Saturday, November 19, 2011

கொள்ளி வைக்கவும் ஆள் இல்லை

 தாழ்ந்தாய்த் தமிழா தாழ்ந்தாய் நீ
   வீழ்ந்தாய் தமிழா   வீழ்ந்தாய் நீ
வாழ்ந்தாய் அன்று பலர் போற்ற
   வாழ்கிறாய் இன்று பலர் தூற்ற
சூழ்ந்ததே உன்னைப் பழி பாவம்
   சொன்னால் எதற்கு வீண் கோவம்
ஆழ்ந்ததே உலகில் நனிசோகம்நீ
    அடிமையா? வருமா இனி வேகம்

அல்லல் பட்டு ஆற்றாது அவர்
    அழுகுரல் உனக்குக் கேட்க லையா
கொல்லப் பட்ட உடல் தன்னை
    குழியில் புதைப்பதை பார்க் லையா
சொல்லப் பட்டது மிகை யில்லை
    சொன்னதே சேனல் துய ரெல்லை
உள்ளம் உண்டா இல் லையா
    உண்மைத் தமிழா சொல் லையா

ஓடிஓடி தேடுகி றார்  தம்
     உறவினர் உடலைத் தேடு கிறார்
ஆடிப் போகுதே நம் உள்ளம்
    அருவியாய் கண்ணீர் பெரு வெள்ளம்
தேடி எங்கும் தெருத் தெருவாய்
   திரியும் அவர்நிலை கண் டாயா
கோடி எடுக்கவும் ஆள் இல்லை
   கொள்ளி வைக்கவும் ஆள் இல்லை

வேண்டாம் தமிழா வேண்டாமே
     வேதனை தீரா ஈண்டாமே
கூண்டாய் இறந்து போவோமா கை
     கூலிகள் உணர  சாவோ மா
மாண்டார் மானம் காத் தாரே
      மற்றவர் பின்னர் தூற் றாரே
ஆண்டோம் அன்று இவ் வுலகே
     அடைவோம் இன்று அவ் வுலகே
         
          வருவீரா????  எழுவீரா?????
                      அன்பன்
                   புலவர் சா இராமாநுசம்
    
         சேனல் நான்கைக் கண்டு எழுதியது

40 comments:

  1. //மாண்டார் மானம் காத் தாரே//

    சரியாகச் சொன்னீர் ஐயா.

    இனி,

    பேதங்கள் தவிர்த்து
    புதுத்தெளிவுடன், அதே உறுதியுடன் மீட்கவேண்டும்.

    ReplyDelete
  2. கவிதைக்கு நன்றி அண்ணே!

    ReplyDelete
  3. //ஓடிஓடி தேடுகி றார் தம்
    உறவினர் உடலைத் தேடு கிறார்//

    என்ன கொடுமை இது? என்ன பாவம் செய்தார்கள்
    தமிழனாய் பிறந்ததா அய்யா?

    ReplyDelete
  4. //வேண்டாம் தமிழா வேண்டாமே
    வேதனை தீரா ஈண்டாமே
    கூண்டாய் இறந்து போவோமா கை
    கூலிகள் உணர சாவோ மா
    மாண்டார் மானம் காத் தாரே
    மற்றவர் பின்னர் தூற் றாரே
    ஆண்டோம் அன்று இவ் வுலகே
    அடைவோம் இன்று அவ் வுலகே //

    சுவாசிக்கையிலே மனம் கணக்க வைக்கிறது ஐயா..

    ReplyDelete
  5. துயரங்கள் வார்த்தைகளில் தெறிப்பதை இன்று தான் கண்டேன்

    ReplyDelete
  6. சிறப்பான கவிதை ஜயா

    ReplyDelete
  7. சத்ரியன் said

    வருகை தந்தீர்!! வாழ்த்தும் தந்தீர்!!

    நன்றி! நன்றி!!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  8. நண்டு @நொரண்டு -ஈரோடு said...

    வருகை தந்தீர்!! வாழ்த்தும் தந்தீர்!!

    நன்றி! நன்றி!!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  9. விக்கியுலகம் said...

    வருகை தந்தீர்!! வாழ்த்தும் தந்தீர்!!

