வேண்டாம் வெளிச்சம் எதனாலே-நெஞ்சு
வேதனைப் படுமாம் அதனாலே
இங்கே
இயற்கை படைத்த ஓவியமே
இந்த உலகமென்றக் காவியமே
செயற்கை என்னும் ஆயுதமே
சிதைக்க நாளும் பாயுதம்மே
இயற்கை அழிய அழியத்தான்
இன்னல் பல்வகை வழியத்தான்
செயற்கைச் செய்யும் சீரழிவை
செப்பியும் கேளா பேரழிவை
பார்க்க
வேண்டாம் வெளிச்சம் என்கின்றேன்
யாதும் ஊரே என்றானே
யாவரும் கேளீர் என்றானே
தீதும் நன்றும் பிறராலே
தேடி வாரா தென்றானே
சாதிச் சண்டை ஊரெங்கும்
சமயச் சண்டை உலகெங்கும
மோதிப் பார்க்க பலநாடும்
முடிவில் விளைவே சுடுகாடாம்
பார்க்க
வேண்டாம் வெளிச்சம் என்கின்றேன்
பற்று பாசம் எல்லாமே
பறக்க நெஞ்சில் இல்லாமே
சுற்றம் தாங்கும் நிலையுண்டா
சொன்னால ஆட்டும் தலையுண்டா
குற்றம் காண்பதே குணமாக
கொலையும் இங்கே கலையாக
பெற்றோம் நாமே பெரும்பேறும்
பேச்சும் செயலும் வெவ்வேறும்
பார்க்க
வேண்டாம் வெளிச்சம் என்கின்றேன்
இன்னும் சொல்ல பலவுண்டே
எழுதவும் இங்கே இடமுண்டே
பன்னும் பாவம் தெரியாமல்
பாதை எதுவென அறியாமல்
மின்னும் மின்னல் மேகத்தில்
மறைய அதுபோல் லோகத்தில்
பின்னும் எழுத மனமின்றி
பிரிந்தேன் நானும் மிகநன்றி
புலவர் சா இராமாநுசம்
//இயற்கை படைத்த ஓவியமே
ReplyDeleteஇந்த உலகமென்றக் காவியமே
செயற்கை என்னும் ஆயுதமே
சிதைக்க நாளும் பாயுதம்மே //
மிகவும் அழகிய வரிகள். பாராட்டுக்கள்.
தமிழ்மணத்தில் நானே முதல் வோட் போட்டுள்ளேன். நீங்கள் 2 வது வோட் போட்டுக்கொள்ளுங்கள், ஐயா.
உண்மைதானையா இந்தக் கொடுமைகளைப் பார்க்க
ReplyDeleteஏனோ வேண்டும் ஒரு வெளிச்சம் .நெஞ்சு கனக்குறது
தங்கள் கவிதைவரிகள் படித்தவுடன் .நீங்கள் நலமாக
வாழ வேண்டும் உங்கள் அன்பு உள்ளத்தில் ஓடும் வார்த்தைகள் எல்லாம் அடுத்தவர் நலன் கருதியே கவிதையாகிறது .உங்களைக் கண்டு பெருமைகொள்கின்றேன் ஐயா !.....
மிக்க நன்றி பகிர்வுக்கு .வாழ்க என்றும் நலனுடன் .
புலவர் ஐயா,
ReplyDeleteவரிகள் மனைதைத் தைக்கிறது.
நானும்,
வேண்டாம் வெளிச்சம் என்கின்றேன்.
புலவர் ஐயா, வணக்கம்.
ReplyDeleteதமிழ்மணத்தில் இந்த வார நட்சத்திரப் பதிவராக தேர்ந்தெடுத்திருப்பதால், தினமும் காலை 11 மணிக்கு ஒரு புத்தம் புதிய பதிவும், பிறகு பிற்பகல் 2 மணி,
4 மணி மற்றும் மாலை 6 மணிக்கு என, மூன்று மீள் பதிவுகளும் தந்து வருகிறேன்.
வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் முடிந்து விடும்.
தங்கள் உடல் நிலையைப்பார்த்துக் கொள்ளுங்கள். முடிந்தால் வருகை தந்தால் போதும்.
என்னைத் தாங்கள் மனதார வாழ்த்தினாலே போதும், ஐயா.
அன்புடன் vgk
நட்சத்திரப் புலமைக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் !
ReplyDeleteவெளிச்சம் வேண்டும் ஐயா.சுயநலத்தோடு எல்லோருமே இப்பா கண்ணைமூடிக்கொண்டு பாலைக் குடிச்சுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.அறிவுக் கண்ணையும் மூடி வெளிச்சம் வேண்டாம் என்றால் நல்லது நடக்க வழியே இல்லை.எனவே கல்விமான்களுக்கும் அறிவுஜீவிகளுக்கும் வெளிச்சம் வேண்டும் !
அருமை என்பதை தாண்டி சொற்கள் கிடைக்கவில்லை புலவரே
ReplyDeleteநன்று ஐயா!
