ஐ.நா அறிக்கை வந்தபோது எழுதியது
ஊரறிய உலகறிய உண்மை தன்னை-ஐ.நா
உரைத்தபின்னும உணராது இருத்தல் என்னை
பாரறிய பாரதமே பொங்கி எழுவாய்-இன்னும்
பக்சேவுக்குத் துணையானால் ஒருநாள் அழுவாய்
சீரழிந்து தமிழினமே அழிந்தே போக-இந்த
செயலாலே தமிழ்நாடே சுடுகா டாக
வேரருந்து போய்விடுமே ஏக இந்தியா-உடன்
விளங்கியிதை செயல்படுமா வடவர் இந்தியா
தனிநாடய் நாமிருந்தால் ஈழம் அழிய-பொங்கி
தடுத்திருப்போம் ஐயகோ ஏற்றோம் பழியே
இனிமேலும் இதுதொடரின் பாரத நாடே-தமிழ்
இனப்பற்றே வெறியாக விளையும் கேடே
கனிமேலும் கனியவிடின் அழுகிப் போகும்-எதிர்
காலத்தில் கதையல்ல உண்மை ஆகும்
பனிபோகும் கதிரவனின் வரவும் கண்டே-உலகு
பக்சேவை ஏற்றிவிடும் குற்றக் கூண்டே
ஒசாமா பின்லேடன் ஒழிந்தான் என்றே-மகிழும்
ஒபாமா உமக்கும்நான் சொல்வேன் ஒன்றே
ஒசாமா சாகவில்லை இலங்கை மண்ணில-அவன்
உலவுகின்றான் பக்சேவாய் காணக் கண்ணில்
கூசாமல் எம்மவரை கொன்றே விட்டான்-பெரும்
கொலைக் களமாய் ஈழத்தை ஆக்கிவிட்டான்
பேசாமல் போர்குற்ற வாளி யென்றே-நீர்
பிடித்துள்ளே போட்டாலே தொழுவோம் நன்றே
கண்ணாடி வேண்டுமா கைப்புண்ணைப் பார்க்க-ஐ.நா
காட்டிய அறிக்கையை ஆய்வுடன் நோக்க
மண்ணோடு மண்ணாக அவன்மக்க வேண்டும்-தமிழ்
மக்களவர் ஒன்றாக அணிதிரள ஈண்டும்
எண்ணாமல் இரங்காமல் அரக்கனவன் கொலைகள்-நாளும்
ஈழத்தில் கொன்றது எத்தனை தலைகள்
உண்ணாமல் உறங்காமல் இருக்கின்றார் இன்னும்-உயிர்
உடலோடு நடைப்பிணமே தெளிவாக எண்ணும்
புலவர் சா இராமாநுசம்
ஊரறிய உலகறிய உண்மை தன்னை-ஐ.நா
உரைத்தபின்னும உணராது இருத்தல் என்னை
பாரறிய பாரதமே பொங்கி எழுவாய்-இன்னும்
பக்சேவுக்குத் துணையானால் ஒருநாள் அழுவாய்
சீரழிந்து தமிழினமே அழிந்தே போக-இந்த
செயலாலே தமிழ்நாடே சுடுகா டாக
வேரருந்து போய்விடுமே ஏக இந்தியா-உடன்
விளங்கியிதை செயல்படுமா வடவர் இந்தியா
தனிநாடய் நாமிருந்தால் ஈழம் அழிய-பொங்கி
தடுத்திருப்போம் ஐயகோ ஏற்றோம் பழியே
இனிமேலும் இதுதொடரின் பாரத நாடே-தமிழ்
இனப்பற்றே வெறியாக விளையும் கேடே
கனிமேலும் கனியவிடின் அழுகிப் போகும்-எதிர்
காலத்தில் கதையல்ல உண்மை ஆகும்
பனிபோகும் கதிரவனின் வரவும் கண்டே-உலகு
பக்சேவை ஏற்றிவிடும் குற்றக் கூண்டே
ஒசாமா பின்லேடன் ஒழிந்தான் என்றே-மகிழும்
ஒபாமா உமக்கும்நான் சொல்வேன் ஒன்றே
ஒசாமா சாகவில்லை இலங்கை மண்ணில-அவன்
உலவுகின்றான் பக்சேவாய் காணக் கண்ணில்
கூசாமல் எம்மவரை கொன்றே விட்டான்-பெரும்
கொலைக் களமாய் ஈழத்தை ஆக்கிவிட்டான்
பேசாமல் போர்குற்ற வாளி யென்றே-நீர்
பிடித்துள்ளே போட்டாலே தொழுவோம் நன்றே
கண்ணாடி வேண்டுமா கைப்புண்ணைப் பார்க்க-ஐ.நா
காட்டிய அறிக்கையை ஆய்வுடன் நோக்க
மண்ணோடு மண்ணாக அவன்மக்க வேண்டும்-தமிழ்
மக்களவர் ஒன்றாக அணிதிரள ஈண்டும்
எண்ணாமல் இரங்காமல் அரக்கனவன் கொலைகள்-நாளும்
ஈழத்தில் கொன்றது எத்தனை தலைகள்
உண்ணாமல் உறங்காமல் இருக்கின்றார் இன்னும்-உயிர்
உடலோடு நடைப்பிணமே தெளிவாக எண்ணும்
புலவர் சா இராமாநுசம்
ஒபாமாவுக்கு கூறியுள்ள அறிவுரை உண்மை !
