புலத்தில் வாழும் தமிழருக்கும்-வேறு
புலத்தில் வாழும் தமிழருக்கும்
உளத்தில் உள்ள குறைநிறைகள்-நான்
உணர்ந்ததின் விளைவே இக்கவிதை
வளத்தில் சிறந்த யாழ்மண்ணில்—மீள
வளமொடு திகழ யாழ்தன்னில்
குளத்தில் நீரிலாத் தாமரையாய்-வன்னிக்
குடிகள் சுருளக் காண்பதுவோ
தீதோ தவறோ தெரியாதே-துயர்
தேங்கிட நெஞ்சில் புரியாதே
ஏதோ என்னுள் தோன்றுவதை-இங்கே
எழுதிக் கவிதையாய் ஊன்றியிதை
வாதோ செய்திட தரவில்லை-பிடி
வாதமும் பிடித்திட வரவில்லை
மோதா வகையில் உடன்கூடி-பேசி
முடிவை எடுப்பீர் நலன்நாடி
வெளிப்படை யாக எழுதிவிட-நான்
விரும்ப வில்லை பழுதுபட
களிப்பிலா மக்கள் வன்னியிலே-உடன்
காத்தவர் பெற்றிட நன்னிலையே
அளிப்பதே அனைவரின் முதற்கடனே-என
ஆவன செய்வோம் நாமுடனே
தெளிவுற ஒன்றாய் கூடுங்கள்-என்ன
தேவையோ அதனைத் தேடுங்கள்
ஒன்று பட்டால் வாழ்வுண்டே-நீர்
உணர்ந்து செய்வீர் இத்தொண்டே
நன்று இச்செயல் நடக்கட்டும்-அதனால்
நாட்கள் சிலபல கடக்கட்டும்
இன்று தேவை எண்ணீடுவீர்-நம்
எதிரியைப் பிறகே வென்றிடுவீர்
கொன்றுத் தின்ற கொடும்பாவி-அவன்
கொடுப்பான் விரைவில் உடலாவி
புலவர் சா இராமாநுசம்
புவியெங்கிலும் பரந்துவாழும் தமிழரின் புண்பட்ட மனதின் புழுக்கத்தைக் கவிதையாய் வடித்திருக்கிறீர்கள் ஐயா!
ReplyDeleteபுலவரே, பிரிந்து கிடக்கிறோம்... ஆள்கிறார்கள், ஒன்றாய் கூடும் நேரம் விடியல் தான் அனைவர் வாழ்விலும்...
ReplyDeleteவலையுலகில் பரவிக் கிடக்கும் யாழ்த் தமிழ்ர் ஒன்று கூடிக் குரலெழுப்பினால் அவர்களிடையே ஒருமித்த செயல் புரிய எண்ணங்களும் வழிகளும் கிடைக்கலாம். கூடவே உலகத் தமிழரும் ஒன்று கூடலாம். ஆங்காங்கே பிரிந்து நிற்பவர் வெறுமே அவலங்களை மட்டும் எண்ணி உருகுவது போதுமா.?விழிப்புணர்வு வேண்டிய மட்டும் இருக்கிறது. செயல் திட்டங்கள் தேவை என்பது என் அபிபிராயம்.
ReplyDeleteஅருமை ஐயா ,த.ம.3
ReplyDeleteஒன்று பட்டால் வாழ்வுண்டே-நீர்
ReplyDeleteஉணர்ந்து செய்வீர் இத்தொண்டே
நன்று இச்செயல் நடக்கட்டும்-அதனால்
நாட்கள் சிலபல கடக்கட்டும்/
அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
//ஒன்று பட்டால் வாழ்வுண்டே-நீர்
ReplyDeleteஉணர்ந்து செய்வீர் இத்தொண்டே//
அருமையான வரிகள். ஐயா.
பாராட்டுக்கள்.
த.ம.6
ReplyDeleteஅருமை ஐயா.
வணக்கமையா..
ReplyDeleteநானும் உங்கள் கவிதையை வாசித்தேன் என்று கூறிக்கொள்கிறேன் இதற்குமேல் கருத்து இட மனம் இடங்கொடுக்கவில்லை... பகிர்வுக்கு நன்றி ஐய்யா
////ஏதோ என்னுள் தோன்றுவதை-இங்கே
ReplyDeleteஎழுதிக் கவிதையாய் ஊன்றியிதை/////
தங்கள் கைளிலல்லவா பேனா... என்றும் தங்கள் வரிகளுக்கு தனியிடம் ஐயா...
