Tuesday, December 27, 2011

மாட்சிமை மிக்க மேயரய்யா!



 ஆட்சி மாறிப் போனாலும்!-குப்பை
அவலம் நீங்கா ? ஆனாலும்
காட்சி தருதே தெருவெங்கும்!-சாக்கடை
கழிவே ஊற்றாய் மிக பொங்கும்!
மாட்சிமை மிக்க மேயரய்யா!-சற்றே
மனமும் இரங்கி பாருமய்யா!
சாட்சியாய் காணும் தெருவய்யா-பெரும்
சகதியாய் ஆனததன் உருவய்யா!

எங்கு காணிலும் குப்பைதான்-நம்
எழில்மிகு சென்னை காட்சிதான்!
பொங்கி வழியும் தொட்டியெலாம்-அதில்
போடுவார் மேலும் எட்டியவர்!
தங்கும் சாக்கடைத் தண்ணீரும்-செல்ல
தடைபட அந்தோ! மிகநாறும்!
இங்கே எடுக்க ஆளில்லை-அதை
எடுத்துச் சொல்லியும் பலனில்லை!

பாதையில் நடக்கவே வழியில்லை-குப்பை
பரவிக் கிடப்பது பெருந்தொல்லை!
வேதனை தீரும் வழிகாண்பீர்!-எனில்
வீணே நீரும் பழிபூண்பிர்!
சோதனைப் போலக் கொசுக்கடியே-எடுத்துச்
சொல்ல இயலா நெருக்கடியே
நாதம் இசைத்தேப் படைபோல-எமை
நாடி வருமோர் தினம்போல

தொற்று நோயும் வருமுன்னே-எண்ணி
தொடங்குவீர் தூய்மைப் பணிதன்னை!
மற்றது பின்னர் ஆகட்டும்!-குப்பை
மலையென கிடப்பது போகட்டும்
குற்றம் சொல்வது நோக்கமல-இது
குத்தும் கவிதை ஆக்கமல!
வெற்றுச் சொல்லும் இதுவல்ல-பட்ட
வேதனை விளைவாம் இதுசொல்ல!

அண்மை காலமாய் இவ்வாறே-ஏனோ
அடிக்கடி நடப்பது எவ்வாறே!
உண்மை எதுவோ வேண்டாமே!-உரியோர்
உணர்ந்தால் போதும் ஈண்டாமே!
நன்மை ஒன்றே உடன்தேவை-மா
நகர ஆட்சிக்கு இப்பாவை!
சொன்னேன் ஐயா! தவறில்லை-ஆவன
செய்வீர் வேறு வழியில்லை!
புலவர் சா இராமாநுசம்

 

19 comments:

  1. எத்தனை ஆட்சி வந்தாலும் சரி, எத்தனை மேயர்கள் வந்தாலும் சரி இந்த மாதிரி அவல நிலை மாறாது ஐயா.

    ReplyDelete
  2. அருமையாக எடுத்து சொல்லி இருக்குறீங்க அய்யா...!!!

    ReplyDelete
  3. மக்களோடு மக்களாய் வாழ்ந்தாலொழிய மக்களின் துயரம் ஆள்பவர்களுக்கு ஒருநாளும் புரியப்போவதில்லை. மிகவும் அழுத்தமான வரிகளில் ஆதங்கம் வெளிப்படுத்தியுள்ளீர்கள். சமூக அக்கறை தெறிக்கும் வரிகளுக்குப் பாராட்டுகள் ஐயா.

    ReplyDelete
  4. என்னங்கைய இதுக்கெல்லாம் அவங்களுக்கு நேரம் ஏது? மேயரா பதவி வந்ததுக்கு வாழ்த்துகளுக்கு நன்றி சொல்லி முடிக்க விருந்துகளிக்கவே அவங்களுக்கு சரியாய் இருக்கும் அவங்களப்போய் நாம தொல்லபன்னலாமா?

