மனிதா மனிதா ஏமனிதா-நாளை
மரணம் வந்தே நெருங்குமுன்னே
புனிதா புனிதா என்றுலகு-நாளும்
போற்ற ஏதும் செய்தாயா
நனிதா அல்ல ஒன்றேனும்-வாழ்வில்
நலிந்தோர் தமக்குத் தந்தாயா
இனிதா இதைநீ செய்திடுவாய்-உடன்
இணையில் இன்பம் எய்திடுவாய்
பிறந்தேம் என்பது பெரிதல்ல-மனிதப்
பிறவியாய் பிறப்பதும் எளிதல்ல
சிறந்தோம் ஏதோ ஒருவகையே-பிறர்
செப்பிட வாழ்பவர் பெருந்தகையே
துறந்தார் முற்றும் துறந்தாராய்-அவரும்
தூய்மையை சற்றே குறைந்தாராய்
இருந்தால் அவரையும் ஏற்காதே-பிறகு
இவ்வுலகம் அவரைச் சேர்க்காதே
தேவைக்கு மேலே பொருள்தேடி-அவர்
தினமும் சேர்த்தது பலகோடி
சாவைத் தடுக்குமா அப்பணமே-மன
சாந்தியைக் கொடுக்குமா அப்பணமே
நாவைத் தாண்டினால் சுவையறியா-நாம்
நாளும் உண்ணும் உணவறியா
பாவைக் கூத்தாம் இகவாழ்வே-அதிக
பணம்பெரின் இல்லை சுகவாழ்வே
அன்னை வயிற்றில் உருவானோம்-எரியும்
அக்கினி தனக்கே எருவானோம்
பொன்னை எடுத்துப் போனோமா-சேர்த்த
பொருளை எடுத்துப் போனோமா
கண்ணை மூடின் திறப்பதில்லை-இரு
கையும் காலும் ஆடவில்லை
மண்ணில் பிறந்த மனிதர்களே-இதை
மறப்பின் இல்லை புனிதர்களே!
புலவர் சா இராமாநுசம்
மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும்
ReplyDeleteஅற்புத வரிகள்
அவசியம் அனைவரும் தினமும் ஒருமுறை
எண்ணிப் பார்க்கவேண்டிய கருத்து
மனம் கவர்ந்த பதிவு
த.ம 1
சிந்தனையைத் தூண்டும் வரிகள்.... நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய கவிதை வரிகள்....
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி ஐயா....
சாவை தடுக்காத பணத்திற்காக மனிதன் ஓடும் ஓட்டம் கொஞ்சமா ?!
ReplyDeleteசிந்திக்க வைக்கும் கவிதை ! இது போன்றவற்றை படித்து நாளும் நம்மை புதுபித்து கொள்ளவேண்டும்...
உங்களின் வரிகள் அப்படியே மனதில் பதிந்துவிட்டது. நன்றிகள் பல.
Ramani said...
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
வெங்கட் நாகராஜ் said...
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
Kousalya said...
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
////அன்னை வயிற்றில் உருவானோம்-எரியும்
ReplyDeleteஅக்கினி தனக்கே எருவானோம்
பொன்னை எடுத்துப் போனோமா-சேர்த்த
பொருளை எடுத்துப் போனோமா
கண்ணை மூடின் திறப்பதில்லை-இரு
கையும் காலும் ஆடவில்லை
மண்ணில் பிறந்த மனிதர்களே-இதை
மறப்பின் இல்லை புனிதர்களே!////
சிந்தனையை தூண்டும் வரிகள் அருமை ஜயா
அன்னை வயிற்றில் உருவானோம்-எரியும்
ReplyDeleteஅக்கினி தனக்கே எருவானோம்
பொன்னை எடுத்துப் போனோமா-சேர்த்த
பொருளை எடுத்துப் போனோமா
கண்ணை மூடின் திறப்பதில்லை-இரு
கையும் காலும் ஆடவில்லை
மண்ணில் பிறந்த மனிதர்களே-இதை
மறப்பின் இல்லை புனிதர்களே!//
மாவீரன் அலக்சாண்டர்தான் எனக்கு நினைவுக்கு வருகிறார், உலகையே கைபற்றிய அவர் தன் சவப்பெட்டியில் இரண்டு கைகளும் வெளியே தெரியும்படி வைக்கசொன்னாராம், அதற்கு அர்த்தம், நான் இந்த உலகுக்கு ஒன்றும் கொண்டு வரவும் இல்லை கொண்டு போகவும் இல்லை என்பதாகும்....!!!
MANO நாஞ்சில் மனோ said...
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
அன்னை வயிற்றில் உருவானோம்-எரியும்
ReplyDeleteஅக்கினி தனக்கே எருவானோம்
பொன்னை எடுத்துப் போனோமா-சேர்த்த
பொருளை எடுத்துப் போனோமா
கண்ணை மூடின் திறப்பதில்லை-இரு
கையும் காலும் ஆடவில்லை
மண்ணில் பிறந்த மனிதர்களே-இதை
மறப்பின் இல்லை புனிதர்களே!//
நிலையில்லா உலகில் நிலையில்லா மனிதர்கள்..
வேடந்தாங்கல் - கருன் *! said
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
tamil manam 7...........
