Saturday, October 15, 2011

மீண்டும் எழுந்தது போராட்டம்

   

 மீண்டும் எழுந்தது போராட்டம்-அரசை
   மிரட்டவும் அல்ல போராட்டம்
தூண்டி வருவதும் இதுவல்ல-உயிர்
  துச்சமா எண்ணிடல் எளிதல்ல
வேண்டி யாரும் செய்யவில்லை-வாழ
  வேண்டியே வேறு வழியில்லை
சீண்டியே அவர்களை விடுவீரோ-அரசுகள்
  சிந்தித்து செயலும் படுவீரோ

தேர்தல் கருதி சொன்னீரோ-ஓட்டுத்
   தேவையைக் கருதி சொன்னீரோ
தேர்தல் முடிந்தால் தெரிந்துவிடும்-மிக
   தெளிவாய் அனைத்தும் புரிந்துவிடும்
யார்தலை யிட்டு முடிப்பாரோ-எவரெவர்
   என்ன முடிவு எடுப்பாரோ
போர்மிக அறவழி நடந்தாலும்-அதில்
   புகுந்தால் அரசியல் கெட்டுவிடும்

செய்யும் எண்ணம் அரசுக்கே-ஏனோ
   சிறிதும் இருக்குமா என்றேதான்
ஐயம் என்னுள் எழுகிறதே-நெஞ்சும்
   அஞ்சி பயத்தில் விழுகிறதே
பொய்யும் புரட்டுமே அரசியலே-இன்று
   போனதே கட்சிகள் அரசியலே
உய்யும் வழியே தெரியவில்லை-இந்த
   உண்மை பலருக்கும் புரியவில்லை

மக்கள் அச்சம் ஒன்றேதான்-போர்
   மீளவும் காரணம் இன்றேதான்
தக்கதோர் முடிபு காண்பீரே-அதை
   தணித்திட உறுதி பூண்பீரே
துக்கம் போக்கிட அரசுகளே-இரு
   தூணாய் விளங்கும் அரசுகளே
மக்கள் குரலை மதிப்பீரே-உடன்
     மகிழ்ந்து போற்றி குதிப்பாரே!

               புலவர் சா இராமாநுசம்

 

36 comments :

  1. காவல் துறையை கைக்குள் வைத்திருக்கும் அம்மையாருக்கு தெரியாமலா போராடிய மாற்று திறனாளிகள் மண்டையை அடித்து உடைத்தார்கள் காவல் துறையினர்

    ReplyDelete
  2. தேர்தல் முடிந்து உடன் தெரிந்து விடும் உண்மை முகம்.. சரியாக சொன்னீர்கள் புலவரே

    ReplyDelete
  3. கவிதைவடிவில் அழகா தெளிவா உங்க கருத்தை சொல்லி இருக்கீங்க. தேர்தல் முடிஞ்சதும் தெரிஞ்சுடுமே உண்மை.

    ReplyDelete
  4. நல்ல கருத்தை அழகாகவே சொல்லிருக்கீங்க

    ReplyDelete
  5. \\\துக்கம் போக்கிட அரசுகளே-இருதூணாய் விளங்கும் அரசுகளேமக்கள் குரலை மதிப்பீரே-உடன் மகிழ்ந்து போற்றி குதிப்பாரே!\\\ இது நடக்கும் என நம்புவோம் ...பாடல் இயற்றல் மிகவும் அருமை !

    ReplyDelete
  6. வெற்றி நிச்சயம் புலவரே.....

    ReplyDelete
  7. சாட்டையடி குடுத்துருக்கீங்க....!

    ReplyDelete
  8. தேர்தல் முடிந்தால் தெரிந்துவிடும்-மிக
    தெளிவாய் அனைத்தும் புரிந்துவிடும்//

    பொய்மையின் சாயம் வெளுத்துவிடும்.
    வெளுத்ததும் உண்மையும் விளங்கிவிடும்..

    தேர்தல் பாடல் மிக அருமை - இதில்
    அடங்கிகிடக்குது பல உண்மை..

    ReplyDelete
  9. தேர்தல் பாடல் அருமை.
    மனதுக்குத் தேறுதல் அளிப்பதாக உள்ளது.

    ReplyDelete
  10. ஒன்றுபட்ட மக்கள் போராட்டங்கள் தோற்றதில்லை. பாதிப்பு ஏற்பட்டால் அதன் தாக்கம் தமிழகத்தை மட்டுமன்றி இலங்கையையும்தான் பாதிக்கும். நாமும் தொடர்ந்து ஒன்றுபட்டு தமிழகமக்களிற்காக குரல்கொடுப்போம்.

    ReplyDelete
  11. வருது வருது ரெட்டைமாட்டு வண்டி
    அப்படின்னு ஒரு முப்பது வருஷம் முன்னால
    பாட்டு போட்டதுபோல இருக்கு புலவரே...

    தேர்தலுக்கு பின்னர் தெரியும் உண்மை முகம்
    சத்தியமான வார்த்தை. தெரியும்.. தெரிய வேண்டும்..

    சாட்டையடிக் கவிதை.

    ReplyDelete
  12. ////மக்கள் அச்சம் ஒன்றேதான்-போர்
    மீளவும் காரணம் இன்றேதான்
    தக்கதோர் முடிபு காண்பீரே-அதை
    தணித்திட உறுதி பூண்பீரே
    துக்கம் போக்கிட அரசுகளே-இரு
    தூணாய் விளங்கும் அரசுகளே
    மக்கள் குரலை மதிப்பீரே-உடன்
    மகிழ்ந்து போற்றி குதிப்பாரே!/////

    நல்ல வரிகள் கவிதை அழகு

    ReplyDelete
  13. suryajeeva said

    உண்மை தோழரை உண்மை!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  14. suryajeeva said..