கொன்றுத் தின்ற கொடும்பாவி-அவன்
ReplyDeleteகொடுப்பான் விரைவில் உடலாவி...
Amen.
அருமை ஐயா...
புலனுருக்கும்
ReplyDeleteமுத்தான கவிதை ஐயா.
வணக்கம் ஐயா உங்கள் அன்புக்கும் கரிசனைக்கும் நன்றிகள் எண்களின் ஏக்கம் உங்களின் கவிதை
ReplyDeleteமனசு கனக்குது
கண்கள் கண்ணீரில் மிதக்குது
சொந்தங்கள் படங்களாய் தொங்குது
ஈழமண் யாரிடமோ கிடந்தது தவிக்குது
கொன்றுத் தின்ற கொடும்பாவி-அவன்
ReplyDeleteகொடுப்பான் விரைவில் உடலாவி..//
உண்மையாக நடக்கும் தருணம் இறைவன் அருள்வான்... பகிர்வுக்கு நன்றி ஐயா... த.ம 11
பாடலின் கடைசி அடி மிகவும் அருமை !
ReplyDeleteசேட்டைக்காரன் said
ReplyDeleteமனம் கனிந்த வாழ்த்துக்கள் தந்த
தங்களுக்கு நன்றி!நன்றி!
புலவர் சா இராமாநுசம்
suryajeeva said..
ReplyDeleteமனம் கனிந்த வாழ்த்துக்கள் தந்த
தங்களுக்கு நன்றி!நன்றி!
புலவர் சா இராமாநுசம்
நண்டு @நொரண்டு -ஈரோடு said
ReplyDeleteமனம் கனிந்த வாழ்த்துக்கள் தந்த
தங்களுக்கு நன்றி!நன்றி!
புலவர் சா இராமாநுசம்
சூப்பர் ஐயா
ReplyDeleteநல்ல கவிதை ஜயா
ReplyDeleteG.M Balasubramaniam said..
ReplyDelete/// வலையுலகில் பரவிக் கிடக்கும் யாழ்த் தமிழ்ர் ஒன்று கூடிக் குரலெழுப்பினால் அவர்களிடையே ஒருமித்த செயல் புரிய எண்ணங்களும் வழிகளும் கிடைக்கலாம். கூடவே உலகத் தமிழரும் ஒன்று கூடலாம். ஆங்காங்கே பிரிந்து நிற்பவர் வெறுமே அவலங்களை மட்டும் எண்ணி உருகுவது போதுமா.?விழிப்புணர்வு வேண்டிய மட்டும் இருக்கிறது. செயல் திட்டங்கள் தேவை என்பது என் அபிபிராயம்.///
ஐயா!
தாங்கள் எழுதியுள்ள கருத்துக்களே
என் கவிதையின் அடிப்படைக் கருவாகும்
தனி ஈழம் தான் குறிக்கோள் என்பதிலோ
தவறு செய்தவன் தண்டணைப் பெற வேண்டு
மென்பதிலோ யாருக்கும் மாறுபாடு இல்லை
ஆனால் முதற் பணியாக பாதிக்கப்பட்டு இன்னும்
அவதிப்பட்டுக் கொண்டிருக்கிற மக்களுக்கு
மறு வாழ்வுத் தரவேண்டியது அசியம் மட்டுமல்ல
அவசரம் என்பதே என்கருத்து
வலையுலகில் பெரும்பாண்மை யாக உள்ள
( புலத்திலும் புலம் பெயர்ந்தும்)வாழ்கின்ற. ஈழப் பெருமக்களையும் ஒன்று கூட அவர்களோடு, தமிழக
மக்களாகிய நாமும் இணைந்து செயல்பட
வேண்டும் என்பதே என்னுடைய ஆசை!
இதில் யாரையும் குறை சொல்வதாக
இருபாலரும் அருள் கூர்ந்து எண்ண வேண்டாமென
மிகமிகத் தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன்
புலவர் சா இராமாநுசம்
M.R said..
ReplyDeleteமனம் கனிந்த வாழ்த்துக்கள் தந்த
தங்களுக்கு நன்றி!நன்றி!
புலவர் சா இராமாநுசம்
இராஜராஜேஸ்வரி said.
ReplyDeleteமனம் கனிந்த வாழ்த்துக்கள் தந்த
தங்களுக்கு நன்றி!நன்றி!
புலவர் சா இராமாநுசம்
வை.கோபாலகிருஷ்ணன் said...
