது? இப்படி அழகுத் தமிழ்க் கவிதை கிடைக்குமெனில் எவ்வளவு நாள் வேண்டுமானாலும் காத்திருக்கலாமே. உங்களுக்கு என் இதயம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. 2011 ஆம் ஆண்டின் தமிழ் மணப் பட்டியல் வரிசையில்
    21ஆம் இடத்தைப் பெற்றமைக்கு என து மனப் பூர்வமான வாழ்த்துக்கள்
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. விடியல் வரும் என்று காத்திராமல்
    விடியலை கொண்டு வருவோம்..

    ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. நல்ல கவிதை புலவரே...

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

    2011 ஆம் ஆண்டின் தமிழ் மணப் பட்டியல் வரிசையில் 21ஆம் இடத்தைப் பெற்றமைக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்......

    ReplyDelete
  12. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  14. அழகுத் தமிழால் அற்புதக் கவிகளால் எம்மை ஆட்கொள்ளும் தங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா. உடல்நலத்தோடும் நீண்ட ஆயுளோடும் வெகுகாலம் எங்களை உம் கவிதைகளால் மகிழ்விக்க வேண்டுகிறோம்.

    ReplyDelete
  15. வணக்கம்!

    //சாதி பேதம் நீங்கட்டும்!-எங்கும்
    சமத்துவம் எதிலும் நிலவட்டும்!
    நீதி நேர்மை தவழட்டும்!-மக்கள்
    நிம்மதி யாக வாழட்டும்!//

    தங்கள் சமத்துவ கனவு பலிக்கட்டும்! புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  16. அருமையான தொடக்கம் தந்த வாழ்த்து கவிதை அய்யா
    நன்றி நலம்

    ReplyDelete
  17. இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும் குடும்பத்தாருக்கும்!

    ReplyDelete
  18. இனிய ஆங்கிலப் புத்தாண்டு
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  19. ஐயாவிற்கும், குடும்பத்தினர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    வழக்கம் போல் தேன்மழை. கவிதை.

    ஒரு வாரம் நன்றாக ஓய்வெடுங்கள்.

    ReplyDelete
  20. கவிதை வீதி... // சௌந்தர் // said

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  21. மதுமதி said...

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  22. Ramani said...


    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  23. மகேந்திரன் said

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  24. சுவடுகள் said...

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  25. கணேஷ் said...

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  26. Ramani said

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  27. suryajeeva said...

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  28. வெங்கட் நாகராஜ் said...

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  29. sasikala said


    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  30. M.R said...

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  31. கீதா said...

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  32. தி.தமிழ் இளங்கோ said...

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  33. A.R.ராஜகோபாலன் said

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  34. Rathi said...

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  35. இராஜராஜேஸ்வரி said...


    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  36. சத்ரியன் said...

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  37. நன்று.

    த.ம.10

    நீண்ட வராமைக்கு மன்னிக்கவும்.இனி தொடர்ந்து வருவேன்.

    இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    புத்தாண்டில் புதிய பொலிவோடு புறப்படட்டும் உங்கள் பதிவுகள்.

    ReplyDelete
  38. அருமை ஐயா.
    எங்களது இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  39. சாதி பேதம் நீங்கட்டும்!-எங்கும்
    சமத்துவம் எதிலும் நிலவட்டும்!
    நீதி நேர்மை தவழட்டும்!-மக்கள்
    நிம்மதி யாக வாழட்டும்!//அருமை

    ReplyDelete
  40. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete