சின்னஞ் சிறுக் குழவி
சிங்கார இளங் குழவி
கன்னம் குழி விழவும்
களுக்கென்று நீசிரிப்பின்
அன்னை முக மாகும்
அன்றலரும் தாமரை போல்
தன்னை மறந்த தவளும்
தாலாட்டு பாடு வளாம்
பூவின் இதழ் போல
பொக்கை வாய் விரிய
நாவின் சுவை அறிய
நறுந் தேனை தடவிட
பாவின் பண் போல
பைந்தமிழ் சுவை போல
காவின் எழில் போல
களிப்பாயே தேன் சுவையில்
கண்ணே நீ உறங்கு
கற்கண்டே நீ உறங்கு
விண்ணில் தவழ் கின்ற
வெண்மதியே நீ உறங்கு
வண்ண மங்கா மல்
வரைந்த நல் ஓவியமே
மண்ணை வள மாக்கும்
மழைத் துளியே நீயுறங்கு
கொஞ்சும் மழலைக் கோர்
குழல் இசையும் ஈடாமோ
பஞ்சின் மெல்லிய சீர்
பாததில் நீ நடப்பின்
அஞ்சிடும் அன்னை மனம்
அடிதவறி விழுவா யென
நெஞ்சிலே சுமந் திடுவாள்
நீவளரும் வரை யவளே
புலவர் சா இராமாநுசம்
கொஞ்சும் மழலைக் கோர்
ReplyDeleteகுழல் இசையும் ஈடாமோ// எந்த இசைக்கும் ஈடாகாது..
வேடந்தாங்கல் - கருன் *!
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்நன்றி
புலவர் சா இராமாநுசம்
நல்லதொரு தாலாட்டு குழந்தைகள் தினத்தில்...வாழ்த்துக்கள் அய்யா...
ReplyDeleteரெவெரி said...
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்நன்றி
புலவர் சா இராமாநுசம்
குழந்தையை மடியில் போட்டு பாடியது போல் உள்ளது ஐயா இந்த பாடல் ,அருமை
ReplyDeleteத.ம 3
//அன்னை முக மாகும்
ReplyDeleteஅன்றலரும் தாமரை போல்
தன்னை மறந்த தவளும்
தாலாட்டு பாடு வளாம்//
ஆமாம் அய்யா! ஒவ்வொரு தாயின் அனுபவம்,நன்று.
M.R said...
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்நன்றி
புலவர் சா இராமாநுசம்
shanmugavel said
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்நன்றி
புலவர் சா இராமாநுசம்
சென்னை பித்தன் said...
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்நன்றி
புலவர் சா இராமாநுசம்
அழகான கவிதை... வாழ்த்துக்கள் ஐயா!
ReplyDeleteநல்ல பதிவு ஐயா! தமிழர் சிந்தனை களத்தில் உங்கள் பணிகள் மிகவும் அருமையானது, தமிழை மக்கள் மறந்து வரும் சூழலில் ஆங்கில மோகம் ஆட்டி படைக்கும் நேரத்தில், நுனிநாக்கில் ஆங்கிலம் பேசினால்தான் பெருமை என்று நினைக்கும் காலத்தில் தமிழை அமுதாய் கவிதையாய் வடிக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteமழலையை மடியேந்திய காலத்தை மனக்கண் முன் மீண்டும் கொண்டுவந்து மகிழ்ந்தேன். கண்ணே கற்கண்டே என்பதோடு மண்ணை வளமாக்க வந்த மழைத்துளியே என்ற தாலாட்டில் தன்னலமற்ற பொதுநலம் படிந்திருப்பதைக் கண்டு வியந்தேன். அற்புதத் தாலாட்டுப் பாடிய ஐயாவுக்கு என் வணக்கம்.
ReplyDeleteஅழகான கவிவரிகள்
ReplyDeleteமாய உலகம் said
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்நன்றி
புலவர் சா இராமாநுசம்
PUTHIYATHENRAL said
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்நன்றி
புலவர் சா இராமாநுசம்
கீதா said...
