இனிய அன்பு நெஞ்சங்களே!
முதற்கண், உங்கள் அனைவருக்கும் என் பணிவான
வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதுவரை என் வலைவழி நான் எழுதியுள்ள கவிதைகளை
நூலாக வெளியிட முடிவு செய்து, உரிய ஏற்பாடுகளைச் செய்து வருகிறேன்
விரைவில் வெளிவர இருக்கிறது தேதி முடிவானதும்
அறிவிக்கப்படும்!
மேலும் வெளிவர இருக்கின்ற நூலில் சிலப் பக்கங்களை
ஒதிக்கி என் கவிதைகளைப் பற்றிய உங்கள் சிறப்பான கருத்துக்களை
யும் வெளியிட விரும்புகிறேன்.
எனவே, இனிய நெஞ்சங்களே, இப்பதிவின் கீழே தங்கள்
கருத்துக்களைப் பதிவு செய்ய வேண்டுகிறேன்
கருத்துக்கள் பொதுவானதாக,இரண்டு மூன்று வரிகளில்
அமையுமாறு இருத்தல் நலமென்று மிகப் பணிவன்போடுத்
தெரிவித்துக் கொள்கிறேன்.
அதில் தங்கள் வலைப்பெயர் உள்நாடுஎனில் ஊரும்
வெளிநாடு எனில்,நாட்டின் பெயரும் குறிப்பிட வேண்டுகிறேன்
அதை அப்படியே படி எடுத்து வெளியிடுவேன்
நன்றி!
அன்புடன்
புலவர் சா இராமாநுசம்
அழகிய வார்த்தை கொண்டு
ReplyDeleteஅருமையான கருத்தை சுமந்து
அன்றாடம் இவ்வலையில் உலாவந்து
அனைவரையும் மகிழ்வித்த தங்கள்
கவிதை நூல் வடிவில் வெளிவந்து
சிறக்க இறைவனை வேண்டும்
அன்பு உலகத்தான்
மு. ரமேஸ்
தமிழ்மணம் முதல் வாக்கு
ReplyDeleteஇன்று எமது தளத்தில்
நாம் அன்றாடம் உபயோகிக்கும் உணவுகளின் போஷாக்கு அளவு அறிந்துகொள்ள
http://thulithuliyaai.blogspot.com/2011/12/blog-post_06.html
இதுவரை என் வலைவழி நான் எழுதியுள்ள கவிதைகளை
ReplyDeleteநூலாக வெளியிட முடிவு செய்து, உரிய ஏற்பாடுகளைச் செய்து வருகிறேன்/
கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது..
மிகவும் பயனுள்ள அரிய தங்கள் கவிதைத் தொகுப்பு மலருக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்..
வாழ்த்துகள் ஐயா.
http://jaghamani.blogspot.com/
கோயமுத்தூர்
அன்பு உலகம்
ReplyDeletehttp://thulithuliyaai.blogspot.com
ஆத்தூர்(சேலம்)
சிறப்பான சிந்தனைகள்,சீரிய கருத்துக்கள்,சீறும் சமூகப்பார்வை அனைத்தும் உள்ளடக்கிய உங்கள் கவிதைகள் நூலாக வருவது மிக நல்ல செய்தி.வாழ்த்துகள் ஐயா!
ReplyDeleteமிகவும் அருமையான கருத்துகளைத் தாங்கி வரும் உங்கள் கவிதைகள் ஒரு கவிதை நூலாக வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
ReplyDeleteமேலும் பல கவிதைகள் எழுதி அவைகளும் இன்னும் பல கவிதைத் தொகுப்புகள் வெளியிட வாழ்த்துகள்...
வெங்கட்
புது தில்லி
www.venkatnagaraj.blogspot.com
வணக்கம்! நாட்டு நடப்போடு, அழகுத் தமிழில் தாங்கள் தந்த மரபு மணம் மாறாத கவிதைகள், நூல் வடிவில் வருவது குறித்து மிக்க மகிழ்ச்சி!
ReplyDeleteஉங்களின் வார்த்தைகளில்
ReplyDeleteதீயையும்
தாயையும்
தென்றலையும்
தெய்வீகத்தையும்
தெளிவாய் கண்டோம் அய்யா.
தீந்தமிழால் தீட்டிய கவிதை வரிகள் -எங்கள்
வாழ்க்கையின் வேதம்.