ReplyDelete//இயற்கை படைத்த ஓவியமே
ReplyDeleteஇந்த உலகமென்றக் காவியமே
செயற்கை என்னும் ஆயுதமே
சிதைக்க நாளும் பாயுதம்மே //
மிகவும் நல்ல வரிகள்...
நல்ல கவிதை ஐயா...
இவற்றையெல்லாம் பார்க்க வெளிச்சம் வேண்டாம்தான்.நன்று.
ReplyDeleteஇயற்கை படைத்த ஓவியமே
ReplyDeleteஇந்த உலகமென்றக் காவியமே
செயற்கை என்னும் ஆயுதமே
சிதைக்க நாளும் பாயுதம்மே
இயற்கை அழிய அழியத்தான்
இன்னல் பல்வகை வழியத்தான்
செயற்கைச் செய்யும் சீரழிவை
செப்பியும் கேளா பேரழிவை
பார்க்க
வேண்டாம் வெளிச்சம் என்கின்றேன் //
செமையான டைமிங் கவிதை நன்று புலவரே...!!!
மீள் பதிவு ?
ReplyDeleteமிகவும் அழகிய வரிகள்...நல்ல கவிதை...
தங்கள் உடலைப்பார்த்துக்கொள்ளுங்கள்...
////இயற்கை படைத்த ஓவியமே
ReplyDeleteஇந்த உலகமென்றக் காவியமே
செயற்கை என்னும் ஆயுதமே
சிதைக்க நாளும் பாயுதம்மே
இயற்கை அழிய அழியத்தான்
இன்னல் பல்வகை வழியத்தான்
செயற்கைச் செய்யும் சீரழிவை
செப்பியும் கேளா பேரழிவை
பார்க்க
வேண்டாம் வெளிச்சம் என்கின்றேன்
////
எனக்கு இந்தவரிகள் மிகவும் பிடித்திருக்கின்றது ஜயா
அழகிய வரிகள் ,மனதைத் தொட்டது ஐயா
ReplyDeleteத.ம 8
//யாதும் ஊரே என்றானே
ReplyDeleteயாவரும் கேளீர் என்றானே
தீதும் நன்றும் பிறராலே
தேடி வாரா தென்றானே
சாதிச் சண்டை ஊரெங்கும்
சமயச் சண்டை உலகெங்கும
மோதிப் பார்க்க பலநாடும்
முடிவில் விளைவே சுடுகாடாம் //
ஆமாம் அய்யா! நல்ல கவிதை.
மீள்பதிவு இருந்தாலென்?நிகழ்வுகளையும்,அவலங்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டும் பதிவுக்குத் தலைப்பு ”வேண்டாம் வெளிச்சம் என்கிறேன்”வெளிச்சம் இருந்தும் கண்ணை மூடிக்கொண்டு இல்லை இல்லை என்று சொல்பவர் காணாத காட்சிகளை அல்லவா வெளிச்சம் போட்டுக் காண்பித்திருக்கிறீர். பாராட்டுக்கள். நலந்தானே. ?நலம் அறிய விழைகிறேன்.
ReplyDeleteவை.கோபாலகிருஷ்ணன் said
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழத்துக்கும்
மிக்க நன்றி
புலவர் சா இராமாநுசம்
அம்பாளடியாள் said...
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி
புலவர் சா இராமாநுசம்
சத்ரியன் said...
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி
புலவர் சா இராமாநுசம்
ஹேமா said...
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி
புலவர் சா இராமாநுசம்
suryajeeva said...
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி
புலவர் சா இராமாநுசம்
NIZAMUDEEN said
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி
புலவர் சா இராமாநுசம்
வெங்கட் நாகராஜ் said...
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி
புலவர் சா இராமாநுசம்
சென்னை பித்தன் said...
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி
புலவர் சா இராமாநுசம்
MANO நாஞ்சில் மனோ said...
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி
புலவர் சா இராமாநுசம்
ரெவெரி said...
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி
புலவர் சா இராமாநுசம்
K.s.s.Rajh said...
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி
புலவர் சா இராமாநுசம்
M.R said...
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி
புலவர் சா இராமாநுசம்
shanmugavel said...
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி
புலவர் சா இராமாநுசம்
G.M Balasubramaniam said...
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி
புலவர் சா இராமாநுசம்
வணக்கம்!
ReplyDelete//சாதிச் சண்டை ஊரெங்கும்
சமயச் சண்டை உலகெங்கும
மோதிப் பார்க்க பலநாடும்
முடிவில் விளைவே சுடுகாடாம்//
சிந்தனையத் தூண்டும் தாங்கள் வலைப் பதிவில் கட்டுரைகளும் தரலாமே.
அருமையான கவிதை ஐயா ..
ReplyDeleteதாங்கள் அடுக்கும் வார்த்தைகள்
படிக்க படிக்க மீண்டும் படிக்க தூண்டுகிறது
அழகான கவிதை
ReplyDeleteவெளிச்சம் வேண்டும் ஐயா நுன்னிய பார்வையுடன் எல்லாவற்றையும் நோக்கும் ஞான ஒளி வேண்டும்.
ReplyDeleteஉடல் நலத்தைக் கவனியுங்கள் புலவரே.