Monday, November 7, 2011

எங்கே போனாய் நிம்மதியே



எங்கே போனாய் நிம்மதியே-உனை
    எண்ணிக் கலங்குது என்மதியே
அங்கே இங்கே உனைத்தேடி-நான்
    அலைந்தும் மறைந்தாய் நீஓடி

உழுது உண்ணும் உழவன்தான்-வாழ்வில்
     உன்னைக் காணா தழுவான்தான்
தொழுது வணங்க வேண்டியவன்-படும்
     துயரம் நீக்கிட  போனாயா

சங்கு ஊதினால் ஓடுகின்றான்-ஒருவன்
     சாலையில் தாரைப் போடுகின்றான்
மங்கும் அன்னவர் வாழ்வதனை-நீ
     மாற்றிட வாவது போனாயா

நெய்யும் தொழிலுக்கு நிகரில்லை—என
     நினைத்தவன் வாழ்விலும் நீயில்லை
பொய்யும் புரட்டுமே வாழ்வாக-பணத்தில்
     புரளுவோன் வாழ்விலும் நீயில்லை

பொருளைச் சேர்க்கத் தொடங்கியதும்-விட்டுப்
     போனது போவது நிம்மதியே
அருளைத் தேடியே அலைபவனும்-பாபம்
     அடைந்த உண்டா நிம்மதியே

பெற்றவர் மனதிலும் நீயில்லை-அவர்
      பிள்ளைகள் மனதிலும் நீயில்லை
கற்றவர் மனதிலும் நீயில்லை-கல்வி
      கல்லார் மனதிலும் நீயில்லை

எல்லார் வாழ்விலும் இல்லாவாய்-நீ
     இருப்பின் பொருள்தரா சொல்லாவாய்
பல்லார்  மனதிலும் இவ்வாறே-இன்றிப்
     பறந்தால் வாழ்வது எவ்வாறே

ஆண்டவர் வாழ்விலும் நீயில்லை-இன்று
     ஆள்பவர் வாழ்விலும் நீயில்லை
மாண்டவர்  வாழ்வொடு போனாயோ-பொருள்
     மாறிட நிம்மதி  ஆனாயோ

                         புலவர் சா இராமாநுசம்

 
            


 

50 comments :

  1. யாருமே தொலைக்கவில்லை இருந்தாலும்
    தேடிக்கொண்டே இருக்கிறோம் நிம்மதியை..

    ReplyDelete
  2. மேற்கண்ட வரிகளை சாப்பிட்ட வரிகள்..

    மாண்டவர் வாழ்வொடு போனாயோ-பொருள்
    மாறிட நிம்மதி ஆனாயோ

    அருமை புலவரே..

    ReplyDelete
  3. நிம்மதியை நாமே தெரிந்தோ தெரியாமலோ தொலைத்து விட்டு, பிறகு “எங்கே போனாய் நிம்மதியே?” என்று கேட்டு வருகிறோம்.

    நல்ல பாடால். பாராட்டுக்கள்.
    தமிழ்மணம்: 3

    [தயவுசெய்து இன்று முதல் 7 நாட்களுக்கு,[ காலை 11 மணி, மதியம் 2 மணி, 4 மணி, 6 மணிக்கு ] என நான்கு முறைகள், என் வலைப்பூவுக்கு வருகை தந்து வாழ்த்த வேணுமாய் கேட்டுக்கொள்கிறேன். இந்த ஒரு வாரம் மட்டும் தமிழ்மணத்தில், நான் நட்சத்திரப் பதிவராம்]

    ReplyDelete
  4. நல்ல பாடல்... எங்கே போனது நிம்மதி.... :)

    ReplyDelete
  5. நிம்மதி பற்றிய இன்னொரு சிறந்த வரிகள். பணி தொடரட்டும். உங்களைக் காணோமே! வாழ்த்துகள் ஐயா.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete
  6. நிம்மதி எப்போது கிடைக்கும்...........தேடியபடி மானுட வாழ்க்கை

    ReplyDelete
  7. முனைவர்.இரா.குணசீலன் said

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  8. முனைவர்.இரா.குணசீலன் said.

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  9. வை.கோபாலகிருஷ்ணன் said...

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  10. வெங்கட் நாகராஜ் said..

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  11. kovaikkavi said.

