தலைவாரிப் பூச்சூடி தண்நிலவே முன்னால்
தடுமாற என்னுள்ளம் தவித்திடுமே உன்னால்
அலைமோதும் கரைபோல அணுவணுவாய் நெஞ்சம்
அழிகின்ற நிலைதன்னைக் காணாயோ கொஞ்சம்
இலைமீதே தத்தளிக்கும் நீர்த் துளியேபோல
என்னுயிரும் தள்ளாடி நீங்குமெனில் சால
நிலைமீறிப் போவதற்குள் நின்றென்னைப் பாராய்
நீங்காத வேதனையை நீமாற்ற வாராய்!
துள்ளுகின்ற காரணத்தால் கரையடைத்த மீனோ
துள்ளியுந்தன் இருவிழியில் புகலடைந்த தேனோ
தெள்ளுகின்றத் தீந்தமிழே தேவையில்லை வீணே
தேன்மொழியே தக்கதல்ல தவிர்திடுவாய் நாணே
எள்ளுகின்ற நிலையெனக்கு நீதருதல் நன்றோ
என்னிடத்து உன்கருத்தை அறிவதுதான் என்றோ
உள்ளமதைக் காட்டயெனில் ஓரவிழி போதா
உரைத்திடுவாய் கனியிதழைத் திறப்பதென்ன தீதா
இடைகாட்டி மின்னலதைப் போட்டியிலே வென்றே
இருவென்று சொன்னாயோ விண்ணினிலேச் சென்றே
படைகூட்டிப் போர்த்தொடுக்கப் பழிதனிலே நின்றே
பளிச்சிட்ட மின்னலதோ பதுங்குவதேன் இன்றே
நடைகாட்டிப் பெருமையுற அன்னமெனும் புள்ளும்
நாடியுனை அடைந்திட்டால் நாணமிகக் கொள்ளும்
கடைகூட்டிக் கருமணியால் காணிலது போதும்
கற்பனையில் நாளெல்லாம் இன்பம்அலை மோதும்!
குளக்கரையில் உனைநினைத்து நானிருக்கும் நேரம்
குடம்தாங்கும் இடைதுவள நீநடப்பாய் ஓரம்
உளக்கரையோ அணுவணுவாய் தானிடிந்துச் சாயும்
உணர்வற்றே நானிருக்க ஒளிமங்கி ஓயும்
அளக்கரிய என்அன்பை அறிவதுதான் என்றோ
அரிவையுந்தன் ஆசைகளை மறைப்பதுவும் நன்றோ
விளக்கெரிய எண்ணையின்றேல் திரியெரிந்துப் போகும்
விளங்வில்லை உனக்கென்றால் விதிமுடிவே ஆகும்
தேய்வதென்ன வளர்வதென்ன தெரிவதென்ன விண்ணில்
தெரிவையுந்தன் முகத்தினிக்கே ஒப்பெனவே எண்ணில்
ஓய்வதென்னத் திங்களுக்கு ஒருமுறைதான் மண்ணில்
ஒளிதன்னைப் பாச்சுகின்ற அம்புலிதான் கண்ணில்
ஆய்வதென்ன அறைவதென்ன ஒப்பிலையாம் என்றே
அழிவதுமே வளர்வதுமே ஆனநிலை இன்றே
பாய்வதென்ன உன்வரவால் என்னுளத்தில் இன்பம்
பார்க்கவில்லை நீயென்றால் படுவதெல்லாம் துன்பம்
புலவர் சா இராமாநுசம்
கல்லூரியில் படித்த போது எழுதியது
Ilamai thullum kavithai
ReplyDeleteம்ம்...காதல் கவிதை.ரசிச்சு ரசிச்சு அத்தனை அழகா வர்ணிச்சிருக்கீங்க !
ReplyDeleteஅருமை.
ReplyDelete////குளக்கரையில் உனைநினைத்து நானிருக்கும் நேரம்
ReplyDeleteகுடம்தாங்கும் இடைதுவள நீநடப்பாய் ஓரம்
உளக்கரையோ அணுவணுவாய் தானிடிந்துச் சாயும்
உணர்வற்றே நானிருக்க ஒளிமங்கி ஓயும்
அளக்கரிய என்அன்பை அறிவதுதான் என்றோ
அரிவையுந்தன் ஆசைகளை மறைப்பதுவும் நன்றோ
விளக்கெரிய எண்ணையின்றேல் திரியெரிந்துப் போகும்
விளங்வில்லை உனக்கென்றால் விதிமுடிவே ஆகும்
////
அழகான ரசனையுடன் கூடிய கவிதை பாஸ்
இப்படி ஒரு காதல் ரசம்
ReplyDeleteஇதுவரை பருகியதில்லை.
நன்றி ஐயா.
இவ்வளவு அருமையான வரிகள்...மீண்டும் மீண்டும் படிக்க தூண்டுகிறது...
