Monday, October 10, 2011

கடிகாரம்


       

 சுற்றும் உலகம் தன்னோடு-முள்
   சுற்றி வருமே என்னோடு
 சற்றும் நேரம் தவறாமல்-கதிர்
   சாய இரவும் வாராமல்
இற்றை வரையில இருந்திலவே-நேரம்
   எதுவென மனிதர் அறிந்திடவே
ஒற்றைக் கையில் கட்டிடுவார்-வீட்டில்
  உயர சுவற்றில மாட்டிடுவார்

ஆமாம் என்பெயர் கடிகாரம்-மக்கள்
  அடிக்கடி பார்க்க மணிநேரம்
தாமத மாகா அலுவலகம்-அவர்
   தடயின்றி செல்ல இவ்வுலகம்
தாமே தம்மை சுற்றவிடும்-ஆனால்
   தடைபட என்விசை கெட்டுவிடும்
நாமா காரணம் அவர் கோபம்-ஏனோ
   நம்மிடம் வருவது பரிதாபம்

எத்தனை வகையில் என்னுருவம்-கால
   இயற்கையில் மாற பலபருவம்
அத்தனை நிலைக்கும் ஏற்றபடி-எம்மை
   அழகாய் அமைத்துளார் மற்றபடி
சத்தம் காட்டுவார் சிலபேரே-ஆனால்
   சாந்தமாய் இருப்பார் பலபேரே
புத்தகம் போடலாம் எம்பெருமை-அறிய
   போதுமே காலத்ததின் தம்அருமை

வீணாய் காலத்தை போக்காதீர்-பின்
  வேதனை விளைந்திட ஆக்காதீர்
போனால் பொருளும் திரும்பிவரும்-வந்து
  போனக் காலமா திரும்பிவரும்
காணார் வாழ்வில் முன்னேற்றம்-என
  கண்டும் தெளியார் பின்,ஏற்றம்
பூணார் என்றுமே ஏமாற்றம்-இதை
   புரிந்தவர் வாழ்வில் வருமாற்றம்
     
         புலவர் சா இராமாநுசம்
 
     

63 comments:

  1. வணக்கம்!எதுகை மோனையோடு நான்கு வரிகள் எழுதினால் கவிதை என்று நினைத்துக் கொள்ளும் இந்த காலத்தில் மரபுக் கவிதைகள் படைக்கும் தங்களுக்கு நன்றி!

    ReplyDelete
  2. ///எத்தனை வகையில் என்னுருவம்-கால
    இயற்கையில் மாற பலபருவம்
    அத்தனை நிலைக்கும் ஏற்றபடி///

    உணர்வுகள் என்பது மனிதருக்கு மட்டுமல்லவே அருமையாகச் சொல்லியுள்ளிர்கள்.. நன்றி ஐயா..

    ReplyDelete
  3. காலம் கண் போன்றது என்பதை கவிதையில் கலக்கலாக சொல்லி கலக்கிவிட்டீர்கள் புலவர் ஐயா.

    ReplyDelete
  4. காலத்தின் அருமையை உணத்துகிறது...

    அழகிய கவிதை

    ReplyDelete
  5. நன்றாக புரியும் விதமாய் அமைவது தான் கவிதை என்பது என் எண்ணம்... ஆனால் ஏனோ நிறைய பேர் உங்களை போல் எழுதுவதில்லை...

    ReplyDelete
  6. காலத்தைக்காட்டும் கடிகாரத்தை வைத்து அழகான கவிதை சூப்பர் ஜயா

    ReplyDelete
  7. தி.தமிழ் இளங்கோ said.

    மனங்கனிந்த தங்கள் பார‍ட்டுக்கு
    மிக்க நன்றி சகோ!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  8. ♔ம.தி.சுதா♔ said


    மனங்கனிந்த தங்கள் பார‍ட்டுக்கு
    மிக்க நன்றி சகோ!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  9. மாய உலகம் said.

    மனங்கனிந்த தங்கள் பார‍ட்டுக்கு
    மிக்க நன்றி சகோ!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  10. கவிதை வீதி... // சௌந்தர் // said..