தேனிலிட்ட பலாச்சுளை போல
ReplyDeleteதித்திக்கும் தெள்ளுதமிழ் சொற்களால்
நீவீர் இயற்றிவரும் மரபுக்கவிதைகள்
அத்தனையும் கலைத்தாயின் பாதகமலங்களைச்
சேரும் பொன்னாரங்கள்.
அன்பன்
மகேந்திரன்
தூத்துக்குடி
http://www.ilavenirkaalam.blogspot.com/
தன் அழகிய மரபுக் கவிதைகளால் அனைவர் உள்ளத்திலும் ஒருவித எழுச்சியையும், மலர்ச்சியையும் ஏற்படுத்தி வரும் அற்புதப்புலவர் எங்கள் அன்புக்குரிய திருவாளர்: சா இராமநுசம் ஐயா நீடூழி வாழ்க வாழ்கவே!
ReplyDeleteஅன்புடன்
வை. கோபாலகிருஷ்ணன், திருச்சி
gopu1949.blogspot.com
உங்களின் கொஞ்சும் தமிழ் கவிதைகள் புத்தகத்தில் வர இருப்பதை எண்ணி பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்...! புத்தக வடியில் பார்க்க மிக ஆவலாக உள்ளேன்.
ReplyDeleteவாழ்த்துக்கள் + பாராட்டுகள் !
உங்கள் தமிழுக்கும், மரபுக்கவிதைகளுக்கும்
ReplyDeleteநான் அடிமை புலவரே...காலத்துக்கு ஏற்றவாறு
கவிதை,உடல்நிலைகுன்றிய போதும் கவிதை..
இதெல்லாம் உங்கள் தமிழ் பற்றுக்கு சான்று..
பதிவுலகில் உங்களோடு தோள் உரசுவதுக்கு
நாங்கள் கொடுத்து வைத்திருக்கவேண்டும்.
வாழ்த்துக்கள்..
ரெவெரி
மெல்ல தமிழ் இனி வாழும்
http://reverienreality.blogspot.com/
வணக்கம் ஐயா,
ReplyDeleteமரபில் கவி படைத்து இன்றும் மக்கள் மனதைக் கொள்ளை கொள்ளும் கவிதைகளை அள்ளி வழங்கும் உங்கள் பணி சிறக்கட்டும்.
நேசமுடன்,
செ.நிரூபன்.
http://www.thamilnattu.com/
This comment has been removed by the author.
ReplyDeleteஉயிரற்றுக் கிடந்த
ReplyDeleteமரபு சொற்களுக்கு உயிரூட்டி
அதற்கு கவிதையென பெயரிட்டு
வலைப் பூவில் தவழவிட்டீர்..
அக் கவிதைகள்-இனி
புத்தகப் பக்கங்களில்
குடியேறப்போகிறது..
வாழ்த்துக்கள் ஐயா.
http://writermadhumathi.blogspot.com
அண்ணே கவிதை என்பது பாமரனும் எளிதில் புரிந்து கொள்ளும்படி இருத்தல் வேண்டும் என்பது என் அவா. அதை தங்களின் கவிதைகள் பூர்த்தி செய்துள்ளன...எளிதில் புரிந்து கொள்ளுதலே அந்த கவிதைக்கு பெருமை. வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்....விக்கி- வியட்நாம்.
ReplyDeleteமரபுக்கவிதை வடிப்பதில் வல்லவர்!
ReplyDeleteமணமது தமிழுக்கென்றே உரைப்பவர்!
வானும் மண்ணும் உள்ளவரை
வாழும் தமிழுக்காய் உழைப்பவர்!
தமிழ் என்னும் மாகடலில்
அமிழ்ந்துமூழ்கி மரபுமுத்தெடுப்பவர்!
முத்துக்கள் எல்லாம் சரமாகிறது!
முக்கனியாய் இனிக்கப்போகிறது!
வாழ்த்துகள் புலவர் ஐயா!