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்நன்றி
புலவர் சா இராமாநுசம்
K.s.s.Rajh said...
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்நன்றி
புலவர் சா இராமாநுசம்
நல்லபதிவு வாழ்த்துக்கள், தமிழர் சிந்தனை களத்தில் நல்ல பல பதிவுகளை வழங்கி உள்ளீர்கள். நன்றி தோழரே.
ReplyDeleteகொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!
http://www.sinthikkavum.net/2011/11/blog-post_15.html
அருமை... அருமை... குழந்தையின் மழலைபோலவே இனித்தது...
ReplyDeleteதங்கள் படைப்புகளை பதிவர் தென்ற-ல் பயன்படுத்திக்கொள்ள விருப்பம். தங்களுக்கு...
ReplyDeletethambaramanbu@gmail.com
குழந்தைகள் தின கவிதை... ரசித்து படித்தேன்
ReplyDeleteநம்ம தளத்தில்:
பேஸ்புக், டிவிட்டர், கூகிள் ப்ளஸ், RSS - நமது தளங்களில் வைப்பது எப்படி?
PUTHIYATHENRAL said
ReplyDeleteஅன்பரே!
தங்கள் வலைவழி வந்து,படித்து
பாராட்டி இருக்கிறேன்.
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
குடந்தை அன்புமணி
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்நன்றி
புலவர் சா இராமாநுசம்
குடந்தை அன்புமணி said
ReplyDeleteஐயா!
கரும்பு தின்ன கூலியா...?
தாங்கள் என் வலைவழி வருகின்ற எல்லா
கவிதைகளையும் என்பெயரோடு தாராளமாகப் பயன் படுத்திக்
கொள்ளுங்கள்.
எந்த மறுப்பும் இல்லை!
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
தமிழ்வாசி - Prakash said
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்நன்றி
புலவர் சா இராமாநுசம்
அருமையான பாடல் ஐயா ..
ReplyDeleteமுடிந்தவர்கள் யாராவது ஒரு ராகமிட்டுப் பாடினால் மிக மிக அருமையானதொரு தாலாட்டு !
ReplyDeleteகுழவி.. குழவி.. என்று நீங்கள் குழைந்தது நன்றாகவே இருக்கிறது.. நீங்களும் ஒரு குழவிதானே ஐயா எங்களுக்கு..!!
ReplyDeleteநேரமிருந்தால் இங்கேயும் வருகை தருமாறு அன்போடு அழைக்கிறேன்..
ReplyDeleteஎனது வலையில்
வெற்றியின் அடிப்படையில் உடல்நலம்
உங்கள் internet speed உடனடியாக தெரிந்துகொள்ள
நேரமிருக்கும்போது தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!
”””கண்ணே நீ உறங்கு
ReplyDeleteகற்கண்டே நீ உறங்கு
விண்ணில் தவழ் கின்ற
வெண்மதியே நீ உறங்கு
வண்ண மங்கா மல்
வரைந்த நல் ஓவியமே
மண்ணை வள மாக்கும்
மழைத் துளியே நீயுறங்கு”””
தாலாட்டின் தனித்துவத்தை
தீந்தமிழில் தந்த விதம்
அருமை அய்யா.
மீண்டும் குழந்தையானேன்
பைந்தமிழ் சுவை போல
ReplyDeleteகாவின் எழில் போல
களிப்பாயே தேன் சுவையில்/
தித்திக்கும் தீஞ்சுவைப்பாடலால்
எழிலாய மழலைரை வாழ்த்திய பகிர்வுக்குப் பாராட்டுக்கள் ஐயா..
அருமையான வரிகளால் சிறுவர் தினப் பாடல் -
ReplyDeleteமிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு ...
குழந்தைகளின் மழலையைப்போலவே அழகுக்கவிதை.
ReplyDeleteபாராட்டுக்கள். அன்புடன் vgk