இடுவீர் பிச்சை இடுவீரே-கல்வி
ஏழைகள் கற்க விடுவீரே
கெடுவீர் இன்றேல் ஒருநாளே-இது
கேடெனக் களையின் எதிர்நாளே
தொடுவீர் ஏழைகள் நெஞ்சத்தை-உடன்
தொலைப்பீர் கல்வியில் இலஞ்சத்தை
விடுவீர் ஏழைகள் நிலைஉயர-அவர்
வேதனை நீங்கி தரமுயர
திறமை இருந்தும் பயனின்றி-வீணே
தேம்பிட வாழல் மனங்குன்றி
அறமா கருதிப் பார்ப்பீரே-பணம்
அளித்தால் எவரையும் சேர்ப்பீரே
தரமே அற்றவர் போனாலும் –அந்தோ
தருவீர் இடமே!ஆனாலும்
வரமே பொற்றவர் அவர்தானா-ஏழை
வாழ்வே குட்டிச் சுவர்தானா
இல்லோர் கல்வி இல்லோரா-இதை
எடுத்து எவரும் சொல்லாரா
நல்லோர் எண்ணிப் பாருங்கள்-இது
நாட்டுக்கு நலமா கூறுங்கள்
வல்லோர் வகுத்ததே வாய்க்காலா-ஏழை
வாழ்வை அழிக்கும் பேய்க்காலா
கல்லார் என்றும் அவர்தான-கேட்கும்
கவிதை இதுவென் தவற்தானா
ஏழையின் கண்ணீர் பாரென்றீர்-அங்கே
இருப்பது இறைவன் தானென்றீர்
பேழையுள் இருக்கும் பாம்பாக-கட்டிப்
பிணைத்திட பணமது தாம்பாக
வாழையின் அடிவரும் வாழையென-அவன்
வாழ்ந்தே மடிவது கொடுமையென
கோழையாய் கிடப்பவன் எழுந்தாலே-பொங்கி
குமுறும் எரிமலை ஆவானே
சபாஷ்
ReplyDeleteபொன்னான வரிகளால் நற் புத்தியொன்று சொன்னீர்கள் .உங்கள் எண்ணம்போல் ஏழைக்கும் இதுவரைக் கிட்டாத கல்வியது கிட்டட்டும் .மண்ணாளும் அரசனின் கடமையதை மகத்தான கவிதையில் எடுத்துரைத்த என் மனதாளும்தந்தைக்கு வாழ்த்துக்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு ........
ReplyDelete”கல்லாத பேரையெல்லாம் கல்வி பயிலச் செய்து கான்பதில்தான் இன்பம் என் தோழா”-- பட்டுக்கோட்டையார்.
ReplyDeleteநன்று.
அற்புதமான கவிதை ஐயா...
ReplyDeleteகல்வியின் அவசியம் வெளிநாடுகளுக்கு போகிறவர்களுக்கு நல்லாவே தெரியும், கவிதை நச் புலவரே...!!!
ReplyDelete//இடுவீர் பிச்சை இடுவீரே-கல்வி
ReplyDeleteஏழைகள் கற்க விடுவீரே
கெடுவீர் இன்றேல் ஒருநாளே-இது
கேடெனக் களையின் எதிர்நாளே//
ஆரம்ப வரிகள் அருமை ஐயா..
//கோழையாய் கிடப்பவன் எழுந்தாலே-பொங்கி
ReplyDeleteகுமுறும் எரிமலை ஆவானே//
தெரிந்தும் கல்வி வியாபாரிகளைக் கட்டுப்படுத்த யாருமில்லை. எரிமலை வெடித்தால் தான் சரிவரும்.
அவர்கள் திருந்தும் வரை காத்திருத்தலை விட, திருத்திவிட துணிவது உத்தமம்.
suryajeeva said..
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி நண்பரே!
அம்பாளடியாள் said
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி மகளே!
புலவர் சா இராமாநுசம்
சென்னை பித்தன் said..
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி ஐயா!