    நன்றி! நன்றி!!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  10. veedu said

    வருகை தந்தீர்!! வாழ்த்தும் தந்தீர்!!

    நன்றி! நன்றி!!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  11. ஐயா, வார்த்தைகள் கோபம், துயரம் எல்லாம் கலந்து கவிதை வடிவாக... நன்றி.


    நம்ம தளத்தில்:
    நமது உலகத்தை(பூமி) இப்படி யாரும் பார்த்திருக்க மாட்டிங்க?

    ReplyDelete
  12. சம்பத் குமார் said...


    வருகை தந்தீர்!! வாழ்த்தும் தந்தீர்!!

    நன்றி! நன்றி!!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  13. suryajeeva said

    வருகை தந்தீர்!! வாழ்த்தும் தந்தீர்!!

    நன்றி! நன்றி!!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  14. K.s.s.Rajh said...


    வருகை தந்தீர்!! வாழ்த்தும் தந்தீர்!!

    நன்றி! நன்றி!!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  15. தமிழ்வாசி - Prakash said...


    வருகை தந்தீர்!! வாழ்த்தும் தந்தீர்!!

    நன்றி! நன்றி!!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  16. அருமையான கவிதை ஐயா
    த.ம 4

    ReplyDelete
  17. நிலைமை அப்படியா போச்சு ஐயா

    ReplyDelete
  18. தமிழன் உணர்வு தூக்கத்தில் இருக்கிறதா?
    இல்லை இறந்தே போய்விட்டதா எனத் தெரியவில்லை.

    அது தெரிந்தால் தான் மற்றவற்றை செய்ய இயலும்


    நல்ல கவிதை ஐயா

    ReplyDelete
  19. M.R said...


    வருகை தந்தீர்!! வாழ்த்தும் தந்தீர்!!

    நன்றி! நன்றி!!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  20. கவி அழகன் said


    வருகை தந்தீர்!! வாழ்த்தும் தந்தீர்!!

    நன்றி! நன்றி!!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  21. நிவாஸ் said...


    வருகை தந்தீர்!! வாழ்த்தும் தந்தீர்!!

    நன்றி! நன்றி!!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  22. துயரம் சுமந்த வரிகள்,அருமை.

    ReplyDelete
  23. உலகத்தமிழர் உள்ளத்தை கவிதையாக்கியிருக்கிறீர் அய்யா! நன்று

    ReplyDelete
  24. வாழ்ந்தாய் அன்று பலர் போற்ற
    வாழ்கிறாய் இன்று பலர் தூற்ற

    சிந்திக்க வைக்கும் கவிதை புலவரே..

    ReplyDelete
  25. தங்கள் கவிதை படித்தபோது.


    ஆடாய் மாடாய்
    ஆனாய் தமிழா

    என்றேன்..

    கைதட்டினான்!

    கவிஞர் காசியானந்தன் கவிதை நினைவுக்கு வந்தது புலவரே..

    ReplyDelete
  26. வீரத்தின் தோழ்விதன்னை வீறுகொண்டு பாடும் கவிதை சிறப்பு புலவரே!

    ReplyDelete
  27. சென்னை பித்தன் said...

    வருகை தந்தீர்!! வாழ்த்தும் தந்தீர்!!

    நன்றி! நன்றி!!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  28. shanmugavel said...

    வருகை தந்தீர்!! வாழ்த்தும் தந்தீர்!!

    நன்றி! நன்றி!!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  29. முனைவர்.இரா.குணசீலன் said...

    வருகை தந்தீர்!! வாழ்த்தும் தந்தீர்!!

    நன்றி! நன்றி!!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  30. முனைவர்.இரா.குணசீலன்

    நன்றி! முனைவரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  31. தனிமரம் said...

    வருகை தந்தீர்!! வாழ்த்தும் தந்தீர்!!

    நன்றி! நன்றி!!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  32. வருவோம்.மீண்டும் எழுவோம்!

    ReplyDelete
  33. @புலவர் சா இராமாநுசம்

    என்ன அன்பரே நலமா!

    நம்மை மறந்தாரை நாம்
    மறக்க மாட்டோமால்

    த ம ஓ 12

    புலவர் சா இராமாநுசம்
    //

    ஐயா நான் உங்களையோ, இல்லை வேறு உறவுகளையோ மறக்கவில்லை!