    மனங்கனிந்த தங்கள் பார‍ட்டுக்கு
    மிக்க நன்றி சகோ!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  11. suryajeeva said.

    மனங்கனிந்த தங்கள் பார‍ட்டுக்கு
    மிக்க நன்றி சகோ!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  12. K.s.s.Rajh said..

    மனங்கனிந்த தங்கள் பார‍ட்டுக்கு
    மிக்க நன்றி சகோ!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  13. பூமியும் சுற்றுது, கடிகாரமும் சுற்றுகிறது, அருமையா இருக்கு புலவரே வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  14. வீணாய் காலத்தை போக்காதீர்-பின்
    வேதனை விளைந்திட ஆக்காதீர்
    போனால் பொருளும் திரும்பிவரும்-வந்து
    போனக் காலமா திரும்பிவரும்.//

    வரவே வராது.

    மிக அருமையாக எழுதியுள்ளீர்கள் புலவர் அவர்களே.
    வாழ்த்துகள்

    ReplyDelete
  15. வீணாய் காலத்தை போக்காதீர்-பின்
    வேதனை விளைந்திட ஆக்காதீர்
    போனால் பொருளும் திரும்பிவரும்-வந்து
    போனக் காலமா திரும்பிவரும்.//

    வரவே வராது.

    மிக அருமையாக எழுதியுள்ளீர்கள் புலவர் அவர்களே.
    வாழ்த்துகள்

    ReplyDelete
  16. //வீணாய் காலத்தை போக்காதீர்-பின்
    வேதனை விளைந்திட ஆக்காதீர்
    போனால் பொருளும் திரும்பிவரும்-வந்து
    போனக் காலமா திரும்பிவரும்//

    மிகவும் அழகான வரிகள். அழகிய கவிதை.
    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். தமிழ்மணம் 5 vgk

    ReplyDelete
  17. வீணாய் காலத்தை போக்காதீர்-பின்
    வேதனை விளைந்திட ஆக்காதீர்
    போனால் பொருளும் திரும்பிவரும்-வந்து
    போனக் காலமா திரும்பிவரும்.

    அருமையான வரிகள் ஐயா

    ReplyDelete
  18. புரிந்தவர் வாழ்வில் வருமாற்றம்


    மிக அழகாகச் சொன்னீர்கள் புலவரே..
    மனதில் பதிந்து வைத்துக்கொள்ளவேண்டிய பதிவு..

    அருமை..

    ReplyDelete
  19. அழகு தமிழில் ஒரு அற்ப்புதமான கவிதை அசத்தல்.,

    ReplyDelete
  20. MANO நாஞ்சில் மனோ said

    மனங்கனிந்த தங்கள் பார‍ட்டுக்கு
    மிக்க நன்றி சகோ!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  21. அன்புடன் மலிக்கா said

    மனங்கனிந்த தங்கள் பார‍ட்டுக்கு
    மிக்க நன்றி சகோ!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  22. //வீணாய் காலத்தை போக்காதீர்-பின்
    வேதனை விளைந்திட ஆக்காதீர்//

    அதே தான் , ஐயா!

    ReplyDelete
  23. வை.கோபாலகிருஷ்ணன் said.

    மனங்கனிந்த தங்கள் பார‍ட்டுக்கு
    மிக்க நன்றி சகோ!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  24. நண்டு @நொரண்டு -ஈரோடு said

    மனங்கனிந்த தங்கள் பார‍ட்டுக்கு
    மிக்க நன்றி சகோ!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  25. கவி அழகன் said..

    மனங்கனிந்த தங்கள் பார‍ட்டுக்கு
    மிக்க நன்றி சகோ!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  26. முனைவர்.இரா.குணசீலன் said

    மனங்கனிந்த தங்கள் பார‍ட்டுக்கு
    மிக்க நன்றி சகோ!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  27. வேடந்தாங்கல் - கருன் *! said.