புலவர் சா இராமாநுசம்
கவிதை வீதி... // சௌந்தர் // said
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி நண்பரே!
புலவர் சா இராமாநுசம்
MANO நாஞ்சில் மனோ said..
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி நண்பரே!
புலவர் சா இராமாநுசம்
சம்பத்குமார் said..
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி நண்பரே!
புலவர் சா இராமாநுசம்
சத்ரியன் said
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி மகனே!
புலவர் சா இராமாநுசம்
கேட்பதற்கு ஆளில்லாமல் ஆடுபவர்கள்
ReplyDeleteஏனிந்த பணம் வாங்குகிறீர்கள் என்று கேட்டால்...
பள்ளியில் குழந்தைகளை மிரட்ட்வார்கள்..
கவியின் சமூக சாடல் நன்று புலவரே.
கல்வியை விற்பனைகூடமாக்குபவர்கள்
எதை வேண்டுமானாலும் விற்பார்கள்..
////ஏழையின் கண்ணீர் பாரென்றீர்-அங்கே
ReplyDeleteஇருப்பது இறைவன் தானென்றீர்
பேழையுள் இருக்கும் பாம்பாக-கட்டிப்
பிணைத்திட பணமது தாம்பாக
வாழையின் அடிவரும் வாழையென-அவன்
வாழ்ந்தே மடிவது கொடுமையென
கோழையாய் கிடப்பவன் எழுந்தாலே-பொங்கி
குமுறும் எரிமலை ஆவானே//////
அற்புதமான வரிகள்
தீபாவளி வாழ்த்துக்கள் ஜயா
கல்வியைச் சந்தைக்குக் கொண்டுவந்தவர்களைக் குறித்து சிந்திக்க வைக்கிற கவிதை!
ReplyDeleteஇல்லோர் கல்வி இல்லோரா-இதை
ReplyDeleteஎடுத்து எவரும் சொல்லாரா
நல்லோர் எண்ணிப் பாருங்கள்-இது
நாட்டுக்கு நலமா கூறுங்கள்
வல்லோர் வகுத்ததே வாய்க்காலா-ஏழை
வாழ்வை அழிக்கும் பேய்க்காலா
கல்லார் என்றும் அவர்தான-கேட்கும்
கவிதை இதுவென் தவற்தானா//
அருமை அருமை.மனதைத்தொடும் கவிதை வரிகள்1
அற்புதமான வரிகள்,
ReplyDeleteஅழகான கவிதை..
இது மாதிரியான எளிமையான வார்த்தைகளுடன் சிறந்த ஆக்கத்தை காணும் போது இப்படி பட்டவருக்கு மகளாக பிறக்க வில்லையே என ஏங்குவதுண்டு சிறந்த ஆக்கம் வணகுகிறேன் .
ReplyDeleteஐயா புதிய கவிதை ஒன்று காத்திருக்கின்றது வாருங்கள்
ReplyDeleteவந்து உங்கள் பொன்னான கருத்தைக் கூறுங்கள் .பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டுப் போடுங்கள் .மிக்க நன்றி ஊக்குவிப்புகளிற்கு .
மகேந்திரன் said.
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி அன்பரே!
புலவர் சா இராமாநுசம்
K.s.s.Rajh said...
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி அன்பரே!
புலவர் சா இராமாநுசம்
சேட்டைக்காரன் said...
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி அன்பரே!
புலவர் சா இராமாநுசம்
ஸாதிகா said..
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி சகோதரி!
புலவர் சா இராமாநுசம்
வேடந்தாங்கல் - கருன் *! said..
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி அன்பரே!
புலவர் சா இராமாநுசம் .
மாலதி said...
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி மகளே!
புலவர் சா இராமாநுசம்
அம்பாளடியாள் said...
ReplyDeleteவிரைவில் வருவேன்
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
உரிமையை பிச்சை கேட்பதா
ReplyDeleteகொள்ளை கூட்டத்தின் கல்வி சிக்கி நாட்கள் பலவாகி விட்டன.
அருமையிலும் அருமை !
