அள்ளும் நெஞ்சைச் சிலம்பென்றே-அன்று
அறைந்தார் பாரதி மிகநன்றே
வள்ளுவன் தன்னை உலகிற்கே-வாரி
வழங்கிய வான்புழ் தமிழ்நாடாம்
தெள்ளிய தேனாய்க் கனிச்சாராய்-நன்கு
தேர்ந்துத் தெளித்தப் பன்னீராய்
உள்ளியே எடுத்துச் சொன்னாரே-முற்றும்
உணர்ந்த ஞானி அன்னாரே
ஆட்சியை மறுக்கத் துறவியென-அன்று
ஆனார் இளங்கோ அடிகளென
காட்சியை எண்ணிப் பார்பீரே-மாறிக்
கட்சிக்கு கட்சிப் போவீரே
மாட்சியா சற்று நில்லுங்கள் உங்கள்
மனதைத் தொட்டுச் சொல்லுங்கள்
சாட்சியா வேண்டும் மேன்மேலும்-நாளும்
சண்டைகள் தேவையா இனிமேலும்
சேவை செய்ய என்கின்றீர்-பதவியில்
சென்றதும் என்ன செய்கின்றீர்
தேவை உமக்கெதோ தேடுகின்றீர்-ஆனால்
தேர்தல் வந்தால் ஒடுகின்றீர்
சாவைத் தடுத்திட ஆகாதாம்-என்றும்
சாதிச் சமயம் போகாதாம்
பாவைக் கூத்தே நாள்தோறும்-நடக்க
பாவம் மக்கள் ஊர்தோறும்
நஞ்சென ஏறிட விலைவாசி-நொந்து
நாளும் மக்கள் அதைப்பேசி
நெஞ்சிலே நிம்மதி துளியின்றி-தினம்
நீங்கா வேதனை மனதூன்றி
பஞ்சென அடிபட வாழ்கின்றார்-கடும்
பற்றாக் குறையில் வீழ்கின்றார்
வெஞ்சினம் அவர்பெறின் என்னாகும்?-உடன்
விலையைக் குறைப்பீர் ஆள்வோரே!
புலவர் சா இராமாநுசம்
அரசாங்கமே ஆள்வோரே எண்ணி பார்ப்பீர் சீர் தூக்கிப்பார்ப்பீர்....அருமையான சாடல்...!!!!
ReplyDeleteஅருமை.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
தோழர்,
ReplyDeleteநச்
நச்
நச்
நச்
வரிகள்
நன்றாகக் கேட்டீர்கள் புலவரே..
ReplyDeleteஇன்று தினமணியில் ஒரு கவிதையைக் குறிப்பிட்டிருந்தார்கள்..
நின்று ஓட்டுக் கேட்டு
உக்கார்ந்து ஊழல் செய்து
படுத்துக்கிட்டே ஜாமின் வாங்குவதுதான் அரசியல் என்று..
//சேவை செய்ய என்கின்றீர்-பதவியில்
ReplyDeleteசென்றதும் என்ன செய்கின்றீர்
தேவை உமக்கெதோ தேடுகின்றீர்-ஆனால்
தேர்தல் வந்தால் ஒடுகின்றீர்
சாவைத் தடுத்திட ஆகாதாம்-என்றும்
சாதிச் சமயம் போகாதாம்
பாவைக் கூத்தே நாள்தோறும்-நடக்க
பாவம் மக்கள் ஊர்தோறும் //
உண்மை ஐயா..இவர்களுக்கு வாக்களித்த மக்களாகிய நாம் தான் பாவம்
சரியான சாட்டையடி கேள்விக்கவிதை ஐயா..
//நெஞ்சிலே நிம்மதி துளியின்றி-தினம்
ReplyDeleteநீங்கா வேதனை மனதூன்றி
பஞ்சென அடிபட வாழ்கின்றார்-கடும்
பற்றாக் குறையில் வீழ்கின்றார்//
ஏழைகளின் ஆதங்கத்தை கவிதையில் சொல்லியிருக்கிறீர்கள் அய்யா! அருமை.
நாளும் மக்கள் அதைப்பேசி
ReplyDeleteநெஞ்சிலே நிம்மதி துளியின்றி-தினம்
நீங்கா வேதனை மனதூன்றி
பஞ்சென அடிபட வாழ்கின்றார்// நிதர்சன உண்மை அய்யா..
அவர்களின் ஊழலை குறைத்தால்
ReplyDeleteவிலையும் தானாக குறையும்
அருமையான சாடல் கவிதை அய்யா
கவிக்குரல் கேட்டு ஆள்வோர்
ReplyDeleteசெவிப்பறை கொஞ்சம் கிழியட்டும்
ஆண்டவா கொஞ்சம் அருள் புரி
த.ம 6
உரக்க ஒலிக்கட்டும் உங்கள் குரல்
ReplyDeleteஅருமையான கவிதை.
ReplyDeleteநன்றி ஐயா.
அய்ந்துவருடத்திற்கொருமுறை வந்துடுதே
ReplyDeleteபாவை கூத்து.மறந்தும்ஓடுகிறாரே முத்திரை
குத்த.
பண வீக்கம் 6.6 என்கிறது காங்கிரஸ் அரசு. புள்ளி விபரங்களை மட்டும் கட்டுப்படுத்தும் அரசு இந்தியாவை ஆள்கிறது. ஊக வணிகத்தைக் கட்டுப்படுத்துங்கள் என்றுச் சொல்ல அரசியல்வாதிகள் யாருமில்லை.
ReplyDeleteArumai Pulavare Arumai. Kaalathukku eatra pathivu. Tamilmanam Vote poda mudiya villai.
ReplyDeleteTM 11. Vote podachu Ayya.
ReplyDeleteநிச்சயமாக உங்களைப்போன்றவர்கள் குரல் கொடுத்தேயாகவேண்டும்.நல்லது ஐயா !
ReplyDeleteஐயா.... எத்தனையோ குரல்கள் ஒலித்தாலும், அரசாங்கம் சொரணை கெட்டே இருக்கும்...
ReplyDeleteமக்கள் பாவம்.... பஞ்சு மெத்தையில் இருப்பவர்களுக்கு.... விடுங்கய்யா, நாம கத்தி ஒன்னும் ஆகாது...
//நஞ்சென ஏறிட விலைவாசி-நொந்து
ReplyDeleteநாளும் மக்கள் அதைப்பேசி
நெஞ்சிலே நிம்மதி துளியின்றி///
இதுதான் இன்றைய நமது நிலை..
நாளுக்கொரு விலை என
ஏறிக்கொண்டே போகிறது.
அழகாக கவிதை வடித்தீர்கள் புலவரே.
அருமையான வரிகள்
ReplyDeleteத.ம-14
மக்கள் மனதில் இருக்கும் குமுறல்களை வரிகளாக வடித்திருக்கிறீர்கள்!
ReplyDeleteஆனாலும் கேட்க வேண்டியவர்களுக்கு கேட்காது !
நம்மால் புலம்பத்தான் முடிகிறது!