ReplyDeleteமனம் கனிந்த வாழ்த்துக்கள் தந்த
தங்களுக்கு நன்றி!நன்றி!
புலவர் சா இராமாநுசம்
விக்கியுலகம் said.
ReplyDeleteமனம் கனிந்த வாழ்த்துக்கள் தந்த
தங்களுக்கு நன்றி!நன்றி!
புலவர் சா இராமாநுசம்
♔ம.தி.சுதா♔ said
ReplyDeleteமனம் கனிந்த வாழ்த்துக்கள் தந்த
தங்களுக்கு நன்றி!நன்றி!
புலவர் சா இராமாநுசம்
ரெவெரி said.
ReplyDeleteமனம் கனிந்த வாழ்த்துக்கள் தந்த
தங்களுக்கு நன்றி!நன்றி!
புலவர் சா இராமாநுசம்
மகேந்திரன் said..
ReplyDeleteமனம் கனிந்த வாழ்த்துக்கள் தந்த
தங்களுக்கு நன்றி!நன்றி!
புலவர் சா இராமாநுசம்
கவி அழகன் said..
ReplyDeleteமனம் கனிந்த வாழ்த்துக்கள் தந்த
தங்களுக்கு நன்றி!நன்றி!
புலவர் சா இராமாநுசம்
காட்டான் said...
ReplyDelete// நானும் உங்கள் கவிதையை வாசித்தேன் என்று கூறிக்கொள்கிறேன் இதற்குமேல் கருத்து இட மனம் இடங்கொடுக்கவில்லை... பகிர்வுக்கு நன்றி ஐய்யா//
ஐயா காட்டான் அவர்களே!
மனம் இடங்கொடுக்கவில்லை என்ற போதே
எனக்குப் புரிகிறது அது நிறையல்ல அது குறை! என்பது
நான் ஏன் இத்தகைய கவிதையை
எழுதினேன் என்பது தாங்கள் அறியாததா..
தாங்களும் தினம் பல வலகளைப் படிப்பவர் ஆயிற்றே
ஆனால் ஒன்றை மட்டும் இங்கே குறிப்பிட
விரும்புகிறேன் நான எழுதியுள்ள கவிதைகளில்
ஈழம் பற்றியே எழுதியவை எண்பதிற்கும்
மேற்பட்டதே ஆகும்
மேலும் மேலே ஐயா பாலசுப்பிரமணியம் அர்களுக்கு எழுதி யுள்ளதையும் படிக்க வேண்டுகிறேன்
புலவர் சா இராமாநுசம்
மாய உலகம் said..
ReplyDeleteமனம் கனிந்த வாழ்த்துக்கள் தந்த
தங்களுக்கு நன்றி!நன்றி!
புலவர் சா இராமாநுசம்
koodal bala said...
ReplyDeleteமனம் கனிந்த வாழ்த்துக்கள் தந்த
தங்களுக்கு நன்றி!நன்றி!
புலவர் சா இராமாநுசம்
வைரை சதிஷ் said...
ReplyDeleteமனம் கனிந்த வாழ்த்துக்கள் தந்த
தங்களுக்கு நன்றி!நன்றி!
புலவர் சா இராமாநுசம்
K.s.s.Rajh said..
ReplyDeleteமனம் கனிந்த வாழ்த்துக்கள் தந்த
தங்களுக்கு நன்றி!நன்றி!
புலவர் சா இராமாநுசம்
ஒன்று பட்டால் வாழ்வுண்டே-நீர்
ReplyDeleteஉணர்ந்து செய்வீர் இத்தொண்டே
நன்று இச்செயல் நடக்கட்டும்-அதனால்
நாட்கள் சிலபல கடக்கட்டும்
இன்று தேவை எண்ணீடுவீர்-நம்
எதிரியைப் பிறகே வென்றிடுவீர்
கொன்றுத் தின்ற கொடும்பாவி-அவன்
கொடுப்பான் விரைவில் உடலாவி//
சரியாக சொன்னீர்கள் புலவரே.....
//இன்றைய தேவை எண்ணீடுவீர்-நம்
ReplyDeleteஎதிரியைப் பிறகே வென்றிடுவீர்//
ஒன்று படுதலே இன்றைய அவசியத் தேவை.
ஆண்டாண்டு காலமாய் துண்டு பட்டே குன்றி போய்க்கொண்டிருக்கும் நம்மினத்தை ஒன்றுகூட அறிவுறுத்தும் உங்களின் பாங்கே பாங்கு!
அருமையான கவிதை ஐயா ..
ReplyDelete