    பாராட்டுக்கு நன்றி!

    y புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  15. Lakshmi said...

    பாராட்டுக்கு நன்றி சகோதரி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  16. வைரை சதிஷ் said..

    நன்றி மகனே!

    படிப்பு தொடரட்டும்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  17. koodal bala said.

    நன்றி பாலா!
    உடல் நலம் காக்க வேண்டுகோள்!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  18. MANO நாஞ்சில் மனோ said.

    நன்றி மனோ!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  19. MANO நாஞ்சில் மனோ said.

    பாராட்டுக்கும் நன்றி மனோ!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  20. அன்புடன் மலிக்கா said

    விரிவான கருத்துரை எழுதியுள்ள
    தங்களுக்கு நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  21. வை.கோபாலகிருஷ்ணன் said.

    தங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  22. அம்பலத்தார் said.


    தங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  23. மகேந்திரன் said..


    தங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  24. K.s.s.Rajh said..

    தங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  25. நண்டு @நொரண்டு -ஈரோடு said.

    தங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  26. //துக்கம் போக்கிட அரசுகளே-இரு
    தூணாய் விளங்கும் அரசுகளே
    மக்கள் குரலை மதிப்பீரே-உடன்
    மகிழ்ந்து போற்றி குதிப்பாரே!//

    அரசின் செவிப்பறையை இக்கவிப்பறை கிழிக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம். கவிதை மிக நன்று ஐயா.

    ReplyDelete
  27. உய்யும் வழியே தெரியவில்லை-இந்த
    உண்மை பலருக்கும் புரியவில்லை


    புரியவைக்கும் அருமையான கவிதைக்கு பாராட்டுக்கள்>

    ReplyDelete
  28. செய்யும் எண்ணம் அரசுக்கே-ஏனோ
    சிறிதும் இருக்குமா என்றேதான்
    ஐயம் என்னுள் எழுகிறதே!///அருமையாகச் சொலியிருக்கிறீர்கள் ஐயா!

    ReplyDelete
  29. அவர்கள் நொடித்துப் போன ஒன்றை அடி மாட்டு விலைக்கு வாங்கி தமிழை விற்றுப் பிழைக்க சொல்லிக் கொடுத்தார்களோ?///வணக்கம் ஐயா!மேலே ஒரு பத்தி எழுதியிருக்கிறேன்.அதில் எந்த இடங்களில் சேர்த்து எழுத வேண்டும்,எந்த இடங்களில் பிரித்து எழுத வேண்டுமென்று கொஞ்சம் சரி பார்த்து சொல்ல முடியுமா?நன்றி!

    ReplyDelete
  30. கீதா said...

    சகோதரி!

    தங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  31. இராஜராஜேஸ்வரி said.

    சகோதரி!

    தங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  32. Yoga.s.FR said.

    செய்யும் எண்ணம் அரசுக்கே-ஏனோ
    சிறிதும் இருக்குமா என்றேதான்
    ஐயம் என்னுள் எழுகிறதே!///


    செய்யு மெண்ண மரசுக்கே-ஏனோ
    சிறிது மிருக்குமா என்றேதான்
    ஐய மென்னு ளெழுகிறதே!


    ஐயா!

    தங்கள் வினா ஐய வினாவா அல்லது
    என்னை அறியும் வினாவா நான் அறியேன்
    ஐயா

    தங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  33. உண்மையிலேயே ஐயம் தானய்யா!நேற்று ஒரு பதிவுக்கு கருத்துரைத்திருந்தேன்.(பார்க்க;வெளங்காதவன் பதிவு:"தமிழ் மணத்துக்கு ஓர் கடிதம்")அதற்கு,ஒருவர் குறை சொன்னதை தான் இங்கே குறிப்பிட்டேன்.சந்தேகம் உங்கள் மீதல்ல என் மீது!

    ReplyDelete
  34. ஐயா...வணக்கம் சுகம்தானே !

    தவறவிட்ட கவிதைகளைப் படித்துவிட்டேன்.அத்தனையும் மனதின் ஆவேசம் !

    ReplyDelete
  35. மக்கள் அச்சம் ஒன்றேதான்-போர்
    மீளவும் காரணம் இன்றேதான்
    தக்கதோர் முடிபு காண்பீரே-அதை
    தணித்திட உறுதி பூண்பீரே
    துக்கம் போக்கிட அரசுகளே-இரு
    தூணாய் விளங்கும் அரசுகளே
    மக்கள் குரலை மதிப்பீரே-உடன்
    மகிழ்ந்து போற்றி குதிப்பாரே!

    அவர்கள் மகிழ்ந்து குதிக்கின்றார்களோ இல்லையோ
    உங்கள் வீறுகொண்ட கவிதை வரிகளைக் கண்டு
    என் மனம் துள்ளிக் குதிக்கின்றது ஐயா .அருமை !..
    பாராட்டுகள் ஐயா .....என் தளத்தில் இன்றைய கவிதையுடன் நேற்று ஒரு கவிதை தலைப்பு "ஏன் இந்தக் கொலை வெறி "நேரம் கிடைத்தால் நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும் .இது என் அன்புக் கட்டளை .மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு ...

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...