நெஞ்சிலே பால்வார்த்தாய் நீதிமன்றம்-நீ
நீடூழி வாழ்வாயே இன்றும்என்றும்
பஞ்சிலே பக்கத்தில் நெருப்புவைக்க-பலர்
பதறிட துடித்திட முள்ளாய்த்தைக்க
வஞ்சினம் ஒன்றுமே செயலாயாக-எதிர்
வரலாறு அதையெடுத்து சொல்லிப்போக
அஞ்சினோம் காத்தாயே நீதிமன்றம் –சொல்ல
அரியபுகழ் பொற்றாயே நீதிமன்றம்
எவரென்ன செய்தாலும் தடுக்கயியலா-என
எண்ணியே எண்ணியதை செய்யமுயல
தவரன்ன எனச்சொல்லி தடையும்போட்டே-நல்
தரமிக்க கேள்விகளை தெளிவாய்கேட்டே
சுவரன்ன முட்டினால் உடையும்தலையே-யாம்
சொல்வதை கேட்பவர் யாருமிலையே
இவரென்ன சொல்வதா கேட்கயிலா-இனி
ஈகோவை நனிமேலும் காட்டயியலா
முதலையோ கொண்டது விடுவதில்லை-நம்
முதல்வரோ பிடிவாதம் விடுபவரில்லை
மதலையர் காத்திட வேறுயிடத்தில்-உயர்
மருத்துவ மனைதன்னை நல்லதரத்தில்
வான்முட்ட கட்டினால் வாழ்த்துவாரே-வரும்
வரலாற்றில் அவர்புகழ் போற்றுவாரே
தானத்தில் சிறந்ததாய் சாற்றுவாரே-நி
தானமாம் அதையெண்ணி ஆற்றுவீரே!
முடிவாக முதல்வரே வேண்டுகின்றோம்-உம்
முன்கோபம் தனையாரோ தூண்டுகின்றார்
விடிவாகா அன்னாரின் தெடர்ப்பைவிடுவீர்!-வீண்
வம்பர்கள் அவராலே துன்பப்படுவீர்
கடிவாளம் இல்லாத குதிரைபோல-நீர்
கண்டபடி ஓடாமல் ஆய்ந்துசால
இடிப்பாரை இல்லாத ஏமராமன்னன்-நிலை
எண்ணியே செயல்பட என்றுமேவாழ்க!
புலவர் சா இராமாநுசம்
நல்ல அறிவுரை ...பாடல் வடிவில் அருமை!
ReplyDeleteநல்ல அறிவுரை புலவரே... புரிய வேண்டியவர்களுக்குப் புரியவேண்டுமே.... :(
ReplyDeleteநல்லா சொநிங்க
ReplyDeleteபுதுமையான வரிகள்..
ReplyDeleteஇடிப்பாரை இல்லாத ஏமராமன்னன்...
ReplyDeleteநன்கு எடுத்துக்காட்டினீர்கள் புலவரே.
மகிழ்ச்சி..
koodal bala said..
ReplyDeleteநன்றி சகோ!
புலவர் சா இராமாநுசம்
வெங்கட் நாகராஜ் said
ReplyDeleteநன்றி சகோ!
புலவர் சா இராமாநுசம்
கவி அழகன் said
ReplyDeleteநன்றி மகனே!
புலவர் சா இராமாநுசம்
!* வேடந்தாங்கல் - கருன் *! sai
ReplyDeleteநன்றி சகோ!
புலவர் சா இராமாநுசம்
முனைவர்.இரா.குணசீலன் said.
ReplyDeleteநன்றி முனைவரே !
புலவர் சா இராமாநுசம்
மக்கள் இதை எல்லாம் பார்த்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரியாமலா ஆட்சி செய்வார்கள்? எதற்கு இந்த நாடகம் என்பது தான் எனக்கு புரியவில்லை...
ReplyDeletesuryajeeva said..
ReplyDeleteநன்றி சகோ!
புலவர் சா இராமாநுசம்
இன்றைய காலகட்டத்தில் நீதிமன்றங்கள்
ReplyDeleteசரிவர இயங்கி வருகின்றன என்று தான்
சொல்லவேண்டும்...