    இப்படியே நாம புலம்பிகிட்டு இருக்கவேண்டிதான் முளம்பு நம்பள புடிங்கிட்டிடே இருக்கும்
    புது புது வியாதி வந்துகிட்டே இருக்கும்

    ReplyDelete
  5. -மேயர்கள் காதுகளுக்கு இந்த மாதிரி கவிதைகள் பட்டு ஏதாவது மாற்றம் நடந்தா நல்லா இருக்குமேன்னு ஆசையாருக்கு... எங்க... நமக்குள்ள பேசி ஆறுதல் படுத்திக்க வேண்டியதாயிருக்கு... நற்கவிதைக்கு நன்றி.

    ReplyDelete
  6. மாற்றம் மாற்றம் தரும் என்று எதிர்பார்த்தேம்
    ஆனால் அது ஏற்றம் இல்லாமல் இருக்கிறது..

    ReplyDelete
  7. மேயரின் மீது எதிர்பார்ப்புகள் நிறையத்தான் இருக்கிறது ..என்ன செய்கிறார் என்றூ பார்ப்போம்..

    'நன்மை ஒன்றே உடன் தேவை'

    த.ம-4


    அன்போடு அழைக்கிறேன்..

    நாட்கள் போதவில்லை

    ReplyDelete
  8. ////ஆட்சி மாறிப் போனாலும்!-குப்பை
    அவலம் நீங்கா ? ஆனாலும்
    காட்சி தருதே தெருவெங்கும்!-சாக்கடை
    கழிவே ஊற்றாய் மிக பொங்கும்!
    மாட்சிமை மிக்க மேயரய்யா!-சற்றே
    மனமும் இரங்கி பாருமய்யா!
    சாட்சியாய் காணும் தெருவய்யா-பெரும்
    சகதியாய் ஆனததன் உருவய்யா!
    /////

    சம்மந்தப்பட்டவர்கள் உணரவேண்டும் அருமையான கவிதை ஜயா

    ReplyDelete
  9. புலவர் பெருந்தகையே,
    பிறக்கும்போதே வெள்ளிக் கரண்டியுடன் பிறந்தவர்கள்..
    நாம் படும் துயரமும், சுற்றுப்புறக் கேடால் நாம் படும் இன்னலும்
    நன்கு உறைக்கும்படி அழகாக் சொல்லியிருக்கீங்க.
    உணரட்டும் உற்றவர்கள்.

    ReplyDelete
  10. Arumai Ayya. Vendukol Niraiverinal nallathu.

    TM 10.

    ReplyDelete
  11. குப்பைகளை எல்லாம் அள்ளிக் கொண்டு போய் மேயர் வீட்டின் முன்னால் கொட்டி விட்டு வாருங்கள்.

    ReplyDelete
  12. பாதையில் நடக்கவே வழியில்லை-குப்பை
    பரவிக் கிடப்பது பெருந்தொல்லை!
    சொன்ன விதம் அருமை . நன்றி ஐயா.

    ReplyDelete
  13. அருமையான குறிக்கோள் தாங்கி நிற்கும் கவிதை அருமை ஐயா

    த.ம 11

    ReplyDelete
  14. சத்தமா சொல்லுங்க ஐயா.கேட்குமா தெரில !

    ReplyDelete
  15. இவையெல்லாம் நடக்குமா? நடக்கும் என்று நம்புவோம் ஐயா! (வேறு வழியில்லை)
    என் வலையில் :
    மெய்ப் பொருள் காண்பது அறிவு-ஏன்?

    ReplyDelete
  16. இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா.இன்னும் சுகத்தோடு வாழ்வும் என் வேண்டுதல்கள் !

    ReplyDelete
  17. ஐயா சௌக்கியமாக இருக்கிறீர்களா?

    பொறுமையாக படித்து கருத்திடுவேன் ஐயா...

    மனம் நிறைந்த அன்பு புத்தாண்டு நல்வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஐயா...

    ReplyDelete