பதிவர்களே! நமக்கொருப் பாதுகாப்பு வேண்டாமா...?
அன்பின் இனிய தோழமை மிக்க பதிவர்களே!
வணக்கம்!
விண்ணில் ஒளிவிடும் நட்சத்திரங்கள் போல
வலைவானில் ஒளிவிடும் நம் வலைகளுக்கு விரைவில்
அரசின் கட்டுப்பாடு வருகின்ற சூழ்நிலை உருவாகி வருகிறது
அது எப்படி வேண்டுமானாலும் வரலாம். இதுவரை
சுதந்திரமாக எழுதிவந்த, நம் கருத்துகளை அடக்கவும் ஒடுக்கவும்
முற்படலாம். அதனால் சிலர் இன்னலுக்கு ஆளாகலாம் அவற்றை
எதிர்கொள்ள நமக்குள் ஒற்றுமை வேண்டும்.
இதற்கென ஓர் அமைப்பை,இயக்கத்தை உருவாக்கி
சட்ட திட்டங்களை அமைத்து சங்கப்பதிவுப் அலுவலகத்தில்
பதிவு செய்யவேண்டும்
தங்கம் செய்யாததைக் கூட சங்கம் செய்யும்
என்று சொல்வார்கள்
நீண்ட காலம் தொழிச்சங்க வாதியாகவும்
தலைவனாகவும் நான் பணியாற்றி உள்ளதால்
இவ்வாறு, அமைப்பு இருக்குமானால் நம் உரிமைகளை
எப்படி பாதுகாக்க முடியும் என்பதை அறிவேன்
உலகத் தமிழ் வலைப் பதிவாளர்கள் சங்கம்
-----------------------------------------------------------------------------
என்றோ அல்லது வேறு,( அனைவரின் கருத்துக்கு ஏற்ப)
பெயரிலோ செயல்படலாம்
முதற்கண், இக்கருத்தை ஏற்றுச் செயல்படலாம்,
அமைப்பை உருவாக்கலாம் என்று கருதுகின்றவர்கள் இப் பதிவின்
கீழ் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டுகிறேன்
நிறைவாக நீங்கள் ஆதரவு தெரிவித்தால் எப்படி
அமைக்கலாம் என்பதை விரிவாக ஆராயலாம்
முதலில், அமைப்பு வேண்டுமா வேண்டாம
என்பதைத் தெளிவுப் படுத்துங்கள்
பிற பின்னர்
அன்பன்
புலவர் சா இராமாநுசம்
கண்டிப்பாக சங்கம் வேண்டும்... என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்.. ஆலோசனை செய்யலாம் தோழர்
ReplyDeleteநிச்சயமாக வேண்டும் அய்யா, உங்கள் வழி நடக்க ஆவலாக உள்ளேன்.
ReplyDeleteகண்டிப்பாக ஐயா...
ReplyDeleteஅமைப்பு அவசியம். உங்களுக்கு அனுபவம் இருப்பதால், அதற்கான செயல் வடிவத்தை ஒரு பதிவாக எழுதி அனைவரின் கருத்துக்களை/ஆலோசனைகளை பின்னூட்டத்திலோ, மின்னஞ்சலிலோ பெறலாமே!
ReplyDeleteஅமைப்பு ஒன்று ஏற்பட்டால் நல்லது தான் என்று தோன்றுகிறது, ஐயா.
ReplyDeleteநல்லதொரு கருத்தை முன்வைத்திருக்கிறீர்கள். நிச்சயமாக செயல்வடிவம் கொடுக்கப்படவேண்டும்.
ReplyDeleteநிச்சயமாகக் தேவை ஐயா!
ReplyDeleteநிச்சயமாக செய்யலாம் ஐயா
ReplyDeleteகபில் சிபலின் நடவடிக்கைகள் சரியில்லை, பதிவுலகமும் ஒரு மீடியாதான் எனவே நமக்கும் கருத்து சுதந்திரம் வேண்டும், இந்து சுதந்திர ஜனநாயக நாடு என்பதை காங்கிரஸ்'காரர்கள் உணரவேண்டும், இதற்க்கு பதிவுலக ஒற்றுமை தேவை என்பதால் உடனடியாக "சங்கம்" அமைக்க வேண்டும் நான் ரெடி புலவரே...!!
ReplyDeleteஉங்கள் பதிவை என் எல்லா தளங்களிலும் இணைத்து ஷேர் பண்ணி விட்டேன்...!
ReplyDeleteஉங்களுக்கு பின்னால் நாங்கள் இருப்போம்!!
ReplyDeleteசங்கம் தேவை ஐய்யா..நீங்கள் அடிக்கோடிடுங்கள்..
