Monday, November 28, 2011

சொல்லவும் தடுக்கவும் பெரியாரின் துணையே


இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
    எவரலும் காக்க இயலாது! அன்னோன்
கெடுப்பாரும் இன்றியே தானேதான் கெடுவான்
    கெட்டவன் அந்தோ! துயரமே படுவான்
துடுப்பதை இழந்திட்ட பரிதாப தோணி
    துணையின்றி தனியாக உள்ளமே நாணி
விடுப்பானே ஆண்டிடும் உரிமையைக் கூட
    வேதனை மண்டியே மனதினில் ஓட

தம்மிற் பெரியாரைத் தமராகக் கொண்டே
    தன்னரசை நாள்தோறும் நடத்திடக் கண்டே
விம்மிதம் கொள்வாரே மக்களும் அவன்பால்
    விருப்பியே புகழ்வாரே வியந்துமே அன்பால்
இம்மென்றால் சிறைவாசம் ஏன்னெறால் வனவாசம்
    இல்லாது ஆள்கின்ற மன்னர்பால் விசுவாசம்
உம்மென்று இல்லாமல் உவகையில் காட்டுவார்
    ஒருவருக் கொருவர் உற்சாகம் ஊட்டுவார்

சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல வேந்தன்
    சரியாக நீதியில் ஆண்டிட மாந்தர்
அமரின்றி அனைவரும் அமைதியில் வாழ்வார்
    ஆண்டவன் அவனென்று ஆனந்தம் சூழ்வார்
தமரென்றே எல்லோரும் தம்முள்ளே உறவே
    தக்கது என்பாரே! அறியாராம் கரவே
இமயோரும் காணத இன்பத்தைப் பெறுவர்
    இறைவாநீ என்றுமே மன்னனை தொழுவர்!

பல்லோரின் பகையாலே பாதகம் இல்லை
      பலமிக்க  மன்னர்க்கு வாராது தொல்லை
நல்லோரின் துணையின்றி நாடாள முயலா
      நல்லது கெட்டது அறிந்திட இயலா
வல்லவ ரானாலும் வழிதவறிப் போக
      வாய்ப்புண்டு அதனாலே தீமைகள் ஆக
சொல்லவும் தடுக்கவும் பெரியாரின் துணையே
      பெரிதென்று அறிவீரே அதற்கில்லை இணையே!
        
                       புலவர் சா இராமாநுசம்

22 comments:

  1. கவிதைக்கு நன்றி அண்ணே!

    ReplyDelete
  2. பெரியோரின் துணைகொண்டு
    பண்பு நலன்களுடன்
    ஆளும் திறமையை வளர்த்துக்கொள்ள
    அழகிய கவி படைத்தீர்கள் புலவரே..
    அருமை.

    ReplyDelete
  3. அருமையான கவிதை ஐயா

    ReplyDelete
  4. வல்லவ ரானாலும் வழிதவறிப் போக
    வாய்ப்புண்டு அதனாலே தீமைகள் ஆக
    சொல்லவும் தடுக்கவும் பெரியாரின் துணையே
    பெரிதென்று அறிவீரே அதற்கில்லை இணை// அதனால தாம் பெரியவர்கள் சொல் கேட்கவேண்டும்..

    அருமையான கவிதைக்கு நன்றிகள்..

    ReplyDelete
  5. பெரியோரின் வழிகாட்டுதலின்றி சரியான பாதையை தேர்ந்தெடுப்பது கடினம்தான்...



    மரபில் மகுடம் சூடிய தங்களுக்கு வாழ்த்துக்கள்.. ஐயா...

    ReplyDelete
  6. மன்னனை இடித்து காட்ட முடியாது,
    உங்கள் கவிதைகள் உறங்கும் மக்களை இடித்து எழுப்புகிறது..
    எழுப்புங்கள்
    விடியட்டும்

    ReplyDelete
  7. வணக்கம் ஐயா!
    அருமையான கவிதை..
    பெரியோரின் துணை கொண்டு சரியான வழிதடம் தேர்தெடுப்போம்..

    ReplyDelete
  8. வணக்கம் ஐயா,
    நல்லா இருக்கீங்களா?

    நீதி நெறி வழுவாது ஒரு மன்னர் ஆட்சி எவ்வாறு அமைய வேண்டும் என்பதனை கவிதை அருமையாகச் சொல்லி நிற்கிறது.

    ReplyDelete
  9. ஐயா கவிதை அருமை.... பெரியோரின் துணையால் நாட்டை சீர் படுத்த வேண்டும் என்ற உங்கள் எண்ணம் நிறைவேறனும்.


