தேசியம் என்றாலே பொருளறிய தாரே
தேசியம் பேசுவதா திருத்துவது யாரே
பேசியும் கண்டித்தும் தீராத ஒன்றே
தினந்தோறும் மீனவரின் துயரமே இன்றே
கூசாதா அரசுக்கு தேசியம் பேச
கொட்டவும் குனிவதா கேலியவர் பேச
பேசாதீர் இந்திய தேசியம் பற்றி
பரவட்டும் எதிர்பெனும் தீமிகப் பற்றி
எதையும் தாங்குவோம் எத்தனை நாளே
எண்ணிப் பாரீர் தாங்குமா தோளே
உதையும படுவார் மீனவர் நாளும்
உயிர்பலி ஆவார் பட்டியல் நீளும்
சதையும் கிழிந்திட சிந்துவார் இரத்தம்
சகிப்பதா நம்மவர் நடந்திட நித்தம்
வதையும் அன்னவர் வாழ்ந்திட மீண்டும்
வழங்கிய தீவை மீட்டிட வேண்டும்
கச்சத் தீவை கயவர்கள் கையில்
காரண மின்றியே கொடுத்தமே வகையில்
அச்ச மற்றவர் ஆணவச் செயலில்
ஆடும் ஆட்டம் சொல்லியே பயனில்
துச்சமே அவரென துரத்துவோம் இன்றே
துடிப்புடன் அனைவரும் சேர்ந்திடின் ஒன்றே
மிச்சமே இன்றியே அனைவரும ஓட
மேதினி முற்றுமே நம்புகழ் பாட
புலவர் சாஇராமாநுசம்
அருமையான கவிதை ஐயா
ReplyDeleteகச்சத்தீவை மீட்டெடுப்போம், தமிழரின் உயிரையும் உடமையையும் காப்போம்
உதையும் படுவார் மீனவர் நாளும்
ReplyDeleteஉயிர்பலி ஆவார் பட்டியல் நீளும்
என்று தீரும் இந்த நிலை???????
தமிழ் நாட்டு மீனவர்கள் இலங்கை ராணுவத்திடம்
ReplyDeleteகுஜராத் மீனவர்கள் பாகிஸ்தான் ராணுவத்திடம்
பாகிஸ்தான் மீனவர்கள் இந்திய ராணுவத்திடம்
ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு
அம்பானி சகோதரர்களின் பிரச்சினையை தீர்க்கவே நேரம் இருக்கிறது...
பொது மக்கள்
அவர்கள் ஐந்தாண்டுக்கு ஒரு முறை நினைவுக்கு வருபவர்கள்
நன்றி ஐயா... மீட்டிட வேண்டும் தீவை..
ReplyDeleteகச்சதீவு, கன்னித்தீவு மாதிரி இழுத்துட்டேதான் போகும், காங்கிரஸ் கட்சி உயிரோடு இருக்கும் வரை!!!!!!
ReplyDeleteஅருமையாகச் சொல்லி உள்ளீர்கள்
ReplyDeleteஆணவமிக்கவர்கள் எப்போதும்
செவிடாய்தான் இருப்பார்கள்
அவர்கள் அழிவின் போதுதான்
காதுகள் கேட்கத் துவங்கும்
த.ம 3
வழங்கிய தீவை மீட்டிட வேண்டும்...
ReplyDeleteவீரியக்கவிதை புலவரே...
அருமையான வரிகள் கொண்ட கவிதை .மீட்டிட வேண்டும்.
ReplyDeleteM.R said...
ReplyDeleteஅருமையான வரிகள் கொண்ட கவிதை .மீட்டிட வேண்டும்.
நிவாஸ் said..
ReplyDeleteசகோ!
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
புலவர் சா இராமாநுசம்
முனைவர்.இரா.குணசீலன் said.
ReplyDeleteமுனைவரே!
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
புலவர் சா இராமாநுசம்
suryajeeva said..
ReplyDeleteசகோ!