ReplyDeleteகவலைப்பட வேண்டாம் ஐயா...
ReplyDeleteவலைப்பூக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.. சமூக வலைத்தளங்களான ஆர்குட், பேஸ்புக், குகூள் பிளஸ், டுவிட்டர் போன்றவற்றுக்குதான் இந்த கட்டுப்பாடுகள்...
இருந்தலும் தாங்கள் சொல்வது போல் இதுமாதிரி ஒரு அமைப்பு இருந்தால் நன்றாகத்தான் இருக்கும்
ReplyDeleteஅவசியம் வேண்டும்
ReplyDeleteதொடங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள்
தூணாகதாங்க நாங்கள் தயார்
த.ம 5
ReplyDeleteபதிவர்கள் சங்கம் வைப்பதை விட கருத்து சுதந்திரத்துல ஆர்வம் பிடிப்புள்ள வழக்கறிஞர்கள் குழு ஒன்றை ஏற்படுத்தி அவர்களின் வழி காட்டுதல் மற்றும் சட்ட உதவியுடன் செயல்படுவது நல்லது.
ReplyDeleteம் ...
ReplyDeleteஎன்னுடைய முழு ஆதரவையும் மனமகிழ்ச்சியோடு வழங்குகிறேன். கண்டிப்பாக செய்யுங்கள். என்ன செய்ய வேண்டும்? எங்கு வரவேண்டும்? எவ்வளவு கொடுக்க வேண்டும்? சொல்லுங்கள். துரித நடவடிக்கை எடுங்கள் அய்யா!
ReplyDeleteஅருமையான பதிவு.
தமிழ்மணம் வாக்கு 6.
//MANO நாஞ்சில் மனோ said... கபில் சிபலின் நடவடிக்கைகள் சரியில்லை, பதிவுலகமும் ஒரு மீடியாதான் எனவே நமக்கும் கருத்து சுதந்திரம் வேண்டும்//
ReplyDeleteகபில் சிபல் திருட்டு மூஞ்சி,அந்தாளு நடவடிக்கையெல்லாம் பத்தி சொன்னா வாயில கைய வச்சுப் பார்த்துகிட்டா இருப்பாரு மனோ:)அன்னா ஹசாரே குழுவுக்கே திசை திருப்பி தண்ணி காட்டப் பார்த்த காங்கிரஸ்க்கு பதிவர்கள் எல்லாம் எந்த மூலை?நல்லவேளை தகவல் தொழில் நுட்பத்தை சீனாவும்,இந்தியாவும் கண்டுபிடிக்கல.
தமிழ்ச் சங்கமே அமைத்த தமிழர்களுக்கு பதிவுலக சங்கம் செய்வது ஒன்றும் பெரிய விசயமில்லை.இதில் என்ன சிக்கல்ன்னா இதற்கு முன்பே சங்கம் மாதிரி அமைப்பு ஏதாவது செய்யலாமென்று நினைக்க அப்புறம் நண்டுக்கதையாகி விட்டதைப் பதிவுகளைப் படித்து அறிந்து கொண்டேன்.சிலருக்கு இப்படியே மிதக்கும் நிலையிலேயே இருக்கலாமே என்ற எண்ணமும் இருக்குது.
சட்டபூர்வமாக இயங்கும் அமைப்புக்கு எனது ஆதரவு.
அவசியம் வேண்டும் ஐயா
ReplyDeleteஇந்தப் பேச்சைக் கேளுங்கள்
ReplyDeleteகருத்து சுதந்திரம் என்றால் என்ன
தனி மனித கருத்து சுதந்திரம் முக்கியமா
அல்லது
தனி நபர்களின் கூட்டன ஒரு சமூகத்தின் சுதந்திரம் முக்கியமா
தனி மனித பேச்சு/எழுத்து/காணொளி சுதந்திரம் எவ்வாறு அடுத்தவர்களை பாதிக்காமல் இருக்க வேண்டும்
என்று சஷி தரூர்ர் இறுதி நிமிடங்களில் அழகாக விளக்கி உள்ளார்.
http://www.jgu.edu.in/JSGP_Video/engine/swf/player.swf?url=..%2F..%2Fdata%2Fvideo%2FDrShashiTharoor%2CProfessorYSRMurth.flv&volume=100
http://www.jgu.edu.in/JSGP_Video/engine/swf/player.swf?url=..%2F..%2Fdata%2Fvideo%2FDrShashiTharoor%2CProfessorYSRMurth.flv&volume=100
ReplyDeleteநல்ல சிந்தனை.நடக்க வேண்டும்.