ReplyDeleteஐயா வேலை பளு காரணமாக பதிவுகளுக்கு கருத்தும் வாக்கும் இட முடிவதில்லை ...ஆனால் படிக்க தவறாத மிக முக்கியாமான பதிவுகளில் உங்கள் பதிவும் ஒன்று ... நானும் விரைவில் அதிக பதிவுகளுடன் உங்களை தொல்லை செய்ய வருவேன் ஐயா
ReplyDeleteநல்ல கவிதை
ReplyDeleteமனதைத்தொட்ட வரிகள்
தேவைக்கு மேலே பொருள்தேடி-அவர்
தினமும் சேர்த்தது பலகோடி
சாவைத் தடுக்குமா அப்பணமே-மன
சாந்தியைக் கொடுக்குமா அப்பணமே
நாவைத் தாண்டினால் சுவையறியா-நாம்
நாளும் உண்ணும் உணவறியா
பாவைக் கூத்தாம் இகவாழ்வே-அதிக
பணம்பெரின் இல்லை சுகவாழ்
அருமையான சிந்தனை ஐயா
த.ம 8
வரிகள்
ReplyDeleteவடம் பிடித்து என்னை
வரவழைந்து
வந்து விட்டன
வாழ்த்துகள் அய்யா
அனல் பறக்கிறது
அழகு மிளிர்கிறது
அருமருந்தாய் இனிக்கிறது
வார்த்தை யில்லை
வாழ்த்த
அன்புடன்
திகழ்
//அன்னை வயிற்றில் உருவானோம்-எரியும்
ReplyDeleteஅக்கினி தனக்கே எருவானோம்
பொன்னை எடுத்துப் போனோமா-சேர்த்த
பொருளை எடுத்துப் போனோமா
கண்ணை மூடின் திறப்பதில்லை-இரு
கையும் காலும் ஆடவில்லை
மண்ணில் பிறந்த மனிதர்களே-இதை
மறப்பின் இல்லை புனிதர்களே!//
வணக்கம் ஐயா..
சிந்தனைகளை தூண்டிய வரிகள்.
தொடருங்கள்..தொடர்ந்து வருகிறோம்
சிந்திக்க வைக்கும் கருத்து.சிறப்பான கவிதை.
ReplyDeleteகவிதை
ReplyDeleteமுத்துக்களாய்...பெறுமதியாய் இருக்கிறது
வாழ்த்துக்கள்....
நல்ல கவிதை/வாழ்த்துக்கள்.
ReplyDeleteசிந்திக்க வைக்கும் கருத்து... நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய வரிகள் ஐயா...
ReplyDeleteஅறைகூவல் கவிதை
ReplyDeleteஅருமையோ அருமை.
இது போன்ற மரபுக் கவிதைகளை பார்ப்பது அபூர்வமாகி விட்டது.
மனம் சந்தோசமாய் இருக்கிறது அய்யா.
அத்தனை வரிகளும் வாழ்வின் தத்துவம்.மனதில் பதிய வைக்கவேண்டிய பொன்மொழிகள்போலக் கவிதை !
ReplyDeleteஅவசியம் சிந்திக்க வேண்டிய வரிகள் அய்யா! பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteரியாஸ் அஹமது said...
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
ரியாஸ் அஹமது said...
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
M.R said...
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
திகழ் said...
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
சம்பத் குமார் said...
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
சென்னை பித்தன் said...
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
F.NIHAZA said
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
விமலன் said...
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
ரெவெரி said...
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
சிவகுமாரன் said...
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
ஹேமா said...
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
shanmugavel said
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
சிந்தனை தூண்டும் வரிகள் அருமை பாராட்டுக்கள்
ReplyDeleteதமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in
அன்னை வயிற்றில் உருவானோம்-எரியும்
ReplyDeleteஅக்கினி தனக்கே எருவானோம்
பொன்னை எடுத்துப் போனோமா-சேர்த்த
பொருளை எடுத்துப் போனோமா
கண்ணை மூடின் திறப்பதில்லை-இரு
கையும் காலும் ஆடவில்லை
மண்ணில் பிறந்த மனிதர்களே-இதை
மறப்பின் இல்லை புனிதர்களே!
என்ன சொல்ல எப்போதுமே உங்கள் கவிதைவரிகளில்
தனி அழகு இருக்கும் இதை எவ்வாறு எழுதுகின்றீர்கள் என எனக்கு வியப்பாக உள்ளது .வாழ்த்துக்கள் ஐயா .மிக்க நன்றி பகிர்வுக்கு .வாருங்கள் என் தளத்திற்கும் ஒரு வாழ்த்துச் சொல்வோம் .
மனதினுள் ஊடுருவும்
ReplyDeleteஆணித்தரமான வார்த்தைகள் ஐயா...
சொற்களின் வீரியத்தை எண்ணி எண்ணி பெருமை கொள்கிறேன்...
உம கவிக்கு அடிமை நான் புலவரே....
தமிழ்தோட்டம் said...
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
அம்பாளடியாள் said...
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
மகேந்திரன் said...
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
சிந்தனை தூண்டும் வரிகள்... மிக அருமை ஐயா!
ReplyDelete