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
புலவர் சா இராமாநுசம்
வாழ்த்துக்கள் ஐயா
ReplyDeleteதமிழ்வாசி - Prakash said..
ReplyDeleteசகோ!
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
புலவர் சா இராமாநுசம்
MANO நாஞ்சில் மனோ said..
ReplyDeleteசகோ!
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
புலவர் சா இராமாநுசம்
Ramani said..
ReplyDeleteசகோ!
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
புலவர் சா இராமாநுசம்
ரெவெரி said...
ReplyDeleteசகோ!
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
புலவர் சா இராமாநுசம்
M.R said...
ReplyDeleteசகோ!
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
புலவர் சா இராமாநுசம்
எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...
ReplyDeleteசகோ!
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
புலவர் சா இராமாநுசம்
திரும்பப்பெறவேண்டும்தீவை!
ReplyDeleteநல்ல கவிதைக்கு நன்றி.
நல்ல கவிதை புலவரே....
ReplyDeleteசென்னை பித்தன் said.
ReplyDeleteஐயா!
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
புலவர் சா இராமாநுசம்
வெங்கட் நாகராஜ் said..
ReplyDeleteசகோ!
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
புலவர் சா இராமாநுசம்
ஐயா...சத்தம்போட்டுச் சொல்லுங்கோ !
ReplyDeleteஅருமையான வரிகளை அழகாக சொல்லிருக்கீங்க
ReplyDeleteகச்சத் தீவை மீட்க வேண்டும்..
ReplyDeleteஅழகிய நடையில் உங்களின் தனித்துவ கவி.
நன்றி புலவரே.
தீவை மீட்க வேண்டும் ஐயா.. கவிதையில் வலியுறுத்தியவிதம் அருமை
ReplyDeleteபுரட்சிக் கவிதையில் வார்த்தைகள் அனலாய்
ReplyDeleteவந்து வீழ்ந்தது தேசத்தின் பற்றால். இந்த உறுதி
அனைவர்க்கும் வந்தால்ப் போதும் உங்கள் எண்ணம்
ஈடேறும் .அருமை!.. அருமை ஐயா தங்கள் புரட்சிக்
கவிதை .மிக்க நன்றி பகிர்வுக்கு .....................
//
ReplyDeleteகச்சத் தீவை கயவர்கள் கையில்
காரண மின்றியே கொடுத்தமே வகையில்
அச்ச மற்றவர் ஆணவச் செயலில்
ஆடும் ஆட்டம் சொல்லியே பயனில்
துச்சமே அவரென துரத்துவோம் இன்றே
துடிப்புடன் அனைவரும் சேர்ந்திடின் ஒன்றே
மிச்சமே இன்றியே அனைவரும ஓட
மேதினி முற்றுமே நம்புகழ் பாட
///
அருமையான வரிகள்
இன்று என் வலையில்
ReplyDeleteபா. ம. க சின்னம் மாறுகின்றதா?
''...உதையும படுவார் மீனவர் நாளும்
ReplyDeleteஉயிர்பலி ஆவார் பட்டியல் நீளும்...'''
இது தானே நடக்கிறது ஐயா!..பார்ப்போம் எப்போது பிரச்சனை தீருமென. நலமாக இருக்கிறீர்களா?
வேதா. இலஙகாதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
பன்னாடைகளின் கையில்
ReplyDeleteஅதிகாரம் இருக்க
நாம் காண்பது
பகற்கனவு அய்யா.
இடுப்புக் கச்சையை கூட
மீட்க முடியாது.
ஓட்டுக்கு காசு வாங்கிய
நம் மக்கள்
வாய் பொத்திக் கிடப்பது தான்
நல்லது.
இனிய தீபத்திருநாள் நல் வாழ்த்துக்கள் என் அன்பு உறவுகளே!......
ReplyDeleteவாழ்க என்றும் பல்லாண்டு நல் வளமும் நலனும் பெற்று இங்கே
மிக்க நன்றியும் வாழ்த்துக்களும் இன்றைய உங்கள் சிறந்த பகிர்வுக்கு ........