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  12. K.s.s.Rajh said

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  13. மாண்டவர் வாழ்வொடு போனாயோ//

    உண்மையில் நிம்மதி மாண்டவர் வாழ்வோடு போய்விட்டது தானய்யா... இந்த பரபரப்பான வாழ்க்கையில் நிம்மதி என்பது ஏது? நல்லவர்களுக்கெல்லாம் துயரம் தான்... கவிதையில் ஆதங்க எதார்த்தம் அழகாக புகட்டியுள்ளீர்கள் ஐயா... பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  14. நெய்யும் தொழிலுக்கு நிகரில்லை—என
    நினைத்தவன் வாழ்விலும் நீயில்லை
    பொய்யும் புரட்டுமே வாழ்வாக-பணத்தில்
    புரளுவோன் வாழ்விலும் நீயில்லை//

    நிதர்சனமான உண்மை....!!!

    ReplyDelete
  15. உணர்ந்தவர்களுக்கு மிக அருகிலும்
    தேடுவோருக்கு கிடைக்காமலும் இருப்பது
    ஆண்டவன் மட்டும் இல்லை நிம்மதியும்தான்
    எனக் கொள்ளலாமா ?
    அருமையான படைப்பு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. வணக்கம் ஐயா!
    நலம் எப்படி ஐயா?

    பொருளைச் சேர்க்கத் தொடங்கியதும்-விட்டுப்
    போனது போவது நிம்மதியே//

    ஆமாம் !இல்லாத போது இல்லையே என்ற கவலை வந்த பிறகு பத்தவில்லையே என்ற கவலை.
    எங்கே போனது நிம்மதியே?

    ReplyDelete
  17. /எங்கே போனாய் நிம்மதியே-உனை
    எண்ணிக் கலங்குது என்மதியே
    அங்கே இங்கே உனைத்தேடி-நான்
    அலைந்தும் மறைந்தாய் நீஓடி/

    /மாண்டவர் வாழ்வொடு போனாயோ-பொருள்
    மாறிட நிம்மதி ஆனாயோ/

    அழகு அய்யா

    ReplyDelete
  18. /Ramani said...

    உணர்ந்தவர்களுக்கு மிக அருகிலும்
    தேடுவோருக்கு கிடைக்காமலும் இருப்பது /

    எவ்வளவு உண்மை

    ReplyDelete
  19. என்மதியே
    அங்கே இங்கே உனைத்தேடி-நான்
    அலைந்தும் மறைந்தாய் நீஓடி /// என்ன ஆச்சு புலவரே?

    ReplyDelete
  20. மாய உலகம் said..

    சகோ தங்கள் வலை இரண்டு நாட்களாக
    தென்படவில்லையே ஏன்?

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  21. தொழுது வணங்க வேண்டியவன்-படும்
    துயரம் நீக்கிட போனாயா /// ஆமால்ல, எங்க போச்சு இந்த நிம்மதி உழவர்களிடத்தில்..

    ReplyDelete
  22. பொய்யும் புரட்டுமே வாழ்வாக-பணத்தில்
    புரளுவோன் /// உண்மையான வரிகள்..

    ReplyDelete
  23. பொய்யும் புரட்டுமே வாழ்வாக-பணத்தில்
    புரளுவோன் // ஆமாம் ஒருவன் பணத்தை எப்போது சேர்க்க வேண்டும் என்று அலைகிறானோ அப்போதே போய்விடுகிறது இந்த நிம்மதி.

    ReplyDelete
  24. ஆம் , கேட்கணும் என்றிருந்தேன் உங்கள் உடல்நலம் இப்போது பரவா இல்லையா?

    ReplyDelete
  25. MANO நாஞ்சில் மனோ said...

    எடுத்துக் காட்டி பாராட்டிய
    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  26. Ramani said..

    அருமையான கேள்வி சகோ!
    ஆண்டவனும்,நிம்மதியும்
    இரண்டையும் ஒப்பிட்டுக் காட்டிய தங்கள் கேள்வி
    முற்றிலும் உண்மை!

    எடுத்துக் காட்டி பாராட்டிய
    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  27. Ramani said.

    ஓட்டளிப்புக்கு நன்றி!சகோ!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  28. கோகுல் said..

    எடுத்துக் காட்டி பாராட்டிய
    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  29. திகழ் said...எடுத்துக் காட்டி பாராட்டிய
    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  30. திகழ் said..

    ஆம் சகோ!
    நண்பர் இரமணியின் வாக்கு
    முற்றிலும் சரி!நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  31. * வேடந்தாங்கல் - கருன் *! said..

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  32. * வேடந்தாங்கல் - கருன் *! said..

