Thursday, November 17, 2011

பட்டறிவும் பகுத்தறிவும்



பட்டே அறிவது பட்டறிவு-எதையும்
   பகுத்து அறிவது பகுத்தறிவு
தொட்டால் நெருப்புச் சுடுமென்றே-குழந்தை
  தொட்டு அறிவது  பட்டறிவு
விட்டால் குழந்தை தொடுமென்றே-நாம்
  விளங்கிக் கொள்ளல் பகுத்தறிவு
கெட்டார் பெறுவதும் பட்டறிவே-எதனால்
   கெட்டோம் அறிவது பகுத்தறிவு

ஆய்ந்துப் பார்த்தல் பகுத்தறிவு-பெரும்
   அநுபவம் அனைத்தும் பட்டறிவே
மாய்ந்து போமுன் மனிதர்களே—இதை
   மனதில் கொள்வீர் புனிதர்களே
வாய்ந்தது துன்ப வாழ்வென்றே-உளம்
   வருந்தி நிற்றல் தீர்வன்றே
ஓய்ந்து போகா உளம்பெற்றே-பகுத்து
   உணரின் வாழ்வீர் நலம்பெற்றே

சொன்னவர் யாராய் இருந்தாலும்-அவர்
    சொன்னது எதுவாய் இருந்தாலும்
சின்னவர் பெரியவர் என்பதில்லை-அதை
     சித்திக்க முயல்வது தவறில்லை
என்னவோ எதுவென மயங்காதீர்-பகுத்து
     எண்ணியே ஆய தயங்காதீர்
இன்னார் இனியர் பாராதீர்-பகுத்து
     எண்ணாமல் என்றும் கூறாதீர்

சித்தர் பாடல் பட்டறிவாம்-பிறர்
    செப்பிடின் அதையும் கேட்டறிவோம்
புத்தர் கண்டதும் பட்டறிவாம்-அவர்
    போதனை அனத்தும் அதன்விளைவாம்
உத்தமர் காந்தியின் பட்டறிவே-நமக்கு
    உரிமைக்கு விதையென நாமறிவோம்
எத்தகை செயலுக்கும் பட்டறிவே-என
    என்றும் ஆய்தல் பகுத்தறிவே!

                  புலவர் சா இராமாநுசம்

39 comments :

  1. பட்டறிவையும் பகுத்தறிவையும்
    சிலர் விளக்குவதற்கு பாடாய்ப் படுவதைப் பார்த்திருக்கிறேன்
    இத்தனை எளிதாக அருமையாக உதாரணங்களுடன்
    மிகத் தெளிவாக விளக்கிச் செல்லும் தங்கள் பதிவு
    தங்கள் சிந்தனைத் தெளிவிற்க்கு ஒரு அருமையான சாட்சி
    மனம் கவர்ந்த பதிவு.வாழ்த்துக்கள்
    த.ம 1

    ReplyDelete
  2. ////தொட்டால் நெருப்புச் சுடுமென்றே-குழந்தை
    தொட்டு அறிவது பட்டறிவு
    விட்டால் குழந்தை தொடுமென்றே-நாம்
    விளங்கிக் கொள்ளல் பகுத்தறிவு
    கெட்டார் பெறுவதும் பட்டறிவே-எதனால்
    கெட்டோம் அறிவது பகுத்தறிவு////

    மிக எளிமையாக விளக்கியுள்ளீர்கள் ஜயா அருமையாக இருக்கு

    ReplyDelete
  3. பட்டறிவு - பகுத்தறிவு பற்றிய நல்ல விளக்கக் கவிதை...

    வாழ்த்துகள் புலவரே...

    ReplyDelete
  4. Ramani said

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  5. K.s.s.Rajh said


    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  6. வெங்கட் நாகராஜ் said...

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  7. எவ்வளவு எளிமையாக விளக்கி விட்டீர்கள்!
    நன்று.

    ReplyDelete
  8. பட்டறிவையும், பகுத்தறிவையும் புட்டுப்புட்டு விளங்க வைத்திருக்கின்றீர் புலவர் ஐயா.

    ReplyDelete
  9. ஐயா பட்டறிவுக்கும், பகுத்தறிவுக்கும் பகுத்து விளக்கிய தங்களுக்கு நன்றி....


    நம்ம தளத்தில்:
    நமது மெயில் ஐடி மற்றவர்களுக்கு காட்டாமல் மறைப்பது எப்படி?

    ReplyDelete
  10. சித்தர் பாடல் பட்டறிவாம்-பிறர்
    செப்பிடின் அதையும் கேட்டறிவோம்
    புத்தர் கண்டதும் பட்டறிவாம்-அவர்
    போதனை அனத்தும் அதன்விளைவாம்
    உத்தமர் காந்தியின் பட்டறிவே-நமக்கு
    உரிமைக்கு விதையென நாமறிவோம்
    எத்தகை செயலுக்கும் பட்டறிவே-என
    என்றும் ஆய்தல் பகுத்தறிவே!//

    சும்மா நச்சின்னு எளிமையாக புரிய வைத்துவிட்டீர்கள் நன்றி வாழ்த்துக்கள்....!!!

    ReplyDelete
  11. சென்னை பித்தன் said...

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  12. தமிழ்வாசி - Prakash said...

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  13. சத்ரியன் said...