ReplyDeleteஇப்படிதான் உங்களின் கவிதைகளை படித்துவிட்டு அதன் அழகில் அசந்து என்ன பின்னூட்டம் எழுதுவது என்ற யோசனையிலேயே நேரம் கடந்து விடுகிறது...
:)
பின்னூட்டம் இட மறந்தாலும் கவிதைகளை படித்து ரசித்துவிட்டு செல்ல தவற மாட்டேன்.
இந்த கவிதையும் வழக்கம் போல என்னை இழுத்து பிடித்து வைத்து கொள்கிறது.
:))
உங்களுக்கு என் வாழ்த்துக்கள்
PUTHIYATHENRAL said
ReplyDeleteநன்றி நண்பரே!
புலவர் சா இராமாநுசம்
கவி அழகன் said...
ReplyDeleteநன்றி தம்பீ!
புலவர் சா இராமாநுசம்
ஹேமா said...
ReplyDeleteநன்றி சகோதரி!
புலவர் சா இராமாநுசம்
நண்டு @நொரண்டு -ஈரோடு said
ReplyDeleteநன்றி நண்பரே!
புலவர் சா இராமாநுசம்
அருமையான கவிதை.... இளமையில் எழுதியதில் வரிகள் சூப்பர்.... இன்னும் கலக்சன்ஸ் இருக்கா?
ReplyDeleteவாசிக்க:
நடிகை அஞ்சலி பய(ங்கர) டேட்டா - ரசிகனின் காமெடி கும்மி
அருமை... அருமை...
ReplyDeleteநம்ம தளத்தில்:
"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா? - பகுதி 1"
காதல் ரசம் சொட்டோ சொட்டுன்னு சொட்டுதே அருமை...!
ReplyDelete//விளக்கெரிய எண்ணையின்றேல் திரியெரிந்துப் போகும்
ReplyDeleteவிளங்வில்லை உனக்கென்றால் விதிமுடிவே ஆகும்//
புலவர் ஐயா,
அருமையான காதல் கவிதை.
( கல்லூரி என்ற குறிப்பு - சகலத்தையும்- சொல்லிற்று.)
அருமை புலவரே..
ReplyDeleteK.s.s.Rajh said...
ReplyDeleteநன்றி நண்பரே!
புலவர் சா இராமாநுசம்
கோகுல் said..
ReplyDeleteநன்றி நண்பரே!
புலவர் சா இராமாநுசம்
Kousalya said..
ReplyDeleteநன்றி சகோதரி!
புலவர் சா இராமாநுசம்
தமிழ்வாசி பிரகாஷ் said..
ReplyDeleteநன்றி நண்பரே!
புலவர் சா இராமாநுசம்
திண்டுக்கல் தனபாலன் said
ReplyDeleteநன்றி நண்பரே!
புலவர் சா இராமாநுசம்
MANO நாஞ்சில் மனோ said
ReplyDeleteநன்றி நண்பரே!
புலவர் சா இராமாநுசம்
சத்ரியன் said..
ReplyDeleteநன்றி நண்பரே!
புலவர் சா இராமாநுசம்
முனைவர்.இரா.குணசீலன் sai
ReplyDeleteநன்றி முனைவரே!
புலவர் சா இராமாநுசம்
நினைத்தேன்.கல்லூரியில் படிக்கும்போதுதான் எழுதியிருக்க வேண்டும்.நன்று.
ReplyDeleteஇளமையில் எழுதிய காதல் கவிதை வரிகள் அருமை...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
கல்லூரி நாட்களின் காதல் கவிதை அருமை!
ReplyDeleteஅருமையான கவிதை.
ReplyDeleteஎனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
நன்றி ஐயா.
shanmugavel said...
ReplyDeleteநன்றி நண்பரே!
புலவர் சா இராமாநுசம்
ரெவெரி said...
ReplyDeleteநன்றி நண்பரே!
புலவர் சா இராமாநுசம்
ரெவெரி said...
ReplyDeleteநன்றி நண்பரே!
புலவர் சா இராமாநுசம்
சென்னை பித்தன் said...
ReplyDeleteநன்றி ஐயா!
புலவர் சா இராமாநுசம்
hnavel said...
ReplyDeleteநன்றி ஐயா!
புலவர் சா இராமாநுசம்
மனதின் கண்ணாடி இந்த கவிதை
ReplyDeleteஅருமை ஐயா
த.ம 13
ReplyDeleteகல்லூரி நாட்கள் அப்போதும் இப்போதும் எப்போதும் இனிமை
ReplyDeleteஅருமை ஐயா ...
அருமையான கவிதை.
ReplyDeleteplease read my blog www.rishvan.com and leave your comments.
வார்த்தைகள் வடித்த சிற்பங்களாய்
ReplyDeleteமின்னுகிறது புலவரே...
அருமை.. அருமை..
வணக்கம் ஐயா,
ReplyDeleteஅவள் அழகை ரசிக்காதோர் எல்லாம் துன்பம் மிகுந்து வாடுவோரே என்பதனை அழகிய கவியில் சொல்லியிருக்கிறீங்க.