அன்புடன்
திருமதி ஷைலஜா(எழுத்தாளர்)
பெங்களூர்
வாழ்த்துக்கள் ஐயா,
ReplyDeleteநவீன கதைகளையே தொடர்ந்து மேய்ந்து கொண்டிருந்த எங்களுக்கு சத்துள்ள உணவை பாசத்தோடு நிலாக்காட்டி ஊட்டும் தாய் போல மரபு வழிக் கவிதைகளை படைக்கும் தங்களுக்கு என்றும் வெற்றிப்பயணமே
அன்புடன்
ம.தி.சுதா
www.mathisutha.com
பழகப் பழக பால் வேண்டுமானால் புளிக்கக்கூடும்
ReplyDeleteபைந்தமிழ் மரபுக் கவிதைகள் பழகப் பழக தேனாக
திகட்டாது இனித்தபடியே இருக்கும் என்பதனை
மிக எளிதாக் வலையுலகில் அனைவரும் புரிந்து கொள்ளும்படி
மரபுக் கவியாத்து என்போன்று பலருக்கும்
குருவாகத் திகழ்கின்ற தங்கள் படைப்புகள்
நூலாக வெளியிட இருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி.
தங்கள் முயற்சி சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்
த.ம 10
ReplyDeleteமரபுவழிக் கவிதைகள் மீது ஓர் ஈர்ப்பை உண்டுபண்ணும் படைப்புகள். வாழ்த்துகள்
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி .
ReplyDeleteவாழ்த்துக்கள்.
மரபுக் கவிதைகள் வாயிலாக வலைத்தள உறவுகளை சந்தோசப்படுத்திய உங்கள் எழுத்து இப்போது கவிதை நூலாக வெளிவருவது மகிழ்ச்சி இதனால் உங்கள் கவிதைகள் மேலும் பலரைச்சென்று சேர உதவும் தொடர்ந்து சிறப்பாக பல நூல்கள் வெளியிட வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅன்புடன்
கே.எஸ்.எஸ்.ராஜ்
(வலைப்பதிவு எழுத்தாளர்)
http://www.nanparkal.com/
இலங்கை
தமிழமுதை ஊட்டுவதில் தாயாய், தன்மான உணர்வைத் தூண்டுவதில் தந்தையாய், அறிவுரைகள் வழங்குவதில் நல்லாசானாய், இனமான உணர்வுகளைத் தட்டியெழுப்புவதில் தேர்ந்த தலைவனாய், சகோதரர் துன்பம் கண்டு தவிப்பதில் உடன்பிறந்தானாய், துயர் துடைக்கும் வரிகளில் நல்ல நண்பனாய், மற்றவர் படைப்புகளுக்கு ஊக்கமளிக்கும்போது உற்சாகமிகுக் குழந்தையாய் எண்ணிலடங்கா பல்லுருக்களில் எங்கள் இதயம் நிறைந்த புலவர் ஐயா அவர்களது இனிய கவிதைகள் பலரையும் சென்றடைந்து பலன் நல்க வாழ்த்துகிறேன். வாழ்த்துக்கள் ஐயா.
ReplyDeleteஅழிந்துக் கொண்டிருக்கும் மரபுக் கவிதைகளை மீண்டும் உயிப்பிக்க செய்யும் தங்களின் முயற்சிக்கும், அக்கவிதைகளை புத்தகமாக வெளியிட்டு இளைய தலைமுறை மரபுக் கவிதைகள் பற்றி தெரிந்து கொள்ள வழி செய்யும் உங்கள் அறிய முயற்சிக்கும் எம் வாழ்த்துக்கள்.
ReplyDeletehttp://sakthistudycentre.blogspot.com/
செந்தமிழ்,பைந்தமிழ்,தீந்தமிழ்
ReplyDeleteஎன தமிழை வகைப்படுத்துவார்கள்.
இவையாவும் கலந்த தமிழ்ச்சுவையை
எங்களுக்கு அள்ளித்தந்து,
வேகமான வாழ்க்கை,
அவசரமான வாசிப்பு
இவற்றுக்கிடையே
மரபு மறந்த வாழ்க்கையின் நடுவில்
தமிழ் மரபினை பேணி வருவது
உங்கள் இயைபு.
தமிழ் துள்ளி விளையாடும் களம்
உங்கள் கவிதைத்தளம்.
நூலாக்கம் சிறக்க வாழ்த்துகளுடன்,
ம.கோகுல்
மங்களபுரம்(இருந்தது)
நாமக்கல்.
புதுச்சேரி(இருப்பது)
http://gokulmanathil.blogspot.com
ஐயா! நல்வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!
ReplyDelete"இரண்டாம் பகுதி - அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?"
பாக்கள் எனும் உங்கள் பூக்களில்
ReplyDeleteதேன் பருக வரும் வண்டினங்கள்-நாங்கள்
வலைகளிலே ரசித்த உங்கள் கவித்தேனை
இனி புத்தகத்தில் ஆனாலும்-நாங்கள்
தேடி தேடி வருவோம் பருகிடவே!