ReplyDeleteகவிதை வரிகளை கையில் ஏந்தி
ReplyDeleteகணக்காக சாடுகிறீர் கயமை தன்னை..
தங்களை போல் எழுதுவதற்கு புலமை இல்லை,
தன்னார்வமாய் முயற்சிக்கிறேன் மன்னிப்பீராக..
பின்லேடனை போல் ராஜபக்சசே ஒழிய வேண்டும் என்பதே தமிழர்களின் விருப்பமாகும்
ReplyDeleteதீவிரவாத்தை உணர்த்தும் தெளிவான கவிதை
வழமை போல் சூப்பர்
ReplyDeleteஅருமையான கருத்துள்ள கவிதை.
ReplyDeleteபந்தி பந்தியாக எழுதினாலும் இத்தனை அழகாய்
ReplyDeleteஇரத்தினச் சுருக்கமாய் எம் தேசத்தின் நிலைப்பாட்டை
எழுத முடியாது ஐயா .நாங்கள் உங்களிடம் கற்றுக்
கொள்ள நிறையவே பொன்னான கவிதை வரிகள்
உண்டு என்பதைத் தினமும் எமக்கு உணர்த்தும் தங்கள் கவிதை வரிகளுக்கு நான் தலை வணங்குகின்றேன் அருமை !...அருமையிலும் அருமை!.... .எங்களை ஆசீர்வதியுங்கள் ஐயா .இன்று என் தளத்திற்கு உங்கள் வருகையை எதிர்பார்க்கின்றேன் .மிக்க நன்றி ஐயா அழகிய கவிதைப் பகிர்வுக்கு ............
koodal bala said...
ReplyDeleteநன்றி நண்பரே!
புலவர் சா இராமாநுசம்
suryajeeva said.
ReplyDeleteநன்றி நண்பரே!
புலவர் சா இராமாநுசம்
கிராமத்து காக்கை said.
ReplyDeleteநன்றி நண்பரே!
புலவர் சா இராமாநுசம்
கவி அழகன் said.
ReplyDeleteநன்றி மகனே!
புலவர் சா இராமாநுசம்
சென்னை பித்தன் said.
ReplyDeleteநன்றி ஐயா!
புலவர் சா இராமாநுசம்
அம்பாளடியாள் said...
ReplyDeleteநன்றி மகளே!
புலவர் சா இராமாநுசம்
கண்ணாடி வேண்டுமா கைப்புண்ணைப் பார்க்க-ஐ.நா
ReplyDeleteகாட்டிய அறிக்கையை ஆய்வுடன் நோக்க/
தெளிவாய் உரைத்து உணர்த்திய ஆக்கத்திற்கு பாராட்டுக்கள் ஐயா.
ஆளும் வர்க்கத்திர்கோர்
ReplyDeleteஅழகிய அறிவுரையை
அருளியுள்ள புலவருக்கு
மனமுவந்த நன்றிகள்.
புலவர் ஐயா,
ReplyDeleteவழக்கம் போல் தங்கள் கவிதையால்
ஒரு அருமையான சிந்தனையை பெற்றேன்
நன்றி..
தீபாவளி நல்வாழ்த்துக்கள்
தமிழனைத் தட்டியெழுப்புகிற
ReplyDeleteஅருமையான கவிதை ஐயா.
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
வணக்கம் புலவரே உங்கள் கவிதைகள் தமிழர்களை ஒன்றுபடுத்தும் என்று நம்புகிறேன். ஈழத்து கவிஞசர் காசியானந்தம் போல் உங்கள் கவிதைகள சிறப்பாக இருகின்றன. வாழ்த்துக்கள் பணி தொடர வாழ்த்துகிறேன்.
ReplyDeleteபுதுக் கவிதை தங்கள் வரவுக்காய் காத்திருக்கின்றது ஐயா..
ReplyDelete