ReplyDeleteவணக்கம் ஐயா..
ReplyDeleteகண்டிப்பாக நமக்கோர் சங்கம் தேவைதான்
உங்களுக்கு பின்னால் நாங்கள் இருப்போம்
வணக்கம் ஐயா! நலமா?
ReplyDeleteஎங்கேயும் கருத்து சுதந்திரம் இருக்கக்கூடாது என்று முடிவெடுத்துள்ளார்கள் போலும்..
நீங்கள் சொல்வதை பொல கட்டாயம் ஒரு சங்கம் இருப்பது அவசியம்..
இன்றுதான் நான் கேள்விப்படுகிறேன் தங்கம் செய்யாததைக் கூட சங்கம் செய்யும் என்ற சொல்லாடலை.. நன்றி ஐயா!!
சங்கம் இல்லாமல் சங்கடங்கள் தீராது.சங்கமாய் சேருவோம்
ReplyDeleteஉண்மை தான் ஐயா...நம்மிடையே ஓர் அமைப்பு நிச்சயம் தேவை
ReplyDeleteபாரதி பற்றிய பதிவு: என்றும் அழியா பாரதி-http://vijayandurai.blogspot.com/2011/12/blog-post_10.html.
வருகை தந்து மறக்காமல் தங்கள் கருத்தை பதியவும்...
சட்ட முறையை பின்பற்றிய சங்கத்திற்கு என் ஆதரவு உண்டு
ReplyDeleteவணக்கம் ஐயா,
ReplyDeleteநல்லதோர் பதிவினைத் தந்திருக்கிறீங்க. சுதந்திர ஊடகங்களாக வலைப் பூக்கள் செயற்படச் சங்கம் அவசியம்!
அதற்கான முன்னேற்பாடுகளை போட்டிகள் ஏதுமின்றி நடு நிலமையுடன் செய்ய வேண்டும்! அப்போது தான் சங்த்தின் செயற்பாடுகள் வெற்றிகரமாக அமையும் ஐயா.
தேவையை நயமாகச் சொல்லிவிட்டீர்கள் புலவரே.
ReplyDeleteகண்டிப்பாக சங்கம் தேவை.. நானும் உங்கள் கருத்துக்கு உடன்படுகிறேன்.. நன்றி..
ReplyDeleteபுலவர் சா இராமாநுசம் said...
ReplyDeleteஅன்பின் இனிய வை கோ!
இக் கதை தினமலர் வார இதழ்
பரிசுப்போட்டியில் பரிசு பெற்றது வியப்பல்ல
பெறவில்லை என்றால்தான் வருத்தம்! வியப்பு!
ஐயா! தங்கள் கதைகளைத்
தொகுத்து நூலாக வெளியிடலாமே!
புலவர் சா இராமாநுசம்
December 10, 2011 10:08 PM
ஐயா, வணக்கம். மேலேயுள்ள தங்கள் பின்னூட்டம் மூலம், நான் எழுதிய “தாயுமானவள்” சிறுகதையின் நிறைவுப்பகுதியைத் தாங்கள் படிக்கவில்லை என்பது தெரிகிறது. தயவுசெய்து அதையும், அதன் கீழ் வந்துள்ள பின்னூட்டங்களையும், அதற்கு நான் எழுதியுள்ள பதில்களையும் படித்துப்பாருங்கள், ஐயா.
இணைப்பு: http://gopu1949.blogspot.com/2011/12/3-of-3.html
மேலும் தங்களுடன் அவ்வப்போது நான் தகவல் பரிமாற்றம் செய்துகொள்ள ஏதுவாக தங்களின் e-mail ID ஐ என் e-mail ID யான valambal@gmail.com க்குத் தாருங்கள் ஐயா. இது என் அன்பான வேண்டுகோள்.
செய்வீர்கள் தானே! அன்புடன் vgk
சங்கம் தேவை ஐய்யா...
ReplyDeleteமக்களால் மக்களுக்காக நடத்தப்படுவதே ஜனநாயகம் என்பர்.ஜனநாயகத்தின் கருத்து சுதந்திரத்தை அதன் குரல் வளையை நெரிக்கும் எந்த செயலையும் நாம் குழுவாக இணைந்து எதிர் கொள்வது நல்ல,தேவையான முயற்சி.
ReplyDeleteஎங்கள் ஆதரவு நிச்சயம் உண்டு!
தங்கள் முன்நின்று துவக்கிய இந்த முயற்சிக்கு நன்றி!
