Saturday, November 5, 2011

நெஞ்சிலே பால்வார்த்தாய் நீதிமன்றம்



நெஞ்சிலே பால்வார்த்தாய் நீதிமன்றம்-நீ
   நீடூழி வாழ்வாயே இன்றும்என்றும்
 பஞ்சிலே பக்கத்தில் நெருப்புவைக்க-பலர்
   பதறிட துடித்திட முள்ளாய்த்தைக்க
 வஞ்சினம் ஒன்றுமே செயலாயாக-எதிர்
   வரலாறு அதையெடுத்து சொல்லிப்போக
 அஞ்சினோம் காத்தாயே நீதிமன்றம் –சொல்ல
   அரியபுகழ் பொற்றாயே நீதிமன்றம்

 எவரென்ன செய்தாலும் தடுக்கயியலா-என
   எண்ணியே எண்ணியதை செய்யமுயல
 தவரன்ன எனச்சொல்லி தடையும்போட்டே-நல்
   தரமிக்க கேள்விகளை தெளிவாய்கேட்டே
 சுவரன்ன முட்டினால் உடையும்தலையே-யாம்
   சொல்வதை கேட்பவர் யாருமிலையே
 இவரென்ன சொல்வதா கேட்கயிலா-இனி
   ஈகோவை நனிமேலும் காட்டயியலா
             
 முதலையோ கொண்டது  விடுவதில்லை-நம்
   முதல்வரோ பிடிவாதம் விடுபவரில்லை
 மதலையர் காத்திட வேறுயிடத்தில்-உயர்
   மருத்துவ மனைதன்னை நல்லதரத்தில்
 வான்முட்ட கட்டினால் வாழ்த்துவாரே-வரும்
   வரலாற்றில் அவர்புகழ் போற்றுவாரே
 தானத்தில் சிறந்ததாய் சாற்றுவாரே-நி
   தானமாம் அதையெண்ணி ஆற்றுவீரே!

 முடிவாக  முதல்வரே வேண்டுகின்றோம்-உம்
   முன்கோபம் தனையாரோ தூண்டுகின்றார்
 விடிவாகா அன்னாரின் தெடர்ப்பைவிடுவீர்!-வீண்
   வம்பர்கள் அவராலே துன்பப்படுவீர்
 கடிவாளம் இல்லாத குதிரைபோல-நீர்
   கண்டபடி ஓடாமல் ஆய்ந்துசால
 இடிப்பாரை இல்லாத ஏமராமன்னன்-நிலை
   எண்ணியே செயல்பட என்றுமேவாழ்க!
    
                    புலவர் சா இராமாநுசம்
            
            
            
             
            

36 comments:

  1. நல்ல அறிவுரை ...பாடல் வடிவில் அருமை!

    ReplyDelete
  2. நல்ல அறிவுரை புலவரே... புரிய வேண்டியவர்களுக்குப் புரியவேண்டுமே.... :(

    ReplyDelete
  3. இடிப்பாரை இல்லாத ஏமராமன்னன்...


    நன்கு எடுத்துக்காட்டினீர்கள் புலவரே.

    மகிழ்ச்சி..

    ReplyDelete
  4. koodal bala said..

    நன்றி சகோ!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  5. வெங்கட் நாகராஜ் said

    நன்றி சகோ!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  6. கவி அழகன் said

    நன்றி மகனே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  7. !* வேடந்தாங்கல் - கருன் *! sai

    நன்றி சகோ!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  8. முனைவர்.இரா.குணசீலன் said.

    நன்றி முனைவரே !

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  9. மக்கள் இதை எல்லாம் பார்த்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரியாமலா ஆட்சி செய்வார்கள்? எதற்கு இந்த நாடகம் என்பது தான் எனக்கு புரியவில்லை...

    ReplyDelete
  10. suryajeeva said..

    நன்றி சகோ!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  11. இன்றைய காலகட்டத்தில் நீதிமன்றங்கள்
    சரிவர இயங்கி வருகின்றன என்று தான்
    சொல்லவேண்டும்...

    அழகிய கவி படைத்தீர்கள் புலவரே...

    ReplyDelete
  12. நன்றாக சொன்னீங்க ஜயா

    ReplyDelete
  13. நல்ல அறிவுரை கவிதைகளாய்....!!!

    ReplyDelete
  14. இடிப்பாரை இல்லாத ஏமராமன்னன்
    நல்ல மேற்கோள் ... மிக அருமை ஐயா!

    ReplyDelete
  15. புரிய வேண்டியவர்களுக்குப் புரியவேண்டுமே...

    புலவரே என் வலைக்கு கொஞ்ச காலம் வரவேண்டாம்...உடலைப்பார்த்துக்கொள்ளுங்கள்..

    ReplyDelete
  16. பலரது உள்ள உணர்வினை அருமையான கவிதையாகத்தந்துவிட்டீர்கள்!

    ReplyDelete
  17. அழகு கவிதை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  18. //முடிவாக முதல்வரே வேண்டுகின்றோம்-உம்
    முன்கோபம் தனையாரோ தூண்டுகின்றார்
    விடிவாகா அன்னாரின் தெடர்ப்பைவிடுவீர்!-வீண்
    வம்பர்கள் அவராலே துன்பப்படுவீர்//

    அழுத்தமான அறிவுரை பொருத்தமான நேரத்தில்..!


    முன்கோபம் தருகின்ற முரண்டுகளால்-வந்து
    மூள்கின்ற அவப்பெயரை மனதில்வைத்தால்
    அன்போடு பொதுமக்கள் ஆதரிப்பர்-அன்றி
    ஐந்தாண்டு முடிவினிலே தீர்ப்பளிப்பர்

    ReplyDelete
  19. தகுந்த நேரத்தில் முதல்வருக்குத்
    தங்கமானதோர் அறிவுரை கொடுத்துள்ளீர்கள்.

    தட்டிக்கேட்க நீதிமன்றமாவது முன்வந்துள்ளதே!

    அதனைத் தாங்கள் பாராட்டியுள்ளதும் சிறப்பு தான்.

    ReplyDelete
  20. AANAVAM Kreedam agum pothu ARIVU seruppaaki vidukirathu enpatharku ammaiyaar nalla uthaaranam.

    ReplyDelete
  21. நல்ல கருத்து புலவரே...
    அரியணையில் இருப்பவர்களுக்கு
    இந்த அறிவுரை விளங்கட்டும் ..

    ReplyDelete
  22. மகேந்திரன் said...

    நன்றி சகோ!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  23. K.s.s.Rajh said..

    நன்றி சகோ!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  24. MANO நாஞ்சில் மனோ said


    நன்றி சகோ!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  25. எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said


    நன்றி சகோ!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  26. ரெவெரி said...


    நன்றி சகோ!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  27. சென்னை பித்தன் said.

    நன்றி ஐயா!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  28. Rathnavel said...

    நன்றி ஐயா!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  29. சேட்டைக்காரன் said..

    நன்றி சகோ!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  30. வை.கோபாலகிருஷ்ணன் said

    நன்றி ஐயா!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  31. துரைடேனியல் said..

    நன்றி சகோ!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  32. jayaram thinagarapandian said.


    நன்றி சகோ!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  33. தமிழுக்கு வணக்கம்
    அம்மையாருக்கு மட்டுமின்றி அறியனையில் அமர்வோர் அனைவருக்கும் பாடம் உங்கள் கவிதை நன்றி

    ReplyDelete
  34. மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் ஐயா... நன்றி.

    ReplyDelete