அழகிய கவி படைத்தீர்கள் புலவரே...
நன்றாக சொன்னீங்க ஜயா
ReplyDeleteநல்ல அறிவுரை கவிதைகளாய்....!!!
ReplyDeleteஇடிப்பாரை இல்லாத ஏமராமன்னன்
ReplyDeleteநல்ல மேற்கோள் ... மிக அருமை ஐயா!
புரிய வேண்டியவர்களுக்குப் புரியவேண்டுமே...
ReplyDeleteபுலவரே என் வலைக்கு கொஞ்ச காலம் வரவேண்டாம்...உடலைப்பார்த்துக்கொள்ளுங்கள்..
பலரது உள்ள உணர்வினை அருமையான கவிதையாகத்தந்துவிட்டீர்கள்!
ReplyDeleteஅழகு கவிதை.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
//முடிவாக முதல்வரே வேண்டுகின்றோம்-உம்
ReplyDeleteமுன்கோபம் தனையாரோ தூண்டுகின்றார்
விடிவாகா அன்னாரின் தெடர்ப்பைவிடுவீர்!-வீண்
வம்பர்கள் அவராலே துன்பப்படுவீர்//
அழுத்தமான அறிவுரை பொருத்தமான நேரத்தில்..!
முன்கோபம் தருகின்ற முரண்டுகளால்-வந்து
மூள்கின்ற அவப்பெயரை மனதில்வைத்தால்
அன்போடு பொதுமக்கள் ஆதரிப்பர்-அன்றி
ஐந்தாண்டு முடிவினிலே தீர்ப்பளிப்பர்
தகுந்த நேரத்தில் முதல்வருக்குத்
ReplyDeleteதங்கமானதோர் அறிவுரை கொடுத்துள்ளீர்கள்.
தட்டிக்கேட்க நீதிமன்றமாவது முன்வந்துள்ளதே!
அதனைத் தாங்கள் பாராட்டியுள்ளதும் சிறப்பு தான்.
AANAVAM Kreedam agum pothu ARIVU seruppaaki vidukirathu enpatharku ammaiyaar nalla uthaaranam.
ReplyDeleteநல்ல கருத்து புலவரே...
ReplyDeleteஅரியணையில் இருப்பவர்களுக்கு
இந்த அறிவுரை விளங்கட்டும் ..
மகேந்திரன் said...
ReplyDeleteநன்றி சகோ!
புலவர் சா இராமாநுசம்
K.s.s.Rajh said..
ReplyDeleteநன்றி சகோ!
புலவர் சா இராமாநுசம்
MANO நாஞ்சில் மனோ said
ReplyDeleteநன்றி சகோ!
புலவர் சா இராமாநுசம்
எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said
ReplyDeleteநன்றி சகோ!
புலவர் சா இராமாநுசம்
ரெவெரி said...
ReplyDeleteநன்றி சகோ!
புலவர் சா இராமாநுசம்
சென்னை பித்தன் said.
ReplyDeleteநன்றி ஐயா!
புலவர் சா இராமாநுசம்
Rathnavel said...
ReplyDeleteநன்றி ஐயா!
புலவர் சா இராமாநுசம்
சேட்டைக்காரன் said..
ReplyDeleteநன்றி சகோ!
புலவர் சா இராமாநுசம்
வை.கோபாலகிருஷ்ணன் said
ReplyDeleteநன்றி ஐயா!
புலவர் சா இராமாநுசம்
துரைடேனியல் said..
ReplyDeleteநன்றி சகோ!
புலவர் சா இராமாநுசம்
jayaram thinagarapandian said.
ReplyDeleteநன்றி சகோ!
புலவர் சா இராமாநுசம்
தமிழுக்கு வணக்கம்
ReplyDeleteஅம்மையாருக்கு மட்டுமின்றி அறியனையில் அமர்வோர் அனைவருக்கும் பாடம் உங்கள் கவிதை நன்றி
மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் ஐயா... நன்றி.
ReplyDelete