நிச்சயம் தேவை அய்யா
ReplyDeleteமிக்க நல்ல யோசனை
மேற்படி என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்
ஒரு அமைப்பு நல்லதுதான். எழுத்துத் திருட்டு, காப்புரிமை, கலந்துரையாடல், வழிகாட்டல் மற்றும் இது போன்ற காரியங்களுக்காக!
ReplyDelete“கபில்” பற்றி அலட்டிக் கொள்ளாதீர்கள். அவர் விருப்பப் படுவது நடவாது! சும்மா ‘பூச்சி’ காட்டலாம்! அவ்வளவே! இன்றைய LPG காலத்தில் (liberalization / privatization / Globalization) இதுவெல்லாம் நடக்காது. அவசர நிலை போன்று சிறப்பு அதிகாரங்களை கையில் எடுத்துக் கொண்டால் ஒழிய, சென்ஸார் நடவாது! மேலும் கபில்சிபல் சொன்னது சமூக வலைத்தங்களைத் தான்! பிளாக்கர்களை அல்ல!!
ஆனால் ஒரு விஷயம் பிளாக்குகளில் நடப்பதைக் காண்கிறேன். சில வெறுப்பு உமிழும் கட்டுரைகள், இன, மொழி துவேஷங்கள் இருக்கத்தான் செய்கின்றன. கருத்து வேறு பாடுகளே இன்றி Xerox மிஷின்கள் போல எழுத்தாளர்கள் இருக்க முடியாது தான். ஆனால், எழுத்தில் கண்ணியம் காக்கப் படுவதும், மானுடம் வளர்தலும், சமுதாயத்தினை ஒரு மேம்பட்ட நிலைக்கு இட்டுச் செல்வதும் அவசியமல்லவா?
கலை- இலக்கியங்களின் முக்கிய பணியே மக்களை தரமுயர்த்துவதும், மேல் நிலைப் படுத்துவதும் தானே? ஆனால் இதற்கு மாறாக சமூக வலைத்தளங்களில் சில நடைபெறுகின்றனவே! சில, பாலியல்வக்கிரங்களுக்கும், வன்முறையில் நம்பிக்கை கொண்டோரும், இம்மாதிரியான சமூக வலைத்தளங்களை பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பது உண்மைதானே?
தனிமனித சுதந்திரம் என்பதற்கும் ஒரு எல்லை உண்டு. நாட்டின் இறையாண்மையினை கெடுக்காமல் இருக்கும் வரையிலும், இன, மொழி சண்டைகளை தூண்டிவிடாதவரையிலும் அவை கட்டுப் பாட்டிற்கு உரியதல்ல. பொறுப்பு இல்லாத சுதந்திரம் அராஜகம்.
அன்புடன்
இரா. பலராமன்.
Orbekv.blogspot.com
மிகவும் சிறப்பான கருத்து ஐயா உங்களுக்கு அந்த தகுதி முழுமையாக வுண்டு உடனே தொடங்குங்கள் பணிவான வணக்கங்ளுடன்
ReplyDeleteநல்லதொரு முயற்சியை முன்வைத்தத் தங்களுக்கு என் பாராட்டுகள் ஐயா.
ReplyDeleteநல்ல முயற்சி தான் ஐயா ...ஆனால் அப்படியான அமைப்பு எந்தளவில் உரிமைகளை கொண்டிருக்கும்??
ReplyDeleteதங்கம் செய்யாததைக் கூட சங்கம் செய்யும்
ReplyDeleteஎன்று சொல்வார்கள்
தங்கள் தங்கக் கையால் போட்ட
விதை விருட்சமாக வாழ்த்துகள்..
நல்ல முயற்சி.
ReplyDeleteநல்லதைச் செய்ய நினைக்கிறீர்கள்.நல்லது ஐயா !
ReplyDeleteதொடருங்கள் வருவார்கள். வருகிறோம்.
ReplyDeleteஅவசியமான ஒன்று,நீங்களே முன் நின்று செய்யலாம்.
ReplyDeleteஅண்ணே அமைப்பு தேவையே...எப்படின்னு சொல்லுங்க செய்ஞ்சிப்புடுவோம்!
ReplyDeleteஆரம்பிச்சிடுவோம். ஊர் கூடி தேர் இழுப்போம்.
ReplyDeleteநல்லது சார்... அதற்க்கான வழிமுறைகளை ஆராயுங்கள்....
ReplyDeleteநானும் தங்களை பின் தொடர்கிறேன்
ReplyDeleteவாழ்த்துகள் நாம் கண்டிப்பாக பதிவர்கள் சங்கம் ஒன்றை துவங்க வேண்டும், அதற்கு முழு ஒத்துளைப்பையும் அளிக்க தயார்
ReplyDelete