    என்னுடைய நான்கு பதிவுகளில் குறிப்பிட்டிருந்தேன்!
    வேலை பிசியாலும், என்னுடைய கல்வியின் நிமித்தமும் இந்த மாதத்துடன் பதிவுலகினை விட்டு நின்று விடுவேன் என்று!

    ஆகவே தான் ஐயா தங்கள் வலைப் பக்கம் வர முடியவில்லை!

    எனக்கு இருக்கும் நேரத்தில் ஒரு பதிவு எழுதிச் சரிபார்க்கவே நேரம் போதாது உள்ளது ஐயா.
    நன்றி ஐயா.
    தமி. மணம் 11

    ReplyDelete
  34. நெஞ்சை நெகிழ வைத்த கவிதைப் பகிர்வு அருமை!..என் தளத்தில் இன்று ஓர் ஆக்கம் இதில் கண்ணகி சுயநலவாதி அதனால் மதுரையை எரித்தாள் என்பது குற்றச் சாட்டு .இதற்கு எதிரான என் ஆக்கம் என் சிற்றறிவுக்கு உட்பட்டு வகுத்துள்ளேன் .இதில் உங்களைப் போன்ற பெரியவர்களின் கருத்தினை மிக ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன் .தவறாமல் உங்கள் எண்ணக் கருத்தினை உள்ளபடி விரிவாகத் தாருங்கள் ஐயா.இது என் அன்பான வேண்டுகோள் .மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .

    ReplyDelete
  35. Tamilargalin nilai kandu naanum kanneer sinthukiren.
    Nam kavi vaal eanthi kayamaiyai koithuvom. Arumai. Thodaravum.

    ReplyDelete
  36. மனசை அழுத்திப் பிசைகிறது கவிதை.கண்ணீர் தவிர நன்றியோடு வேறு எதைத் தரமுடிகிறது.மறக்கமட்டும் முடியாது !

    ReplyDelete
  37. நல்ல பதிவு வாழ்த்துக்கள் புலவர் ஐயா, தமிழுக்கு உங்களை போன்றோர் செய்யும்பணி சிறப்பானது.
    கவால்துறை என்கிற பெயரில் ஒரு கயமை துறை!,ஈழத்திலே தன் உறவுகளை இழந்து, தன் சொத்துக்களை இழந்து, நாட்டை இழந்து தமிழ் மக்கள் அகதிகளாக தமிழகம் வந்தால் அவர்களை மீன்பிடிக்க கூடாது என்று க்யூபிராஞ்ச் போலீஸ்காரன் மிரட்டுகிறான்.கேடுகெட்ட காவல்துறை குற்றவாளியை பிடிக்க முடியாமல் ஜோதிடரை அணுகி உள்ளது,இது காவல் துறை இல்லை கயமை துறை! காவல்துறை என்கிற பெயரில் ஒரு பயங்கரவாத படை இயங்குகிறது. இந்த படைக்கு மனிதாபிமானம், மனித நேயம், ஒழுக்கம், நேர்மை, நீதி, நியாயம் என்று ஒன்றுமே தெரியாது. காவல்துறை என்கிற பெயரில் ஒரு ரவுடி கூட்டம் செயல்படுகிறது please go to visit this link. thank you.

    ReplyDelete
  38. தமிழர்களின் துயரை அப்படியே வடித்திருகிறீர்கள் நன்றி ஐயா! தமிழ் கூறும் உலகுக்கு உங்களை போன்றோர் பணி மிக இன்றியமையாதது. ஈழத்து கவிஞ்சர் காசியானந்தை அவர்களை தொடர்ந்து தமிழக கவிஞ்சராக ஈழத்து தமிழர்களின் துயர் குறித்து சிறந்த வரிகளை பகர்ந்து இருக்கீங்கள் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ஐயா.

    ReplyDelete
  39. துக்கத்தாலும், வேதனையாலும் கனத்துப் போயிருக்கிறது கவிதை. படித்தபின் அதே கனம் எங்கள் மனத்துள்ளும். தமிழுணர்வின் தூண்டுகோலாய் இருப்பதற்காகத் தங்களைத் தலைவணங்குகிறேன் ஐயா.

    ReplyDelete