அன்பு நெஞ்சங்களே! வணக்கம்!
என் வலையில் நான் இறுதியாக எழுதி வெளியிட்ட இடுவீர் பிச்சை இடுவீரே என்ற கவிதைக்கு பிறகு உடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு இன்றுதான் வீடு திரும்பினேன் எனவே அக் கவிதைக்கு
மறுமொழி எழுதிய அனைவருக்கும் முதற்கண் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்
இனி ஒரு வார காலத்திற்கு உங்களுக்கு நன்றி தெரிவிக்கவோ
மறுமொழி இடவோ இயலாத உடல் நிலை! மன்னிக்க!
புலவர் சா இராமாநுசம்பட்டினியால் வாடுவது வன்னிமண்ணே-படம்
பாரத்தழுது சிவக்கிறது நமதுகண்ணே
எட்டுகின்ற தூரந்தான் ஈழமானால-நாம்
இருந்தென்ன பயனுன்டா சொல்லப்போனால்
வட்டமிடும் கழுகாகச் சுற்றிசுற்றி-தமிழன்
வாழாது அழிந்திட மாற்றிமாற்றி
சுட்டுதள்ள நாள்தோறும் கண்டுமிங்கே-சற்றும்
சுரனையின்றி வாழ்ந்தோமே மானமெங்கே
ஈழத்தில் ஒருதமிழன் இருக்கக் கூட-இடம்
இல்லாமல் நாள்தோறும் சாடசாட
வாழத்தான் வழியின்றி சிதறிஓட-நாம்
வாய்மூடி கிடந்தோமே பழியும்நாட
வீழத்தான் வேண்டுமா ஈழத்தமிழன்-இங்கே
விளங்காமல் பேசுபவன் ஈனத்தமிழன்
வேழத்தை வெல்லுமா குள்ளநரியும-வெகு
விரைவாக அன்னார்கு நன்குபுரியும்
உடல் நிலையை சரியாக பார்த்துக்கொள்ளுங்கள் ஐயா...
ReplyDeleteகவலை வேண்டாம்...
உள்ளம் உறுதியுடன் இருப்பதை அறிவோம், உங்கள் உடலினையும் உறுதி செய்து வாருங்கள். போராடும் உள்ளங்களுக்கு உரமிட நீங்கள் என்றும் வேண்டும்
ReplyDeleteஉடல் நிலை கவனித்துக் கொள்ளுங்கள் ஐயா
ReplyDeleteமுதலில் அது தான் முக்கியம்
த.ம 2
உங்கள் உடல் நிலையே முக்கியம்..
ReplyDeleteபார்த்துக்கொள்ளுங்கள்..
தீக்கதிர் போல் சுடுகிறது கவிதை வரிகள்.
ReplyDeleteவிரைவாய் நலமுடன் வந்தெம்மை மீட்ட வேண்டிக்கொள்கிறேன், வல்லவனிடம்!
நீங்கள் விரைவில் உடல்நலம் பெற்று வர மனமுருக பிரார்த்திக்கின்றேன் ஐயா..
ReplyDeleteஉடல் நிலையை சரியாக பார்த்துக்கொள்ளுங்கள் ஐயா...Wishes n Prayers.
ReplyDeleteதங்கள் உடல்நிலையில் கவனம் செலுத்தி சற்றேனும் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். அன்புடன் vgk
ReplyDeleteஉடல் நிலையை கவனித்துக்கொள்ளுங்கள் ஜயா.நன்றாக ஓய்வு எடுங்கள்
ReplyDeleteநன்கு ஓய்வெடுங்கள்.முழு நலத்துடன் திரும்பி வாருங்கள்!
ReplyDeleteஅன்புடைய புலவரே,
ReplyDeleteஉடல்நிலையை நன்கு கவனித்துக் கொள்ளவும்.
நல்ல ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள்.
நாங்கள் உங்கள் படைப்புகளுக்காய்
எப்போதும் காத்திருப்போம்.
என் மனமுவந்த பிரார்த்தனைகள்.
உடல் நிலை கவனித்துக் கொள்ளுங்கள் புலவரே
ReplyDeleteஉள்ளத்தின் உறுதி புலப்படுகிறது பாவில்.
ReplyDeleteஉடலின் உறுதி வலுப்படட்டும் ஓய்வில்.
சித்திரம் வரைய இனியும் உண்டு காலம்.
முதலில் வேண்டும் சுவரின்பால் கவனம்.
காத்திருப்போம் ஐயா. ஓய்வெடுத்து வாருங்கள்.
எம் மீது பரிவு கொண்ட அன்பு சால் புலவரே உங்கள் உடல் நிலை விரைவில் தேற வேண்டுகிறேன். உங்கள் தீ போன்ற கவிதை வரிகள் துன்பத்தில் உழலும் எம் இதயத்திற்கு சாந்தியழிக்கின்றது. விரைவில் உடல் நலமகி மறுபடியும் உங்கள் கவிதைகளை வெளியிடுவீர்கள் என நம்புகின்றேன். நன்றி வணக்கம்
ReplyDeleteவணக்கம் ஐயா,
ReplyDeleteஎனக்கும் உடல் நிலை சரியில்லை என்பதால் வலைப் பக்கம் வர முடியலை.
தீபாவளிக்குப் பின்னர் எனக்கு காய்ச்சல்.
நீங்கள் நன்றாக ஓய்வெடுத்து ஆறுதலாக வாங்கோ ஐயா
வேழத்தை வெல்லுமா குள்ளநரியும-
ReplyDeleteதங்கள் கனவு ஒரு நாள் நிறைவேறும் புலவரே..
தங்கள் உடல்நிலையைப் பார்த்துக்கொள்ளுங்கள் புலவரே..
ReplyDeleteபுலவர் ஐயா ...
ReplyDeleteஉடல் நிலை விரைவில் தேற வேண்டுகிறேன்...
தங்கள் பல ஆண்டு காலம் வாழ நல்ல உடல் நிலை தர இறைவனை வேண்டுகிறேன் ...
தங்கள் கவிதை
ReplyDeleteஒவ்வொரு தமிழன் நெஞ்சையும் சுடுகிறது ...
கவிதை நெஞ்சை சுடுகிறது உங்கள் உடல்நிலையினை கவனித்துக்கொள்ளவும் ஐயா.
ReplyDeleteவணக்கமையா..
ReplyDeleteமுதலில் உடம்பை நன்றாக கவனித்து வாருங்கள்....
கவிதை கண்டு மனம் அழுகிறது ஐயா.பூக்கள் மிதிபடுவதால் ஒருபோதும் பூசைகள் மாசுபடுவதில்லை.உறுதியோடு இருப்போம்.சுகமாய் திரும்பவும் உற்சாகத்தோடு வாருங்கள் ஐயா.காத்திருக்கிறோம் !
ReplyDeleteமனம்பதைக்கும் கவிதையைத் தந்து இருக்கிறீங்கள்!
ReplyDeleteமுதலில் ஆரோக்கியத்தை கவனியுங்கள் ஐயா நலம்பெற என்பெருமானைப் பிராத்திக்கின்றேன்!
உடல் நிலையை பார்த்துக்கொள்ளுங்கள் ஐயா! தங்களுக்காக பிரார்த்திக்கிறேன்... பகிர்வுக்கு நன்றி ஐயா!
ReplyDelete