    மனங்கனிந்த தங்கள் பார‍ட்டுக்கு
    மிக்க நன்றி சகோ!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  28. சத்ரியன் said

    மனங்கனிந்த தங்கள் பார‍ட்டுக்கு
    மிக்க நன்றி சகோ!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  29. வீணாய் காலத்தை போக்காதீர்-பின்
    வேதனை விளைந்திட ஆக்காதீர்
    போனால் பொருளும் திரும்பிவரும்-வந்து
    போனக் காலமா திரும்பிவரும்
    காணார் வாழ்வில் முன்னேற்றம்-என
    கண்டும் தெளியார் பின்,ஏற்றம்
    பூணார் என்றுமே ஏமாற்றம்-இதை
    புரிந்தவர் வாழ்வில் வருமாற்றம்//
    சிறந்த பதிவு நல்ல எண்ணங்களை உங்கள் போன்றோரிடம் இருந்துதான் நாங்கள் கற்று கொள்ள வேண்டும் சிறந்த தலைமைபன்பை உருவாக்குகிறீர் வணகுகிறேன்

    ReplyDelete
  30. மாலதி said

    நன்றி மகளே!
    படிப்பு எப்படி போகுது..?

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  31. கடிகாரம் பற்றிய கவிதை. காலம் முக்கியமானது என்பதை அழகாக சொல்லி இருக்கிறீர்கள்

    ReplyDelete
  32. தமிழ்வாசி - Prakash said...

    மனங்கனிந்த தங்கள் பார‍ட்டுக்கு
    மிக்க நன்றி சகோ!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  33. காலத்தின் அருமையை அருமையாகச் சொன்னீர்கள்.

    ReplyDelete
  34. காலத்தின் அருமையை சொல்லும் அழகான கவிதை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  35. //வீணாய் காலத்தை போக்காதீர்-பின்
    வேதனை விளைந்திட ஆக்காதீர்//

    நல்ல கருத்து புலவரே... நல்ல கவிதை பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  36. காலத்தின் அருமையை உணத்தும்

    அழகான கவிதை

    ReplyDelete
  37. உங்கள் கவிதைகள் மிக இனிமை. குழந்தைகளுக்குப் பாடல் போல சொல்லிக் கொடுக்கலாம்

    ReplyDelete
  38. காலத்தின் அருமையை உணத்தும் அழகான கவிதை... கலக்கிவிட்டீர்கள் புலவர் ஐயா...

    ReplyDelete
  39. காலத்தின் பெருமையுணர்த்தும் கடிகாரப்பாடல் மிக அருமை. வாசிக்கும்போதே எழுத்தும் கருத்தும் ஈர்த்து ரசிக்கச்செய்கின்றன. பாராட்டுக்கள் ஐயா.

    ReplyDelete
  40. This comment has been removed by the author.

    ReplyDelete
  41. அண்ணே அழகிய கவிதை

    ReplyDelete
  42. This comment has been removed by the author.

    ReplyDelete
  43. கடிகாரத்தை பற்றி கவிதை மழையில் பொழிந்து விட்டு கவிதை வரிகளிலேயே அருமையான அறவுரையும் அருமை.வாழ்த்துக்கள்.நேரம் கிட்டும் பொழுது
    என் பக்கமும் வந்து பார்த்து தங்கள் மேலான‌ கருத்தினை பதிவிடுங்கள்

    ReplyDelete
  44. வீணாய் காலத்தை போக்காதீர்-பின்
    வேதனை விளைந்திட ஆக்காதீர்
    போனால் பொருளும் திரும்பிவரும்-வந்து
    போனக் காலமா திரும்பிவரும்

    கடிகாரக் கவிதை
    காலத்தின் மேன்மைதனை
    பாங்குடனே தெரிவித்து
    பன்முகமாய் விளங்கியது.
    புலவர்க்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  45. காலம் காட்டும் கடிகாரம்
    கடமையை உணர்த்தும் கடிகாரம்
    காலத்தின் பெருமையை உணர்த்திடும்
    கடிகாரம் தன்னை அறிந்திடவே
    ஐயா கவிதை படித்திடுங்கள்
    அழகாய் உட்னே கருத்திடுங்கள்

    அழகாய் கவிதை படித்திட்டேன்
    உடனே தமிழ்மணம் வாக்கிட்டேன்

    ReplyDelete
  46. அன்புநிறை புலவரே ...
    கடந்த ஒருவாரம் கொஞ்சம் வேலைப்பளு காரணமாக வரமுடியவில்லை..
    பொறுத்தருள்க...