ReplyDeleteநல்ல கவிதை.... வாழ்த்துகள்....
ReplyDeleteநல்ல கவிதை...
ReplyDeleteஇனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்!
நல்ல கவிதை...
ReplyDeleteதங்களுக்கும், தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சகோ புலவரே... மகிழ்ச்சியும், வளமும் பெருகட்டும்...
இல்லோர் கல்வி இல்லோரா-இதை
ReplyDeleteஎடுத்து எவரும் சொல்லாரா..
நல்லாக் கேட்டீங்க புலவரே..
தங்களுக்கும், தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஐயா.
ReplyDeleteஅருமையான படைப்பு
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய மனம் கனிந்த தீபாவளித் திரு நாள் நல்வாழ்த்துக்கள்
த.ம 15
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteஎன் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் உறவுகளுக்கும் உரித்தாகட்டுக்கும் .
ReplyDelete((ஏழையின் கண்ணீர் பாரென்றீர்-அங்கே
ReplyDeleteஇருப்பது இறைவன் தானென்றீர்))உண்மை வரிகள்
வணக்கம் ஐயா,
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய இன்பத் தீபத் திருநாள் நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
அற்புதமான கவிதை ஐயா ..
ReplyDeleteஏழைகளுக்கு தங்கள் கவிதை போல் அனித்தும் கிடைக்கட்டும்
தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள் ...
அருமை ஐயா
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
வணக்கம், தங்களுக்கும், தங்களது குடும்பஉறவுகளிற்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteவணக்கம் ஐய்யா..
ReplyDeleteதீபாவளி நல் வாழ்த்துக்கள்
ஏழைகள் கல்வியைப்பற்றி அருமையான கவிதை படைத்துள்ளீர்கள் வாச்த்துக்கள்.
கல்விக்கு உதவி செய்வதில் எனக்கும் நாட்டம் கூட.முடிந்தளவு செய்தும் இருக்கிறேன்.அன்பான தீபத்திருநாள் வாழ்த்துகள் உங்களுக்கு !
ReplyDeleteபேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும் என்ற செங்கால் நாராய்த் தூதுப் பாடல் நினைவுக்கு வருகிறது.
ReplyDeleteகல்வியை காசாக்கி
ReplyDeleteகல்லாப்பெட்டிக்குள் மூடப்பார்க்கிறார்கள்
கற்றவர்களே.
கல்வியின் முக்கியத்துவம்-தங்கள்
கவிவரிகளில் முத்துக்களாய்.
வாழ்த்துகள்..
சமூக சாடல் ....கல்வி ஒளியேற்றும் சிந்தை. கருத்து உலகில் பரவட்டும். பணி தொடர இறையருள் கிட்டட்டும் ஐயா.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
எண்ணங்குடையும் கேள்விகள்! விடையளிப்பார்தான் எவருமிலர்.
ReplyDeleteநிலை மாறும் நாள் வெகுவிரைவில் வரவேண்டும்.சிந்தனையைத் தூண்டும் அருமையான கவிதை. பாராட்டுகள் ஐயா.
அருமையான பாடல் வரிகள் அய்யா வாழ்த்துக்கள். என்னிடம் இணையத்தொடர்பு இல்லை ஆதலால் அடிக்கடி வலைப்பக்கம் வர இயலுவதில்லை. என்றாவது நேரம் கிடைக்கும்போது எல்லாக்கவிதைகளையும் நேரம் நாள் குறிப்பிட்டு வலையில் பதித்துவிடுவேன். அந்தநாள் நேரம் வந்தவுடன் தானாக வெளியாகிவிடும். இருந்தாலும் நேரம் கிடைக்கும் போது தங்கள் எழுத்துக்களைப் படித்துக்கொண்டுதான் இருக்கிறேன்
ReplyDeleteஅருமையான கவிதை ஐயா
ReplyDelete//இல்லோர் கல்வி இல்லோரா-இதை
ReplyDeleteஎடுத்து எவரும் சொல்லாரா//
கவிதை வரிகள் அருமை.