    நன்றி சகோ!
    விரைவில் உழவர் பற்றி கவிதை
    ஒன்று எழுதுவேன்
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  33. !* வேடந்தாங்கல் - கருன் *! said.

    பொய்யும் புரட்டுமே வாழ்வாக-பணத்தில்
    புரளுவோன் /// உண்மையான வரிகள்.

    நன்றி!சகோ!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  34. வேடந்தாங்கல் - கருன் *! said

    பொய்யும் புரட்டுமே வாழ்வாக-பணத்தில்
    புரளுவோன் // ஆமாம் ஒருவன் பணத்தை எப்போது சேர்க்க வேண்டும் என்று அலைகிறானோ அப்போதே போய்விடுகிறது இந்த நிம்மதி

    உண்மை தான் சகோ!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  35. !* வேடந்தாங்கல் - கருன் *! said.

    உடல்நலம் சற்று நலமாகி உள்ளது
    தங்கள் அன்புக்கு நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  36. Pudukavithai avasiyamthaan. But Marabuk kavithai azhiyamal irukka ungalai ponra pathivargalum thevai.

    ReplyDelete
  37. வான் மதியை போலவே ஏகாதிபத்திய அமாவாசை இருளில் ஒளிந்து உள்ளது நிம்மதி

    ReplyDelete
  38. துரைடேனியல் said.

    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  39. suryajeeva said...


    தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  40. நலமா?

    உடலைப்பார்த்துக்கொள்ளுங்கள்..



    //ஆண்டவர் வாழ்விலும் நீயில்லை-இன்று
    ஆள்பவர் வாழ்விலும் நீயில்லை//

    உண்மை தான்...


    நாளை பற்றி எந்த எதிர்பார்ப்பும் இன்றி
    இருந்தாலே கிட்டும் நிம்மதி...

    ReplyDelete
  41. மூன்று நாள் வெளியூர் பயணம் என்பதால் வர தாமதமாயிற்று ஐயா

    இப்பொழுது உடம்பு சரியாகி விட்டதா ஐயா

    அருமையான கருத்துள்ள பாடல்கவிதை பகிர்வுக்கு நன்றி ஐயா

    த.ம 11

    ReplyDelete
  42. அன்புநிறை புலவரே,

    தங்கள் உடல்நிலை நலமா?

    நித்தமும் தேடி அலையும் பொருளாகவே ஆகி விட்டது
    இந்த நிம்மதி...
    அதிலும் நிதப்பாட்டுக்கு தொழில் செய்து அன்றாட போழிதை
    கனவிலும் கண்ணீரிலும் கழிப்பவர்கள்
    நிம்மதி காற்றோடு கலந்தே விடுகிறது...

    அருமையான தேடுதல் கவிதை ஐயா..

    ReplyDelete
  43. நன்று அய்யா! மரபுக்கு உயிர் கொடுக்கும் தங்கள் பணி சிறக்கட்டும்.

    ReplyDelete
  44. வணக்கம் ஐயா,
    நலமாக இருக்கிறீங்களா?

    தொலைந்து போன நிம்மதியைத் தேடிக் களைத்த கவிஞனின் உணர்வுகளை இக் கவிதை அழகுறச் சொல்லி நிற்கிறது.

    ReplyDelete
  45. அருமை பாராட்டுக்கள்

    தமிழ்த்தோட்டம்
    www.tamilthottam.in

    ReplyDelete
  46. வணக்கம் ஐயா.உடல்நிலை சுகமா?

    நிம்மதி எங்களுக்குள்தான் ஐயா.தொலைப்பதும் பிறகு பிடிப்பதும் எம் கையில்தான்.பொதுவாக எல்லோரிடமும் இருக்கும் அத்தனை கேள்விகளையும் வரிகளாக்கியிருக்கிறீர்கள் !

    ReplyDelete
  47. நிம்மதியைத்தேடி நாமும்
    நம்மைத்தேடி நிம்மதியும்
    நித்தமும் அலைந்தபடி
    நிதர்சனத்தை
    அழகுறச்சொன்ன
    வார்த்தைகள் அடங்கிய வரிகள்
    அனைத்தும் அருமை..

    ReplyDelete
  48. எல்லார் வாழ்விலும் இல்லாவாய்-நீ
    இருப்பின் பொருள்தரா சொல்லாவாய்
    பல்லார் மனதிலும் இவ்வாறே-இன்றிப்
    பறந்தால் வாழ்வது எவ்வாறே

    அருமை.. அருமை

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...