ஓட்டு ஓட்டு என்றீர்கள்-நம்
ஊரை ஆளச் சென்றீர்கள்!
கேட்டு வாங்கிப் போனீர்கள-பின்
கேடே செய்வதாய் ஆனீர்கள்!
நாட்டு நடப்பைப் பாருங்கள்-மிக
நன்றா? ஒன்றா? கூறுங்கள்!
காட்டுக் கூச்சல் இன்றேதான்-தினம்
கட்சிகள் செய்வது ஒன்றேதான்!
மக்கள் அவையே கூடுவதும்-உடன்
மாநில அவையே கூடுவதும்
தக்கது பேசி முடிப்பதற்கா-வீண்
தகராறு செய்தே கெடுப்பதற்கா
அக்கரை இல்லை யாருக்குமே-எதையும்
ஆய்வதும் இல்லை பேருக்குமே
துக்கமே உண்டா துளிகூட-காணும்
தொடர்கதை ஆனது நாம்வாட
ஒவ்வொரு முறையும் நடக்குதய்யா-தினம்
உண்மை! உண்மை! இதுபொய்யா
இவ்வகை நடப்பின் எவ்வாறே-நாடு
ஏற்றம் பெறுமா? அறிவீரே!
செவ்வகை ஆட்சி நடைபெறுமா?-நன்கு
சிந்தனை செய்யின் தடைபடுமா!
எவ்வகை நலமென அவைதன்னில்-பேசி
எடுப்பதே முடிவு சரியெண்ணில்!
புலவர் சா இராமாநுசம்
அரசியல் கட்சிகளின் நாடகத்தைச் சாடிவந்த கவிதை அழகு புலவரே தேவை மக்கள் கவலையே அன்றி கூச்சல் குழப்பம் அல்ல அவையின் அழகு புரியாதவர்களுக்கு ஓட்டளிப்பதும் கண்டிக்க வேண்டிய விடயம்!
ReplyDeleteஅரசியல் குழப்பங்கள்....!!!
ReplyDeleteதனிமரம் said
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
MANO நாஞ்சில் மனோ said
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
நண்டு @நொரண்டு -ஈரோடு said
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
இவர்களுக்கு மக்களைவையில் அமர்ந்து
ReplyDeleteவிவாதிப்பதைக் காட்டிலும், அவசரமான வேறு வேலை
இருந்தால் அதற்காக ஒத்திவைத்து விட்டு செல்கிறார்கள்....
அருமையாக கவி புனைந்தீர்கள் புலவர் பெருந்தகையே....
மகேந்திரன் said...
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
ஆமாம் அய்யா! தங்கள் யோசனை சரியானதே! சிந்திக்கவேண்டியவர்கள் சிந்திக்க வேண்டும்.
ReplyDeleteமக்கள் அவையே கூடுவதும்-உடன்
ReplyDeleteமாநில அவையே கூடுவதும்
தக்கது பேசி முடிப்பதற்கா-வீண்
தகராறு செய்தே கெடுப்பதற்கா?
நல்ல கேள்வியை முன்வைத்தீர்கள்..
வாக்கு (TM-06)
அன்போடு அழைக்கிறேன்..
மௌனம் விளக்கிச் சொல்லும்
நல்ல கேள்விகள் ஐயா
ReplyDeleteகண்டவர்களிடம் நாட்டக் கொடுத்தால் இப்படி புலம்ப வேண்டியது மட்டுமே மக்களின் தலைவிதி
ReplyDeleteஆதங்கக் கவிதை
மிக நன்று ஐயா
மக்கள் அவையே கூடுவதும்-உடன்
ReplyDeleteமாநில அவையே கூடுவதும்
தக்கது பேசி முடிப்பதற்கா-வீண்
தகராறு செய்தே கெடுப்பதற்கா
அக்கரை இல்லை யாருக்குமே-
உண்மையான வரிகள் நன்றி ஐயா.
அமளி மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் இது நடக்க ஆகும் செலவு லட்சகணக்கில் எனும்போது இன்னும் அதிக கோபம் வருகிறது....
ReplyDeleteநல்ல கவிதை வரிகள். தொடருங்கள் புலவரே....
shanmugavel said...
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
மதுமதி said
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
கவி அழகன் said...
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
நிவாஸ் said...
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
sasikala said...
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
வெங்கட் நாகராஜ் said...
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
கவிதையில் அரசியல் .. அருமை
ReplyDeleteஇன்றய ஸ்பெஷல்
ReplyDeleteநடிகர் விஜய்யின் நண்பன் சிறப்பு போட்டோ பதிவு
மஹாத்மா காலத்திலும் அரசியல் இருந்தது...
ReplyDeleteகாமராஜ் காலத்திலும் அரசியல் இருந்தது....
ஆனால் அப்போதெல்லாம் அரசியலால் பொதுமக்களுக்கு எத்தனையோ நன்மைகள் நடந்தது....
ஆனால் இப்போதோ அதற்கு நேர்மாறாக மக்களால் அரசியல்வாதிகள் நன்றாகவே இருக்கிறார்கள், தன் நலனை பார்த்துக்கொள்ளவே அரசியலில் குதிக்கிறார்கள்....
அப்படிப்போன்றவர்களை சாட்டையடி வரிகளால் நல்ல கேள்விக்கணைகளுடன் படைத்த மிக அருமையான கவிதை வரிகள் ஐயா...
அன்பு நன்றிகள் பகிர்வுக்கு....
அன்புடன் என் நலன் விசாரித்தமைக்கு அன்பு நன்றிகள் ஐயா...
தங்கள் உடல்நலம் எப்படி இருக்கிறது ஐயா?
தங்கள் ஆதங்கம் உணர்த்தும் வரிகள் அருமை ஐயா. சிந்திக்கவேண்டியவர்கள் சிந்திப்பார்களா?
ReplyDelete