    நம்ம தளத்தில்:
    எனக்குள் நான் - {பய(ங்கர) டேட்டா} - தொடர்பதிவு

    ReplyDelete
  10. சொல்லவும் தடுக்கவும் பெரியாரின் துணையே
    பெரிதென்று அறிவீரே அதற்கில்லை இணையே!

    இளைஞர்களுக்கு பாடம்..

    ReplyDelete
  11. //இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
    எவரலும் காக்க இயலாது! //

    அருமை அய்யா! பெரியாரைத் துணை கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  12. பெரியோரின் துணை கவிதை அருமை ...புலவரே..

    ReplyDelete
  13. இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
    எவரலும் காக்க இயலாது! அன்னோன்
    கெடுப்பாரும் இன்றியே தானேதான் கெடுவான்
    கெட்டவன் அந்தோ! துயரமே படுவான்
    துடுப்பதை இழந்திட்ட பரிதாப தோணி
    துணையின்றி தனியாக உள்ளமே நாணி
    விடுப்பானே ஆண்டிடும் உரிமையைக் கூட
    வேதனை மண்டியே மனதினில் ஓட

    பெரியாரைத்துணை கோடல் எத்துனை பயனென்று மொழிந்த அருமையான கவிதைக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துகள்...

    ReplyDelete
  14. அருமையான கவிதை ஐயா ,பகிர்வுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  15. நல்லவனை வல்லவனாக்கலாம் - ஆனால்
    வல்லவனை நல்லவனாக்க
    வழியும் தடமும்
    மாறாதிருக்க
    மாற்றுக்குறையாத
    மாசற்ற கவி
    தந்த
    தமிழ்
    பெருமானே
    பெருந்தகையே
    பெருதலுகரிய
    பேரு, உங்கள் கவிதை
    நன்றி.

    ReplyDelete
  16. Arumaiyana alosanai ayya! Nam Ayyan Valluvarum itherkena oru athigaram iyatri ullaar. Thodarattum thamizh thondu.
    TM 12.

    ReplyDelete
  17. அருமையாகப் புரிய வைத்தீர்கள் .பெரியாரின் துணை இன்றி இன்று உலகில் நிகழும் அநியாயம் கொஞ்சம் இல்லை .இனியும் பெரியாரை மதியாவிடில் விடிவும் இல்லை .பாராட்டுக்குள் ஐயா மிக்க நன்றி பகிர்வுக்கு .என் கவிதை காத்திருக்கின்றது தங்கள் வரவுக்கும் கருத்துப் பகிர்வுக்கும்.

    ReplyDelete
  18. இடிப்பாரில்லாத மன்னனின் நிலையை இடித்துரைத்து அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். பெரியோரைத் துணைக்கொண்டு அவரிடமிருந்து விலைமதிப்பில்லாத அனுப்பவப்பாடத்தைக் கற்றுக்கொண்டு அதன்படி அறவழியில் நடக்கவேண்டும். ஆள்பவர்க்கு உறைப்பது எந்நாளோ? அழகான அர்த்தமுள்ள கவிதைக்க்குப் பாராட்டுகள் ஐயா.

    ReplyDelete
  19. >>தம்மிற் பெரியாரைத் தமராகக் கொண்டே
    தன்னரசை நாள்தோறும் நடத்திடக் கண்டே

    அய்யா வணக்கம், கவிதை செம.. தமராக என்றால் என்ன?

    ReplyDelete
  20. வணக்கம்...! இந்த பதிவுலகில் புதியவன். தங்களின் தளத்திற்கு இப்போது தான் வந்தேன். அருமையான கவிதைகள். தங்களின் முந்தைய பதிவுகளையும் படித்துக் கொண்டிருக்கிறேன். வாழ்த்துக்கள். நன்றி..!
    நம்ம தளத்தில்:
    "மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது?"

    ReplyDelete
  21. சிறப்பு உங்களின் அறிவுரை நட்டு மன்னனுக்கு அதுதான் இன்றய முதல்வருக்குன்னு எடுத்துகாலாமா சிறப்பானவைகள் போற்றவேண்டிய இந்த ஆக்கம் மன்னர்களுக்கு போய் சேரட்டும் ...

    ReplyDelete
  22. அருமையான பதிவு ஐயா ..
    தமிழன் உரிமை என்றால் மட்டும் ஏன் இப்படி நடக்கிறது ...

    ReplyDelete