    உணர்வுள்ள கவிதை புலவரே..

    ReplyDelete
  47. சென்னை பித்தன் said.

    நன்றி ஐயா!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  48. Lakshmi said.

    நன்றி சகோதரி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  49. வெங்கட் நாகராஜ் said

    மனங்கனிந்த தங்கள் பார‍ட்டுக்கு
    மிக்க நன்றி சகோ!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  50. வைரை சதிஷ் said..

    நன்றி அன்பரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  51. கலாநேசன் said.

    மனங்கனிந்த தங்கள் பார‍ட்டுக்கு
    மிக்க நன்றி சகோ!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  52. கீதா said

    மனங்கனிந்த தங்கள் பார‍ட்டுக்கு
    மிக்க நன்றி சகோதரி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  53. போனால் பொருளும் திரும்பிவரும்-வந்து
    போனக் காலமா திரும்பிவரும்

    காலமும் கடலையும் மீளாதே
    சென்றதினி திரும்பாதே
    அருமையான ஆக்கம்.
    பாராட்டுக்கள் ஐயா

    ReplyDelete
  54. விக்கியுலகம் said

    நன்றி சகோ!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  55. ஸாதிகா said.

    மனங்கனிந்த தங்கள் பார‍ட்டுக்கு
    மிக்க நன்றி!
    விரைவில் வருகிறேன்


    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  56. வணக்கமையா.. நாங்க நாள் முழுதும் எதை பார்து பார்த்து ஓடுகிறோமோ அதைப்பற்றி எழுதி இருக்கீங்க.. வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  57. கா ந கல்யாணசுந்தரம் said

    // கடிகாரக் கவிதை
    காலத்தின் மேன்மைதனை
    பாங்குடனே தெரிவித்து
    பன்முகமாய் விளங்கியது.
    புலவர்க்கு பாராட்டுகள். //


    கவிதையிலே வாழ்த்திட்டீர்
    கலியான சுந்தரனார்
    செவிதன்னில் இனிப்பிட்டீர்
    செந்தமிழை வளர்த்திட்டீர்
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  58. M.R said

    // காலம் காட்டும் கடிகாரம்
    கடமையை உணர்த்தும் கடிகாரம்
    காலத்தின் பெருமையை உணர்த்திடும்
    கடிகாரம் தன்னை அறிந்திடவே
    ஐயா கவிதை படித்திடுங்கள்
    அழகாய் உட்னே கருத்திடுங்கள்//

    அழகாய் கவிதை படித்திட்டேன்
    ஆகா என்றிதை வடித்திட்டேன்
    எழுவாய் இன்றேல் பயனில்லை
    என்றே நானும் ஆக்கிட்டேன்
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  59. இராஜராஜேஸ்வரி said


    // காலமும் கடலையும் மீளாதே
    சென்றதினி திரும்பாதே
    அருமையான ஆக்கம்.
    பாராட்டுக்கள் ஐயா //


    விரிவாக கருத்துரை வழங்கினீர்

    மனங்கனிந்த தங்கள் பார‍ட்டுக்கு
    மிக்க நன்றி!



    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  60. மகேந்திரன் said

    என்ன மகி!
    தங்களை நான் அறியாதவனா
    என்றும் எப் பொழுதும் தவறாக
    எடுத்துக் கொள்ள இடமே இல்லை
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  61. காட்டான் said

    மனங்கனிந்த தங்கள் பார‍ட்டுக்கு
    மிக்க நன்றி சகோ!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  62. வாழ்க்கையின் தத்துவங்களை அருமையாக புரியவைக்கும் தங்கள் கவிவரிகள் அருமை ஐயா.

    ReplyDelete