நினைத்து நினைத்துப் பார்க் கின்றேன்
நினைவில் ஏனோ வர வில்லை
அனைத்தும் மனதில் மறைந் தனவே
அறிவில் குழப்பம் நிறைந் தனவே
தினைத்துணை அளவே செய் நன்றி
தேடிச் செய்யின் மன மொன்றி
பனைத்துணை யாகக் கொள் வாரே
பயனறி உணரும் நல் லோரே
அடுத்தவர் வாழ்வில் குறை கண்டே
அன்னவர் நோக அதை விண்டே
தொடுத்திடும் சொற்கள் அம் பாக
தொடர்ந்து அதுவே துன் பாக
கெடுத்திட வேண்டுமா நல் லுறவை
கேடென தடுப்பீர் அம் முறிவை
விடுத்திட வேண்டும் அக் குணமே
வேதனை குறையும் அக் கணமே
கீழோ ராயினும் தாழ உரை
கேடோ! குறையோ! அல்ல! நிறை
வீழ்வே அறியா பெரும் பேறே
விளைவு அதனால் நற் பேரே
பேழையில் உள்ள பணத் தாலே
பெருமையும் வாரா குணத் தாலே
ஏழைகள் பசிப்பிணி போக்கி டுவீர்
இணையில் இன்பம் தேக்கி டுவீர்
மக்கள் தொண்டு ஒன்றே தான்
மகேசன் தொண்டு என்றே தான்
தக்கது என்றே சொன் னாரே
தன்நிகர் இல்லா அண் ணாவே
எள்ளல் வேண்டா எவர் மாட்டும்
இனிமை ஒன்றே மகிழ் வூட்டும்
சொல்லல் யார்க்கும் எளி தன்றோ
சொன்னதை செய்தல் அரி தன்றோ
புலவர் சா இராமாநுசம்
வள்ளுவரின் பல கருத்துக்களை நினைவூட்டும் அருமையான கவிதை வரிகள்.நன்றி ஐயா.
ReplyDeleteஅருமையாக அறிவுறுத்தும் வரிகள்.... பகிர்வுக்கு நன்றி ஐயா!
ReplyDeleteஇங்க வாய்சொல் வீரர்கள் தான் அதிகம் ஐயா..?
ReplyDeleteசொல்வதை செய்வது என்பது இங்க தேவையில்லாதது..
மக்களை தொண்டை மறந்தால்தான் இங்கு ஆட்சியாளராக ஆகமுடியும்...
அழகிய கவிதை.. வாழ்த்துக்கள்..
அருமையான கருத்தை வலியுறுத்திப் போகும்
ReplyDeleteஎளிமையான சொற்களால் ஆன வலிமையான படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 2
ஒவ்வொரு வரிகளும் சவுக்கடி... சுழற்றுங்கள்
ReplyDeleteசொன்னதை செய்தல் அரி தன்றோ// சொல்லாததை செய்வதையும் அறிவோம். கவிதை அருமை.
ReplyDelete// இனிமை ஒன்றே மகிழ் வூட்டும்
ReplyDeleteசொல்லல் யார்க்கும் எளி தன்றோ
சொன்னதை செய்தல் அரி தன்றோ
//
அருமையாகச் சொல்லியுள்ளீர்கள், ஐயா.
தமிழ்மணம்: 6 அன்புடன் vgk
மக்கள் தொண்டு ஒன்றே தான்
ReplyDeleteமகேசன் தொண்டு என்றே தான்
தக்கது என்றே சொன் னாரே
தன்நிகர் இல்லா அண் ணாவே
எள்ளல் வேண்டா எவர் மாட்டும்
இனிமை ஒன்றே மகிழ் வூட்டும்
சொல்லல் யார்க்கும் எளி தன்றோ
சொன்னதை செய்தல் அரி தன்றோ
ஆரம்பமும் முடிவும் அருமை!..சொல்லுதல்
என்பது அனைவர்க்கும் இலகுவானது செயல்
அவ்வாறு இல்லை .உள்ளத்தையே உணர்த்தும்
உங்கள் கவிதை வரிகள் என்றுமே இதயத்தை
விட்டகலாது .மிக்க நன்றி ஐயா அழகிய
கவிதைப் பகிர்வுக்கு .....
வணக்கம்!
ReplyDelete//எள்ளல் வேண்டா எவர் மாட்டும்
இனிமை ஒன்றே மகிழ் வூட்டும் //
இன்னாது அம்ம இவ்வுலகம்! இனியது காண்க! என்ற புறநானூற்று புலவர் வழியை காட்டி விட்டீர்கள்.
எப்போது வந்தாலும் மனதில் உறையும் அறிவுரை வரிகள்.உங்கள் மனநிலை எல்லோருக்கும் வரவேண்டும் ஐயா.முடிந்தவரை அடுத்தவர்க்கு உதவியபடி வாழ்வோம் !
ReplyDeleteஅருமையான வரிகள்... தொடருங்கள் புலவரே....
ReplyDeleteசென்னை பித்தன் said
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
மாய உலகம் said..
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
கவிதை வீதி... // சௌந்தர்
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
Ramani said.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
suryajeeva said
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
சாகம்பரி said
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
வை.கோபாலகிருஷ்ணன்
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
அம்பாளடியாள்
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
தி.தமிழ் இளங்கோ
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
ஹேமா said
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
வெங்கட் நாகராஜ் said
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
Arumai ayya.
ReplyDeleteTM 9.
அருமையான கவிதை ஐயா ..
ReplyDeleteஎள்ளல் வேண்டா எவர் மாட்டும்
ReplyDeleteஇனிமை ஒன்றே மகிழ் வூட்டும்
சொல்லல் யார்க்கும் எளி தன்றோ
சொன்னதை செய்தல் அரி தன்றோ/
அருமையான் ஆக்கத்திற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் ஐயா..
அருமை.
ReplyDelete//கெடுத்திட வேண்டுமா நல் லுறவை
ReplyDeleteகேடென தடுப்பீர் அம் முறிவை
விடுத்திட வேண்டும் அக் குணமே
வேதனை குறையும் அக் கணமே//
ஆமாம் அய்யா! அக்கணமே வேதனை குறைந்துவிடும்.நல்ல குணங்கள் மட்டுமே மகிழ்வைத்தரும்
கீழோ ராயினும் தாழ உரை
ReplyDeleteகேடோ! குறையோ! அல்ல! நிறை
வீழ்வே அறியா பெரும் பேறே
விளைவு அதனால் நற் பேரே
பேழையில் உள்ள பணத் தாலே
பெருமையும் வாரா குணத் தாலே
ஏழைகள் பசிப்பிணி போக்கி டுவீர்
இணையில் இன்பம் தேக்கி டுவீர்
நல்ல வரிகளோடு நிதர்சனமான உண்மையை எழுதிள்ளீர்கள்.
மரபுக் கவிதை வாசிப்பதில் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது..
ReplyDeleteஎளிமையான சொற்களால் ஆன அருமையான படைப்பு ஐயா.
ReplyDeleteஒவ்வொரு வரிக்குள்ளும் பொதிந்துள்ளன, வாழ்க்கைக்குத் தேவையான உன்னதக் கருத்துக்கள் பல. அருமையானக் கவிதைக்குப் பாராட்டுகள் ஐயா.
ReplyDelete