அன்பு நெஞ்சங்களே! மாண்புமிகு அமைச்சர்
திருமிகு, நாராயணசாமி அவர்கள் கூடங்குளம்
போராட்டம் பற்றி கொச்சைப் படுத்திப் பேசியுள்ளார்
அதன் விளைவே இக்கவிதை மீண்டும் வந்துள்ளது!
மீண்டும் எழுந்தது போராட்டம்-அரசை
மிரட்டவும் அல்ல போராட்டம்
தூண்டி வருவதும் இதுவல்ல-உயிர்
துச்சமா எண்ணிடல் எளிதல்ல
வேண்டி யாரும் செய்யவில்லை-வாழ
வேண்டியே வேறு வழியில்லை
சீண்டியே அவர்களை விடுவீரோ-அரசுகள்
சிந்தித்து செயலும் படுவீரோ
தேர்தல் கருதி சொன்னீரோ-ஓட்டுத்
தேவையைக் கருதி சொன்னீரோ
தேர்தல் முடிந்தால் தெரிந்துவிடும்-மிக
தெளிவாய் அனைத்தும் புரிந்துவிடும்
யார்தலை யிட்டு முடிப்பாரோ-எவரெவர்
என்ன முடிவு எடுப்பாரோ
போர்மிக அறவழி நடந்தாலும்-அதில்
புகுந்தால் அரசியல் கெட்டுவிடும்
செய்யும் எண்ணம் அரசுக்கே-ஏனோ
சிறிதும் இருக்குமா என்றேதான்
ஐயம் என்னுள் எழுகிறதே-நெஞ்சும்
அஞ்சி பயத்தில் விழுகிறதே
பொய்யும் புரட்டுமே அரசியலே-இன்று
போனதே கட்சிகள் அரசியலே
உய்யும் வழியே தெரியவில்லை-இந்த
உண்மை பலருக்கும் புரியவில்லை
மக்கள் அச்சம் ஒன்றேதான்-போர்
மீளவும் காரணம் இன்றேதான்
தக்கதோர் முடிபு காண்பீரே-அதை
தணித்திட உறுதி பூண்பீரே
துக்கம் போக்கிட அரசுகளே-இரு
தூணாய் விளங்கும் அரசுகளே
மக்கள் குரலை மதிப்பீரேல்-உடன்
மகிழ்ந்து போற்றிக் குதிப்பாரே!
புலவர் சா இராமாநுசம்
நல்ல கவிதை.
ReplyDeleteநன்றி ஐயா.
அந்த அமைச்சரை அங்கு நிரந்தரமாக குடி அமர்த்த வேண்டும்.
ReplyDeleteகவிதை அருமை..
அய்யா உங்களுக்காக ஈகரை வலை தளத்தில் கவிதை போட்டி வைத்திருக்கிறார்களாம், ஒரு எட்டு பார்த்து விட்டு வரலாமே... எட்டு கவிதை அனுப்பலாமாம் எட்டு பிரிவுகளில்
ReplyDeleteஎத்தனை விசயங்களுக்காக காத்து கிடப்பது. சிறப்பான கவிதை ஐயா
ReplyDeleteசிறப்பான கவிதை
ReplyDeleteவரவேண்டியநேரத்தில் வந்த அருமையான கவிதை
ReplyDeleteRathnavel said...
ReplyDeleteநன்றி ஐயா
புலவர் சா இராமாநுசம்
வேடந்தாங்கல் - கருன் *! said...
ReplyDeleteநன்றி சகோ!
புலவர் சா இராமாநுசம்
suryajeeva said...
ReplyDeleteநன்றி சகோ!
புலவர் சா இராமாநுசம்
சிறந்த கவிதை.
ReplyDeleteசாகம்பரி said...
ReplyDeleteநன்றி சகோதரி!
புலவர் சா இராமாநுசம்
K.s.s.Rajh said...
ReplyDeleteநன்றி சகோ!
புலவர் சா இராமாநுசம்
அம்பலத்தார் said...
ReplyDeleteநன்றி சகோ!
புலவர் சா இராமாநுசம்
சென்னை பித்தன் said
ReplyDeleteநன்றி ஐயா
புலவர் சா இராமாநுசம்
கவிதை மிகவும் அருமை ஐயா..
ReplyDeleteதங்கள் அறிவுரை
எட்ட வேண்டியவர்களுக்கு எட்டட்டும் ...
நம்பிக்கையில்
ReplyDeleteநம்பிக்கை வையுங்கள் ..:)
கதை அருமை
அருமை ஐயா ! சோதனைகளைத் தாண்டி சாதனை புரிவோம்!
ReplyDeleteபோராட்டத்திலிருந்து மக்களைத் திசைத் திருப்ப மத்திய அரசு செய்த சதி. இதனால் போராட்டம் வலுக்குமே அன்றி வலுவிழக்காது.
ReplyDeleteகவிதை அருமை ஐயா!
எனக்கென்னவோ இந்தப் போராட்டம் எழுப்பும் கேள்விகளால் பல தெளிவுகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்றே தோன்றுகிறது. உண்மை நிலை உணரப்படும்போது, எல்லாம் சரியாகிவிடும் ஒரு விஷயத்தை உணர்ச்சிகளால் அணுகுவதைவிட அறிவால் அறிய முற்படுவதே சிறந்ததாயிருக்கும்.விழித்தெழுவோம், அறியாமை இருளிலிருந்து. வாழ்த்துக்கள்.
ReplyDeleteசிறப்பான கவிதை ஐயா...
ReplyDeleteமதி நிறை அய்யா வணக்கம்
ReplyDeleteதங்களின் உடல் நிலை இப்பொழுது நலமாக இருக்கும்
என நம்புகிறேன். உடல் நலனில் கவனம் கொள்ளுங்கள்
வழமை போலவே அருமையான கவிதை, அமர்க்களம்.
கூலிக்கு மாரடிக்கும் கூட்டங்கள்
ReplyDeleteவரிசையாக வந்து தங்கள் பணியைச் செய்து போகிறார்கள் ஐயா..
இன்னும் வருவார்கள்..
தொடர்ந்து முயற்சிப்பார்கள்...
வெல்லட்டும் மக்கள் சக்தி..
ஓங்கட்டும் இணைந்த கைகள்...