வாழ்த்துக்கள் எம் தமிழே!
வீடு சுரேசுகுமார்/திருப்பூர்
http://veeedu.blogspot.com
மரபுக் கவிதை என்பது இலக்கியத்திற்கு என்ற நிலை மாற்றி, பாமர தமிழனும் புரிந்து கொள்ளும் வகையில் அழகான நடையில் மரபுக் கவிதையால் சமூகத்தின் அவலங்களை துவைத்து எடுக்கும் உங்கள் வார்த்தைகளும் நீங்களும் சரித்திரத்தின் பக்கத்தில் என்றும் நீங்காத இடம் பிடித்து உள்ளீர்கள் என்று மட்டும் தான் என்னால் சொல்ல முடிகிறது
ReplyDeleteசூர்யஜீவா
கதை கவிதை, ஆணிவேர்
http://kathaikkiren.blogspot.com
http://suryajeeva.blogspot.com
“இணையத்தில் தமிழின் அடையாளங்கள் நிறம் மாறிவரும் சூழலில் தங்கள் கவிதைகள் தமிழின் முகவரிகளாக உள்ளன.“
ReplyDeleteவேர்களைத்தேடி..
முனைவர்.இரா.குணசீலன்
http://gunathamizh.blogspot.com/
கவிதை என்னும் கவிமாலையை பல பொருளிலும் பூமாலையாக்கி கோகுல் வலை ஊடாக வலம் வர நெஞ்செல்லாம் கருத்துரைத்த உங்கள் பணி நூல் உருப்பெற்று பலரையும் படித்து மகிந்து பரவ வழி கிடைத்த செய்தி கேட்டு நெஞ்சார வாழ்த்துகின்றேன் ஐயா. இன்னும் பல நூல்பாக்கள் பாட வேண்டும் அழகு தமிழில் என்றும்!
ReplyDeleteதனிமரம் -நேசன்.
வலைப்பூ முகவரி
http://nesan-kalaisiva.blogspote.com/
பாரிஸ்.
ஐயா
ReplyDeleteசொல்லை வெல்லும் இலக்கணமும்
மரபை மேவும் கவிவரிகளும்
சொல்லாத விடயமில்லை
செல்லாத தூரமில்லை
ஈழத்து உறவுகளுக்காய்
பாய்ந்தோடி வரும்வரிகளில்
ஆறாத மனங்களில்லை
போற்றாத வாய்களில்லை
வலை உலகில் வந்தெமக்கு
மறுப்பு பல கற்றுத்தந்து
கவி வள்ளலாய் வாழும் ஐயா
வாழ்த்துகின்றோம் உங்கள் குழந்தையாய்
கவி அழகன்
http://www.kavikilavan.blogspot.com/
கவிதைத் தாய்க்கு இரண்டு பிள்ளைகள். மூத்தது மரபுக் கவிதை. இளையது புதுக்கவிதை. இளவலை கவனிக்க பல்லாயிரம் பேர். மூத்ததை கவனிக்க ஒரு சில பேர் கூட இல்லையே என்று கண்ணீர் வடித்த கவிதைத் தாயின் கண்ணீர் துடைக்க காலமகள் பிரசிவித்த சில மாணிக்கங்களில் நீங்களும் ஒருவர் அய்யா. புத்தகமாக வெளிவரும் தங்கள் கவிதைகளை கண்டு வாசிக்க காத்திருக்கிறேன். வாழ்க தங்களது தமிழ் தொண்டு!
ReplyDeleteபெயர்: துரை டேனியல்,
ஊர்: தூத்துக்குடி.
வலைப்பூ முகவரி - duraidaniel.blogspot.com
மரபுக்கவிதை என்பது தற்காலத்தில் அருகி வரும் விசயமாகத்தான் இருக்கிறது.அதற்கான காரணம் அதிகம் பயன்பாட்டில் இல்லாத பழந்தமிழ் சொற்கள் பயன்படுத்தி அவை எழுதப்படுவது, ஆனால் மரபு கவிதைகளையும் சாமானிய மக்களுக்கு புரிகிற வகையில் சொல்ல முடியும் என்று தாங்கள் நிரூபித்துள்ளீர்கள்.தங்களின் கவிதைகள் நூலாக வெளிவருவது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது.
ReplyDelete//www.vijayandurai.blogspot.com//