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  14. MANO நாஞ்சில் மனோ said

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  15. பட்டறிவும் பகுத்தறிவும் பற்றிய நல்ல விளக்கக் கவிதை...

    வாழ்த்துகள் புலவரே...

    ReplyDelete
  16. அருமையான கவிதை அய்யா ..

    ReplyDelete
  17. மகிழ்ச்சி புலவர் அய்யா அவர்களே.,

    பகுத்தறிவும் பட்டறிவும் தங்கள் பாணியில் எளிமையாய் மனதில் தைக்கும்படி அமைந்துள்ளது.,

    பாராட்டுகளும் வாழ்த்துகளும்.,

    ReplyDelete
  18. பட்டறிவுக்கும்,பகுத்தறிவுக்கும் அருமையான கவிதை விளக்கம் அய்யா! நன்று.

    ReplyDelete
  19. ரெவெரி said...

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  20. "என் ராஜபாட்டை"- ராஜா said

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  21. என் ராஜபாட்டை"- ராஜா said...

    உடன் தங்கள் வலை வழி வருவேன்
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  22. நிகழ்காலத்தில்... said...

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  23. shanmugavel said...


    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  24. சித்தர் பாடல் பட்டறிவாம்-பிறர்
    செப்பிடின் அதையும் கேட்டறிவோம்
    புத்தர் கண்டதும் பட்டறிவாம்-அவர்
    போதனை அனத்தும் அதன்விளைவாம்
    உத்தமர் காந்தியின் பட்டறிவே-நமக்கு
    உரிமைக்கு விதையென நாமறிவோம்
    எத்தகை செயலுக்கும் பட்டறிவே-என
    என்றும் ஆய்தல் பகுத்தறிவே!//
    பட்டரிவுக்கும், பகுத்தறிவுக்கும் நல்ல விளக்கம்..

    ReplyDelete
  25. வழக்கம் போல அழகியதோர் கவிதை.
    பட்டறியாமல் படித்தறிய முடிகிறது.
    பாராட்டுக்கள். அன்புடன் vgk

    ReplyDelete
  26. பட்டறிதலின் நிறைவே பகுத்தறிதல் என சொல்லிய விதம் அருமை அய்யா, தமிழ்ச்சோழன் நீங்கள்
    தம 9

    ReplyDelete
  27. வேடந்தாங்கல் - கருன் *! said


    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  28. வை.கோபாலகிருஷ்ணன் said


    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  29. A.R.ராஜகோபாலன் said...


    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  30. துரைடேனியல் said...

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  31. தேவையான அறிவுறுத்தல் புலவரே..


    அருமை.

    ReplyDelete
  32. சொற்களால் விளையாடி விட்டீர்கள் புலவரே,
    பட்டறிவையும் பகுத்தறிவையும் இத்தனை எளிமையாக
    கவியில் கொண்டு வந்து எவ்வளவு அழகாக
    புரிய வைத்து விட்டீர்கள்.
    நன்றிகள் பல.

    ReplyDelete
  33. நான் ஒரு விதமான பணியில் சிக்கி உள்ளேன்... உங்கள் கவிதைகளுக்கு என்றென்றும் நான் தலை வணங்குகிறேன்... இலக்கியம் இலக்கியத்திற்கு என்று போராடும் புலவர்களுக்கு மத்தியில் இந்த எழுத்துக்கள் சாதாரண மக்களுக்கு சென்று சேர வேண்டும் என்று உறுதி பூண்டு உள்ளது எனக்கு ஆரம்பம் முதலே வியப்பு அளித்துள்ளது... நான் முன்பு போல் பதிவு எழுத கூட வரவில்லை... நடுவில் மின்சார தடை, இனைய இணைப்பு தடை என்று எத்தனையோ விஷயங்கள்... மீண்டும் வழக்கம் போல் வர ஆரம்பித்திருக்கிறேன்... கவிதை போட்டி என்று கூறினேன்... ஒரு பகிர்வுக்கு மட்டுமே...

    வழக்கம் போலவே இந்த கவிதையும் அருமை... பட்டறிவு தான் பகுத்தறிவுக்கு இட்டு செல்லும் என்பது என் எண்ணம்.. தங்கள் மீது எந்த விதமான கோபமும் இல்லை... இப்பொழுது மின்சார தடை இங்கு ஐந்து மணி முதல் ஆறு மணி நேரம் நீடிக்கிறது.. விரைவில் எட்டு மணி நேரம் என்று வரும் பொழுது என்ன செய்யப் போகிறோம் என்றே தெரியவில்லை

    ReplyDelete
  34. பட்டறிவும் பகுத்தறிவும் தெளிவாய் சொல்லும் கவிதை அருமை ஐயா

    த.ம 14

    ReplyDelete
  35. இரண்டு அறிவினையும் அருமையாக வகுத்துச் சொன்னீர்கள் ஐயா மிக்க நன்றி பகிர்வுக்கு ....

    ReplyDelete
  36. பட்டறிவையும் பகுத்தறிவையும் பிரித்தறியச் செய்கிறது கவிதை.

    பகிர்வுக்கு நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  37. பட்டறிவு பகுத்தறிவு
    இரண்டையும் அருமையாக தங்கள் பாட்டால்
    புரிய வைத்து விட்டீர்கள்
    கவிதை அருமை ஐயா

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...